தாவீது மற்றும் கோலியாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாவீதும் கோலியாத்தும்

தாவீது என்பவன் யூதா நாட்டைச் சேர்ந்த ஈசாய் என்பவரின் ஏழாவது மகன் ஆவான். மற்ற மூவரும் அவர்களின் தங்களின் தந்தையின் ஆடுகளை மேய்க்க் செல்வர்.தாவீதிற்கு[1] அவர் அண்ணன்களுக்கு தினமும் உணவுக் கொண்டு செல்வதுதான் பணி. சாமுவேலிடம், கர்த்தர் தாவீதிற்கு அபிஷேகம் பண்ணும்படி கூறுகிறார்.

சவுல்[தொகு]

சவுல் இஸ்ரவேலை ஆண்டுக் கொண்டிருந்த மன்னன். அவரின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரவேலுக்கும், பெலிஸ்திய தேசத்திற்கும் சண்டைத் தோன்றுகிறது. அச்சமயம், ஒரு வீரன் இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக சண்டையிட வருகிறான். அவன் பெயர் கோலியாத்[2].

கோலியாத்[தொகு]

கோலியாத் என்பவன் பெலிஸ்திய தேசத்தைச் சேர்ந்த, காத் ஊரைச் சார்ந்தவன். அவன் உயரம் 6அடியும், 3அங்குலமும் ஆகும். அவன் இஸ்ரவேல் மக்கள் முன்பாக உங்களில் ஒருவரை தன்னுடன் சண்டையிடும் வருமாறு அழைத்தான். அனைவரும் பயந்து ஒருவரும் சண்டையிட முன்வரவில்லை.

தாவீதும் கோலியாத்தும்[தொகு]

தாவீது சிறுவனாக இருப்தைக் கண்டு கோலியாத் அசட்டைப் பண்ணுகிறான். அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன் என்றுக் கூறிக், ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.

மேற்கோள்கள்

  1. "'Greatest Heroes of the Bible' David & Goliath (TV episode 1978)". imdb. பார்த்த நாள் 2011-04-28.
  2. Bodner, Keith. "David and Goliath (1 Sam 17)". Society of Biblical Literature. பார்த்த நாள் 18 February 2015.