உள்ளடக்கத்துக்குச் செல்

தாவ் (துகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவ்
Tau
பொதிவுஅடிப்படைத் துகள்
புள்ளியியல்பெர்மியான்
தலைமுறைமூன்றாம்
இடைவினைகள்ஈர்ப்பு விசை, மின்காந்தவியல், வலிகுறை இடைவினை
குறியீடுτ
எதிர்த்துகள்எதிர்த்தாவ் (τ+)
கண்டுபிடிப்புமார்த்தின் லூயிஸ் பேர்லும் மற்றவர்களும் (1975) [1][2]
திணிவு3.16754(21)×10−27 kg[3]
1776.86(12) MeV/c2[4][5]
சராசரி வாழ்வுக்காலம்2.903(5)×10−13 s[5]
மின்னூட்டம்−1 e[5]
வண்ண ஏற்றம்எதுவுமில்லை
சுழற்சி1/2 ħ[5]
வலுவற்ற சமதற்சுழற்சிLH: −1/2, RH: 0
வலுவற்ற மீஉயர் ஊட்டம்LH: −1, RH: −2

தாவ் (tau, τ என்ற கிரேக்க எழுத்தால் தரப்படும்) அல்லது டாவ் என்பது எதிர்மின்னியைப் போன்ற ஒரு அடிப்படைத் துகள் ஆகும். இது எதிர்மறையான மின்னேற்றத்தையும் 1/2 சுழற்சியையும் கொண்டுள்ளது. எதிர்மின்னி, மியூவான் மற்றும் மூன்று நியூட்ரினோக்களைப் போல டாவும் ஒரு மென்மி (லெப்டன்) ஆகும். அத்தோடு அரை முழுவெண் சுழற்சியைக் கொண்ட அனைத்து அடிப்படைத் துகள்களைப் போலவே, டாவும் எதிர் மின்னேற்றம் ஆனால் சமமான நிறையையும் சுழற்சியையும் கொண்ட எதிர்த்துகளைக் கொண்டுள்ளது. டாவின் எதிர்த் துகள் "எதிர்த் தாவ்" (நேர்மறை டாவ் என்றும் அழைக்கப்படுகிறது) எனப்படுகிறது. டாவ் துகள்கள் τ என்ற குறியீட்டாலும், எதிர்த் தாவ் τ எனும் குறியீட்டாலும் குறிக்கப்படுகின்றன.

டாவ் லெப்டான்களின் ஆயுட்காலம் 2.9 ×10−13 s ஆகும். இவற்றின் நிறை 1776.9 MeV/c2 ஆகும். இது மியூவான்களின் 105.66 MeV-c2 நிறையையும் எதிர்மின்னிகளின் 0.0.511 MeV நிறையையும் விட பெரியதாகும். இவற்றின் இடைவினைகள் எதிர்மின்னிகளை ஒத்திருப்பதால் தாவ் துகள்களை எதிர்மின்னிகளின் மிகவும் கனமான பதிப்பாகக் கருதலாம். இவற்றின் அதிக நிறை காரணமாக, டாவ் துகள்கள் எதிர்மின்னிகளைப் போல அதிக பிரேம்ஸ்ட்ராலங்கினை (தடுப்புக் கதிர்வீச்சு) வெளியிடுவதில்லை. இதன் விளைவாக அவை எதிர்மின்னிகளை விட அதிக ஊடுருவும் திறன் கொண்டவை.

இதனது குறுகிய ஆயுட்காலம் காரணமாக, டாவின் வீச்சமானது இதன் சிதைவு நீளத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இச்சிதைவு நீளம் பிரேம்ஸ்ட்ராலங்கினை காணமுடியாத அளவிலுள்ளது. இது அதியுயர் வேகத்தையும் சக்தியையும் (பெட்டா இலத்திரன்வோல்ட் அளவுகளுக்கு மேல்) கொண்டிருக்கும் போது மட்டுமே (கால விரிவு காரணமாக இதனது குறுகிய பாதை நீளம் அதிகரிப்பதால்) இதன் அதியுயர் ஊடுருவும் வலுவை அவதானிக்கலாம்.[6]

மற்றைய ஏற்றப்பட்ட லெப்டான்களைப் போலவே, டாவுக்கும் அதனோடு தொடர்புள்ள டாவ் நியூட்ரினோ (ν
τ
என்பதால் குறிக்கப்படும்) உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Perl, M.L.; Abrams, G.; Boyarski, A.; Breidenbach, M.; Briggs, D.; Bulos, F.; Chinowsky, W.; Dakin, J. et al. (1975). "Evidence for anomalous lepton production in e+e annihilation". Physical Review Letters 35 (22): 1489. doi:10.1103/PhysRevLett.35.1489. Bibcode: 1975PhRvL..35.1489P. 
  2. Okun, L.B. (1980). Leptons and Quarks. Translated by Kisin, V.I. எல்செவியர். p. 103. ISBN 978-0444869241.
  3. "2022 CODATA Value: tau mass". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. May 2024. Retrieved 2024-05-18.
  4. "2022 CODATA Value: tau energy equivalent". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. May 2024. Retrieved 2024-05-18.
  5. 5.0 5.1 5.2 5.3 Tanabashi, M. (2018). "Review of Particle Physics". Physical Review D 98 (3): 030001. doi:10.1103/PhysRevD.98.030001. Bibcode: 2018PhRvD..98c0001T. http://pdglive.lbl.gov/Particle.action?node=S035. 
  6. Fargion, D.; de Sanctis Lucentini, P.G.; de Santis, M.; Grossi, M. (2004). "Tau air showers from Earth". The Astrophysical Journal 613 (2): 1285–1301. doi:10.1086/423124. Bibcode: 2004ApJ...613.1285F. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவ்_(துகள்)&oldid=4185784" இலிருந்து மீள்விக்கப்பட்டது