தாவர வகைபாட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கி.பி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த டி மெட்டீரியா மெடிகாவில் இடம் பெற்றுள்ள வியன்னா டியோஸ்கொரிடேஸ்  சுவடி . இது தொன்மையான மூலிகைகள் பற்றிய தகவல்களுடன்  டியோஸ்கொரிடேஸ் என்பவரால் கி.பி. 50  முதல் 70 க்குள்ளாக எழுதப்பட்ட புத்தகம். 

தாவரங்களின்  உயிரியல் வகைபாடு  என்பது  பண்டைய கிரேக்க அறிஞர்கள் முதல் நவீன பரிணாம உயிரியலாளர்கள் வரை துறை அறிஞர்களால்    புதிய வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அறிவியல் புல வளர்ச்சியில் தாவர வகைபாடு என்பது மெதுவானவே உள்ளது மேலும்   மருத்துவ பயன்பாட்டு  விளக்கத்திற்கானதாக  மட்டுமே கருதப்பட்டது .  இதன் பிறகாக இயற்கை  அறிவியல் மற்றும் ஏரணவிய சமயம்  மூலமாக தாவர  வகைபாடு மற்றும் அதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டன. பரிணாமவியல் கொள்கை தோன்றுவதற்கு முன்னதாக கிட்டதட்ட அனைத்து வகைபாட்டு முறைமைகளும் ஸ்கேலா நேச்சுரே என்பதை அடிப்படையாகக்கொண்டே அமைக்கப்பட்டன. தொழில் ரீதியிலான தாவரவியல் என்பது 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் அதிக பயனளிக்கத்தக்க   வகைபாட்டு முறைமைகளை நோக்கி நகர்ந்தது அது மட்டுமின்றி இது பரிணாம தொடர்பின் அடிப்படையில்  சீர்மையடைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_வகைபாட்டியல்&oldid=2331998" இருந்து மீள்விக்கப்பட்டது