தாவர திசு வளர்ப்பு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாவர திசு வளர்ப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ரோஜா

தாவர திசு வளர்ப்பு முறை (plant tissue culture) என்பது கூட்டுத் தொழிநுட்பங்களை பயன்படுத்தி நுண்ணுயிரற்ற சூழ்நிலையில் ஊட்டச்சத்து மற்றும் தேவையான சத்துக்கள் கொண்ட வளர் ஊடகத்தில் தாவரத்தின் உயிரணுக்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை வளர்ச்சியடைய செய்யும் முறையாகும். தாவர திசு வளர்ப்பு முறையில் பரவலாக தாவரங்களை அவற்றின் நகல் தாவரங்களை (clones) உற்பத்தி செய்யும் முறைக்கு நுண்பயிர்ப் பெருக்கம் (micropropagation) என அறியப்படுகிறது.

நன்மைகள்[தொகு]

பழமையான பயிர்பெருக்க முறையை விட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் தாவர திசு வளர்ப்பபு முறையில் கீழ்கண்ட நன்மைகள் உள்ளன.

  • திசு வளர்ப்பு முறையில் அவற்றின் மரபு தன்மை மாறாமல், அதிக வீரிய தன்மை மிக்க தாவரங்களை உருவாக்கலாம் [1]
  • தாய் தாவரத்தின் நற்பண்புகளான பூக்கும் திறன்,திரட்சியான கனி இன்னும் பல பண்புகளை அச்சு அசலாக இளந்தாவரத்திலும் உண்டாக்கலாம்
  • நல்ல முதிர்ச்சியான தாவரத்தை உற்பத்தி செயய்லாம்
  • உள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு பாரம்பரிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது.
  • விதை உற்பத்தி செய்ய இயலா பயிர்களை இம்முறையைப் பயன்படுத்தி அதிகளவில் உற்பத்தி செய்யலாம் மேலும் கடுமையான மரபியல் குறைபாடால் பேறுப்பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாக செய்யலாம்.
  • ஒருவகை படுத்தப்பட்ட குத்துசெடியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்.
  • நோய்களற்ற அல்லது பூச்சிகளற்ற விதைகளை துளிர செய்யல்லாம்.
  • தேவைக்கேற்ப தாவரங்களை அதிக நாட்கள் எந்த செலவுமில்லாமல் பராமரிக்கலாம்.
  • திசு வளர்ப்பு முறை வைரஸ் நோய் அகற்ற, மரபு மாற்றம், உடலம் பண்பக கலப்பு பயிர் முன்னேற்றம் மற்றும் முதல் நிலை ஆராய்ச்சிக்கு உபயோகப்படுகிறது [2]
  • அழியும் நிலையிலுள்ள தாவர இனங்களை இம்முறையின் உதவியால் பயிர்பெருக்கம் செய்து அழிவிலிருந்து பாதுகாக்கலாம்[3]

மேற்கோள்கள்[தொகு]