தாவரப் பூச்சிக்கொல்லி தயாரித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய சில பொருட்கள் நூற்புழுக் கொல்லிகளாகவும், பூச்சிகளைக் கவரக்கூடிய பொருட்களாகவும், தடுத்து விரட்டக்கூடிய பொருட்களாகவும் பயன்படுகின்றன.[1]

வேம்பு விதைச்சாறு[தொகு]

வேப்பம் பருப்பு 5 கிலோ இடித்துத் துளாக்கி கோணிப்பையில் முடிச்சாக்க கட்டி 100 லிட்டர் தண்ணிரில் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதை வடிகட்டி 100 மிலி ரிவ சோப் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 500 லி கரைசல் தேவைப்படும்.

புங்க விதைக் கரைசல்[தொகு]

புங்கம் விதைப் பருப்பை பொடி செய்து தண்ணிர் சேர்த்து 12 மணி நேரம் உற வைத்து பின்பு வடிகட்டி வைத்து 1 லி கரைசலுக்கு திரவசோப் சேர்த்து தெளிக்க பயன்படுத்தலாம்.

நொச்சி இலை[தொகு]

பொடி செய்யப்பட்ட 10 கிராம் நொச்சி இலைத் தளை 1 கிலோ சேமிப்பு தானியம் அல்லது விதையுடன் கலந்து வைத்திருந்து தானிய பூச்சிகளை தவிர்க்கலாம்.

மேற்கோள்[தொகு]

  1. வேளாண் செயல்முறைகள், மேல்நிலை இரண்டாம் ஆண்டு. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்.