தாவர புறஅமைப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவர புறஅமைப்பியல் என்பது தாவரங்களின் புறத்தோற்ற அமைப்பை பற்றி அறியும் பிரிவாகும் .[1] இது தாவர உள்ளமைப்பியலிருந்து வேறுபட்டது ஆகும். மேலும் தாவர உள்ளமைப்பியல் என்பது நுண்ணிய அளவில் உள்ளுறுப்புகளை அறிந்து கொள்ள உதவும் பிரிவாகும்.[2] ஆனால் தாவர புறஅமைப்பியல் என்பது கண்ணில் காணக்கூடிய புறப்பண்புகளின் அடிப்படையில் அடையாளம் காணக்கூடிய பிரிவாகும்.

பாதுகாப்பான உறையுடன் கூடிய மஞ்சரி 

நோக்கம் [தொகு]

அஸ்கிலிபியாஸ் சிரையாகா  - மலர்களின் கூட்டு புறத்தோற்றம் 
பைனஸ் சில்வஸ்ட்ரிஸ் மரத்தின் கிளைகளின் அமைப்பு 

புற அமைப்பியல் என்பது தாவரங்களின் உள்ளார்ந்த வளர்ச்சி, வடிவம், உருவமைப்பு மற்றும் அவற்றிற்கிடையேயான தோற்றம்  [3] மற்றும் ஒற்றுமைகளை புரிந்துகொள்ளுதல். தாவர புற அமைப்பியலில் நான்கு பெரும் ஆய்வுப்பகுதிகள் உள்ளன. அது மட்டுமின்றி இது ஏனைய உயிரியல் அறிவியற் துறைகளோடு மேற் பொருந்துவதாகவே உள்ளன.

முதலாவதாக தாவர புற அமைப்பியல் என்பது, ஒரே சிற்றினம் அல்லது வேறுபட்ட சிற்றினங்களிடையே ஒப்பீட்டு அளவிலான அமைப்பு ஒற்றுமைகள், அந்த ஒற்றுமைகள் மீதான கருத்தாக்கம் சார்ந்து புற அமைப்பியலாளர்கள் ஒப்பீட்டாய்வு செய்கிறார்கள்.   வேறுபட்ட சிற்றினங்களில் உள்ள புற அமைப்புகள் பொதுவான மரபுப்பாதையில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இவ்வாறு உள்ள நிலை அமைப்பொத்த நிலை என அழைக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக, பைன், ஓக், மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றின் இலைகள் அனைத்து பார்க்க மிகவும் மாறுபட்டதாக இருந்தாலும் சில அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் உறுப்பமைவுகளில் ஒத்து காணப்படுகின்றன. இவற்றின் ஒத்த இலையமைவு இந்த முடிவை எளிமையாக்குகிறது.

கற்றாழைத்தாவரத்தின் முட்கள், இலையின் ஒத்த அமைப்பு என்றும், இது இலை உருவாக்கத்தின், அதே அடிப்படை வளர்ச்சி நிலைகளை கொண்டுள்ளதை புற அமைப்பியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் தாவர புற அமைப்பியல் என்பது   பரிணாமம் மற்றும் தொல்தாவரவியலோடு மேற்பொருந்துவதை அறிய முடிகிறது.

இரண்டாவதாக, தாவர புற அமைப்பியல், தழை வழி (உடலம்) புற அமைப்புகள், மற்றும் இனப்பெருக்க உறுப்பு அமைப்புகள் ஆகிய இரண்டையும் உற்றுநோக்குகிறது. சத்து நீரோட்டக்குழாய் கொண்ட தாவரங்களின் தழை வழி புற உறுப்புகள் என்பது தண்டு மற்றும் இலைகளை கொண்ட தண்டு தொகுப்பு அதே போன்று வேர்த்தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.  இனப்பெருக்க உறுப்புகள் என்பது ஒவ்வொரு வகை தாவரங்களிலும் மாறுப்பட்டது. அதாவது   பூக்கள் மற்றும் விதைகள், பெரணி -வித்துக்கூடு (சோறை), மாஸ் வகைத்தாவரங்களில் வித்து பொதி உறை (காப்சூல்) ஆகியவற்றை உதாரணமாக கொள்ளப்படுகிறது. அனைத்து வகை தாவரங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இனப்பெருக்க உறுப்புகள் மீதான சமீபத்திய ஆய்வுகள் நுண்ணிய முடிவுகளை தந்துள்ளது. இதில் அனைத்துவகை தாவரங்களிலும் குறிப்பாக பாசிகளில் சந்ததி மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த   முடிவு உயிரினப்பரவல், தாவர வகைப்பாட்டியல் முறைமையியல் ஆகியவற்றோடு மேற் பொருந்துகிறது.  

மூன்றாவதாக, தாவர புற அமைப்பியல் நுண்ணிய தாவரங்கள் முதல் மிகப்பெரிய தாவரங்கள் வரை மாறுபாடுகளை ஆய்கிறது. செல்லின் நுண்ணிய புற அமைப்புகளை மின்துகள் நுண்ணோக்கியின் துணையுடனும், செல்லியலை பொறுத்தவரை, கண்ணாடி வில்லை நுண்ணோக்கி (கூட்டு நுண்ணோக்கி) துணையுடனும் ஆய்வு மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளில் இது தாவர உள்ளமைப்பியல் புலத்தோடு மேற்பொருந்துகிறது. 

நான்காவதாக, தாவர புற அமைப்பியல் என்பது தாவர வளர்ச்சியின் முறைமைகளை ஆய்கிறது. குறிப்பாக தாவர உறுப்புகளின் தோற்றம் மற்றும் முதிர்தல் பற்றியது ஆகும். விலங்குகளின் உறுப்புகளை பொறுத்தவரை அவற்றின் பிறப்பு முதல் இறப்புவரை நிலையானது. ஆனால் தாவரங்கள் வாழ்நாள் முழுவதும் புதிய திசுக்கள் மற்றும் அமைப்புகளை நிலையாக உற்பத்தி செய்கின்றன. ஒரு உயிருள்ள தாவரம் தனது வாழ்நாள் முழுவதும் கருத்திசுக்களை கொண்டது.

அழிந்த திசுக்களை மீட்கும் வல்லமை பெற்றவை தாவரங்கள். இது போன்ற நிகழ்வுகளை தாவர புற அமைப்பியல் ஆய்வு செய்கிறது. இந்நிலையில் தான் தாவர உடற்செயலியல் மற்றும் சூழ்நிலையியலோடு மேற்  பொருந்துகிறது.

குவியும்தன்மை [தொகு]

அமைவிட விளைவு [தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Raven, P. H., R. F. Evert, & S. E. Eichhorn.
  2. Evert, Ray Franklin and Esau, Katherine (2006) Esau's Plant anatomy: meristems, cells, and tissues of the plant body - their structure, function and development Wiley, Hoboken, New Jersey, page xv, ISBN 0-471-73843-3
  3. Harold C. Bold, C. J. Alexopoulos, and T. Delevoryas.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_புறஅமைப்பியல்&oldid=3646578" இருந்து மீள்விக்கப்பட்டது