தாவுத் அலி மிர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவுத் அலி மிர்சா (Dawood Ali Mirza - பிறப்பு 23 செப்டம்பர் 1907 இறப்பு 21 ஆகஸ்ட் 1986), இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். மாநிலங்களவை உறுப்பினராக சென்னை மாகாணம் சார்பாக 1956 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

தாவுத் அலி மிர்சா 23 செப்டம்பர் 1907 இல் நவாப் ரசா அலி கான் பகதூரின் மகனாக அன்றைய சென்னை மாகாணத்தின் மசூலிப்பட்டிணத்தில் பிறந்தார். பி.ஏ படித்துள்ள இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அரசியல்[தொகு]

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 11-12-1956 முதல் 2-4-1962 வரை மாநிலங்களவையில், தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். [1]

குடும்பம்[தொகு]

தாவுத்திற்க்கு ருக்கையா மிர்சா என்கிற ஷா பேகம் என்ற மனைவி உள்ளார்.[2]

இறப்பு[தொகு]

தாவுத் 21 ஆகஸ்ட் 1986 அன்று உயிரிழந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Members of the rajya Sabha[1] மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்
  2. [2] குடும்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவுத்_அலி_மிர்சா&oldid=3302452" இலிருந்து மீள்விக்கப்பட்டது