தாவர உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவர உயிரணு கட்டமைப்பு

தாவரக் கலங்கள் மெய்க்கருவுயிரிக் கல வகையைச் சார்ந்தது. தாவரக் கலங்கள் மற்ற மெய்க்கருவுயிரி கலங்களைக்காட்டிலும் பல சிறப்புப் பண்புகளுடன் வேறுபட்டு காணப்படுகின்றன. இவற்றின் சிறப்புப் பண்புகள் பின்வருமாறு:

  • கலமையத்தில் நீர்மம் நிரம்பிய புன்வெற்றிடம் எனப்படும் உறுப்பு கொடைக்கணிக[1] உறையால் சூழப்பட்டுள்ளது . இதன் பணிகளாக, கல அழுத்தத்தை சீராக்குதல், பிற சிறிய மூலக்கூறுகளின் இடப்பெயர்ச்சியை கட்டுப்படுத்தல், தேவையான பொருள்களை சேமித்தல், தேவையற்ற புரதம், கல நுண்ணுறுப்புகளைச் செரித்தல் ஆகியன அமைகின்றன .
  • கலச்சுவர் மாவியம், மரவிழையம் ஆகியவற்றால் ஆனது. பெரும்பாலும் உயிரணு மென்படலத்துக்கு வெளியே உள்ள முற்கணிகம் மரப்பசை(லிக்னின்), பெக்டின் ஆகியவற்றைச் சுரக்கிறது, இந்த அமைப்பு பிற நுண்ணுயிரிகளிடமிருந்து வேறு பட்டுக் காணப்படுகிறது, பூஞ்சைகளின் கலச்சுவர் கைட்டினால் ஆனது, குற்ருயிரியின் கலச்சுவர் பெப்டிடோகிளைக்கனால் ஆனது. கலச்சுவர் பல முதன்மையான செயல்களைச் செய்கிறது . கலத்திற்கு உருவத்தை கொடுக்கிறது. இழையம், நுண்ணுறுப்புக்களை வடிவமைக்கிறது. கலத்துக்கு இடையே நடக்கும் மூலப்பொருள்கள் கடத்துதல், தாவர நுண்ணுயிரிகளின் தொடர்புக்குக் காரணமாக உள்ளது . இரு கலங்களிடையிலான தொடர்பிற்கு ஏதுவான சிறப்பு அமைப்பாக கலநீர்ம டேஸ்மெட்டா அமைந்துள்ளது முதன்மை கலச் சுவரில் உள்ள சிறு துளைகள் மூலம் கலப்படலம் மற்றுமமகக்கண்க வலைப்பின்னல் போன்றவை ஒரு கலத்திலிருந்து மற்றொரு கலத்துக்குத் தொடர்பு கொள்கிறது.[2]
  • கணிகம் என்னும் உறுப்பு பசுங்கணிகமாக, பச்சையத்தைக் கொண்டுள்ளது, இதில் பச்சை நிற துகள்கள் உள்ளன. இப்பச்சையம் சூரிய ஒளியை எடுத்து கொண்டு தாவரத்திற்கு தேவையான உணவை தானே ஒளிச்சேர்க்கை மூலம் தயாரித்து கொள்கிறது. மற்ற வகையான கணிகங்கள் மாக்கணிகம் மாவுச்சத்தைச் சேமிக்கிறது , கொழுங்கணிகம் கொழுப்பு பொருள்களை சேமிக்கிறது, பச்சையங்கள் நிறமிகளை உற்பத்தி செய்து சேமிக்கிறது. ஊன்குருத்து அல்ல்லது இழைமணியின் மரபணுத்தொகையில் 37 உள்ளது போல்,[3] கணிகங்களின் மரபணுத்தொகையில் 100-120 மரபணுக்கள் உள்ளன .[4]
  • பிளவுக் கணிகத்தை முன்வடிவாக வைத்து கலப் பிரிவின்போது கலத் தடுப்பு சுவர் உருவாதல் தாவர, சில பாசிகளின் சிறப்புப் பண்பு ஆகும். விலங்கு கலங்களில் உள்ளது போல், இருவாழ்வி தாவரம், பெரணி சைக்காய்டுகள், சிங்கோத் தாவரங்கள் நீந்தும் உயிர்க்கலங்களைப் பெற்றுள்ளன .

சோற்றிழையக் கலங்கள்[தொகு]

இவை உயிருள்ள கலங்கள் ஆகும் . இவற்றின் வேலை சேமிப்பும் ஒளிசேர்க்கைக்கு உதவுதலும் ஆகும் . இலைகளில் கடத்துகலம், ஊட்டச்சத்துக் கலம் மட்டுமமல்லாமல் முதன்மையாக சோற்றுத்திசுக் கலங்களும் காணப்படுகின்றன . இலைகளின் மேல்புறத்தோலில் உள்ள சோற்றுத்திசுக் கலங்கள் ஒளி ஊடுருவும், வளிமப் பரிமாற்றம் செய்யும் தனிச்சிறப்புடையது ஆகும் .பரன்கைமா செல்கள் மெல்லிய ஊடுருவும் தன்மையுள்ள முதன்மை சுவரை கொண்டுள்ளது . இது இருகலங்களுக்கு இடையே மூலக்கூறுகள் நகர வழிவிடுகிறது . இந்தக் கலங்களில் உள்ள கலக்கருநீர்மம் பல உயிர்வேதியல் நிகழ்வுகள் நடைபெற காரணமாக உள்ளது . இக்கலங்கள் பல பசுங்கணிகங்களை கொண்டுள்ளது . இவை முதன்மையாக ஒளிசேர்க்கையில் ஈடுபடுகின்றன . எனவே இவைகள் பசுந்திசுக் கலங்கள் எனப்படுகின்றன . உருளைக்கிழங்கு , பயறுவகை தாவரங்களின் வித்திலைகளில் இக்கலங்கள் சேமிக்கும் செயலைச் செய்கின்றன .

