தாவர போசணை வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலங்குகள் போலல்லாது தாவரங்கள் இடம் பெயர்ச்சி அடையாது இதன் காரணமாக இவற்றின் போசணை முறை விலங்கினங்களில் இருந்து பெரிதும் வித்தியாசப்படுகின்றது. இரு பெரும்பிரிவாக தாவர போசணை முறைகளை உள்ளடக்கலாம்.
1. பச்சையம் உள்ள தாவரங்களில் காணப்படும் தற்போசணை முறை,
2. பச்சையமற்ற தாவரங்களில் காணப்படும் பிறபோசணை முறை

தற்போசணைத்தாவரங்கள்[தொகு]

ஒளித்தொகுப்பு (Photosynthesis) மூலம் தமக்குத்தேவையான சேதன உணவை தாமே தயாரிக்கக்கூடிய தாவரங்கள் ‘’’தற்போசணைத்தாவரங்கள்’’’ எனப்படும். பச்சையம்(குளோரபில்) உள்ள உயர் தாவர வகைகளில் இந்த முறை மூலம் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. காபனீர் ஒக்சைட்டு (CO2) ,நீர் (H2O) ஆகிய அசேதன முலக்கூறுகள் சூரிய ஒளி முன்னிலையில் பச்சையத்தில் தாவர போசணை செய்யக்கூடிய சேதனப்பதார்தமாக மாற்றப்படுகின்றது. இம் முறையின் விளைபொருளாக ஒட்சிசன் (O2) சூழழுக்கு விடுவிக்கப்படுகின்றது.

உ+ம் : உயர் தாவரம்(Angiosperms)

பிறபோசணை தாவரங்கள்[தொகு]

தமது போசணைத்தேவைக்குப் பிற மூலங்களில் தங்கியுள்ள தாவரங்கள் பிறபோசணை தாவரங்கள் எனப்படும். பச்சையம் அற்ற தாவரங்களே இப் போசணை முறையில் ஈடுபடுகின்றன. இதற்கென இத் தாவரங்கள் சில விசேட இயல்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

உ+ம் : நொதியங்கள், உறிஞ்சிகள்,பருகி

இத் தாவரங்கள் 4 வகைப்படும்
1. அழுகல் வளரிகள்
2. ஒட்டுண்ணித் தாவரங்கள்
3. ஒன்றியவாழித் தாவரங்கள்
4. பூச்சியுண்ணும் தாவரங்கள்/ஊனுண்ணும் தாவரங்கள்

அழுகல் வளரிகள் (Saprophytes)[தொகு]

இறந்து சிதைவடைந்து கொண்டிருக்கும் தாவர/விலங்கு உடல்கள் அல்லது எச்சங்கள் என்பவற்றில் வளரும் தாவரங்கள் அழுகல் வளரிகள் எ-ம். அழுகிய பொருட்களில் இருந்து தமது போசணையை பெற்றுக்கொள்கின்றன.

உ+ம் : பற்றீயாக்கள், பங்கசுக்கள்,சில அல்கா

ஒட்டுண்ணித்தாவரங்கள் (Parasites)[தொகு]

உயிருள்ள அங்கியின் அகத்தோ அல்லது புறத்தோ தங்கியிருந்து அவற்றிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றாகவோ உணவைப் பெற்றுவாழும் அங்கிகள் ஒட்டுண்ணி எ-ம். ஒட்டுண்ணிகள் தங்கி வாழ இடமளிப்பவை விருந்து வழங்கி எ-ம். இம் முறைமுலம் விருந்து வழங்கி பாதிக்கப்படலாம்.
உ+ம் : பற்றீயாக்கள், பங்கசுக்கள், சில பூக்கும் தாவரங்கள் (Angiosperms) (கஸ்குட்டா, குருவிச்சை) போன்றவை

பூக்கும்தாவரங்களின்(Angiosperms) ஒட்டுண்ணித்தாவரங்கள் இரு வகைப்படும்
1. முழு ஒட்டுண்ணித்தாவரங்கள்
2. குறை ஒட்டுண்ணித்தாவரங்கள்

முழு ஒட்டுண்ணித்தாவரங்கள்[தொகு]

தமக்குத் தேவையான முழு உணவையும், கனியுப்புக்களையும், நீரையும் ‘’’விருந்து வழங்கியில்’’’ இருந்து பெற்றுக்கொள்ளும் தாவரங்கள் முழுஒட்டுண்ணித்தாவரங்கள் எ-ம்.

உ+ம் : கஸ்குட்டா(Cuscuta)

குறை ஒட்டுண்ணித்தாவரங்கள்[தொகு]

விருந்து வழங்கியிடமிருந்து கனியுப்புக்களையும், நீரையும் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் தாவரங்கள் குறை ஒட்டுண்ணித்தாவரங்கள் எ-ம். இவை பச்சையத்தைக் கொண்டிருப்பதால் உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் உடையது.

உ+ம் : குருவிச்சை

ஒன்றியவாழித் தாவரங்கள்[தொகு]

பரஸ்பர நலன் கருதி தமது உண்வு தேவைக்காக மற்றொரு அங்கியுடன்(தாவரம் அல்லது விலங்கு) இணைந்து வாழ்ந்து வரும் தாவரங்கள் ஒன்றியவாழித் தாவரங்கள் எ-ம். இம் முறைமுலம் இவ் இரு அங்கிகளுக்குமிடையே பாதிப்பு ஏற்படாது.

பூச்சியுண்ணும் தாவரங்கள் (carnivorous plant)[தொகு]

இத் தாவரங்கள் முற்றிலும் தற்போசணைக்குரிய தாவரங்கள் ஆகும். இவை பச்சையத்தத கொண்டுள்ளன. ஆனால் இவை நைதரசனை பெற்றுக்கொள்ளமட்டுமே பூச்சிகள்,சிறுவிலங்குகளை பிடித்து உண்கின்றன. இதற்கென இவை சில விசேட உறுப்புக்களைக் கொண்டுள்ளன.

உ+ம் : நெப்பந்திசு(Nepenthes), யூற்றிக்குலேரியா(Utricularia)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_போசணை_வகைகள்&oldid=3719706" இலிருந்து மீள்விக்கப்பட்டது