வல்லிழையக் கலங்கள்[தொகு]

இவை உயிருள்ள கலங்கள் ஆகும். இவை முதன்மைக் கலச் சுவரை மட்டும் பெற்றுள்ளன . இந்தக் கலங்கள் ஆக்குதிசு வழி த்தோன்றல்களால் முதிர்ச்சி அடைகின்றன . இவை தொடக்க நிலையில் கலங்சோற்றுத்திசுக் கலங்கள் போன்று காணப்படும். ஆனால் பிறகு மாற்றம் அடைந்து காணப்படும் . இவற்றில் கணிகங்கள் உருவாகாது. சுரக்கும் தன்மை உடைய அகநீர்ம வலை, கோல்கி வலை வளர்ச்சி அடைந்து கூடுதலாக முதல் நிலை கலச் சுவரில் சுரக்கும் . மூன்று அல்லது அதிக கலங்கள் இணையும் இடத்தில் கலச் சுவர் மெலிந்து காணப்படும். பிற அமைப்பு முறைகளில் கலச் சுவர் தடித்து காணப்படலாம்.விதை மூடிய இரு வித்திலை தாவரங்களின் கோலன்கைமா கலங்களின் கலச் சுவரின் பெரும்பகுதி பெக்டின் பகுதி மரவிழையத்தால் ஆனது . வன்திசுக் கலங்கள் பொதுவாக நீண்டு காணப்படும் . செல் பிரிதல் நிகழ்வு குறுக்காக நடந்து தடுப்பு சுவர் போன்று காணப்படும் . வன்திசுக் கலங்களின் பணி தாவரம் நீளவாக்கில் வளரும்போது மைய அச்சிற்கு துணை நிற்பது ஆகும். மேலும் திசுவிற்கு நெகிழ்வும் கடினத்தன்மையும் அளிக்கிறது இதன் முதனிலைக் கலச் செல் சுவரில் மரப்பசை இல்லாததால் நெகிழ்வாகக் காணப்படும்.

தாங்கிழையக் கலங்கள்[தொகு]

கிளிரென்கைமா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது கிளீரோஸ் என்றால் கடினம் என்று பொருள் . இதன் பணி தாங்குதல் ஆகும் . இந்த செல்லை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் . அவை கிளிராய்ட் அல்லது கற்செல்கள் மற்றும் நார் செல்கள் . இந்தக் கலங்கள் இரண்டாம் நிலை கலச்சுவரை முதன்மை கலச்சுவருக்கு உள்ளாக உருவாக்குகிறது . இரண்டாம் நிலை கலச்சுவர் மரப்பசையால் ஆனது .இது கடினமானது . கலத்திற்குள் நீர் நுழையாதவாறு தடுக்கிறது. இதனால் இந்த செல்கள் நீண்ட நாள் உயிர் வாழ முடியாது . ஆகையால் செல்லின் வளர் சிதைமாற்றத்திற்கு தேவையான பொருள்களை கடத்தமுடியாது . கிளிரென்கைமா செல்கள் முதிர்ச்சி அடையும் பொழுது இறந்து விடுகிறது . செலின் சைட்டோபிளாசத்தையும் இழந்து மத்தியில் ஒரு வெற்றிடம் உருவாகிறது . இதன் பணிகள் பழங்கள் , இலைகளுக்கு கடின தன்மை கொடுக்கிறது . இக்கடினத்தன்மை புழுக்கள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து தாவரத்தை பாதுகாக்கிறது .

மேற்கோள்கள்[தொகு]

  1. Raven, JA (1997). "The vacuole: a cost-benefit analysis". Advances in Botanical Research 25: 59–86. doi:10.1016/S0065-2296(08)60148-2. 
  2. Keegstra, K (2010). "Plant cell walls". Plant Physiology 154 (2): 483–486. doi:10.1104/pp.110.161240. https://archive.org/details/sim_plant-physiology_2010-10_154_2/page/483. 
  3. Anderson, S; Bankier, AT; Barrell, BG; de Bruijn, MH; Coulson, AR; Drouin, J; Eperon, IC; Nierlich, DP et al. (1981). "Sequence and organization of the human mitochondrial genome". Nature 290: 4–65. doi:10.1038/290457a0. பப்மெட்:7219534. 
  4. Cui, L; Veeraraghavan, N; Richter, A; Wall, K; Jansen, RK; Leebens-Mack, J; Makalowska, I; dePamphilis, CW (2006). "ChloroplastDB: the chloroplast genome database". Nucleic Acids Research 34: D692-696. doi:10.1093/nar/gkj055. பப்மெட்:16381961. 

5. Jump up^ G., Haberlandt (1902). "Kulturversuche mit isolierten Pflanzenzellen". Mathematisch-naturwissenschaftliche. Akademie der Wissenschaften in Wien Sitzungsberichte. 111 (1): 69–92.

6. ^ Jump up to:a b c Cutter, EG (1977). Plant Anatomy Part 1. Cells and Tissues. London: Edward Arnold. ISBN 0713126388.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_உயிரணு&oldid=3875900" இலிருந்து மீள்விக்கப்பட்டது