தாவரப் பூச்சிக்கொல்லிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவரங்களின் பல்வேறு பாகங்களிருந்து பயிர்களைத்தாக்கும் பல்வேறுபட்ட தீங்குயிரிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.தாவர பூச்சிக்கொல்லிகளில்சில தனிப்பட்ட குணங்கள் காணப்படுகின்றன.இவ்வகை மருந்துகளால் எவ்வித தீங்குகளும் ஏர்படுவதில்லை.உதாரணமாக வேப்பம்பிண்ணாக்கு போன்றவை மருந்தாகவும், உரமாகவும் பயிர்களின் எல்லா பருவங்களிலும் பயன்படுத்தலாம்.தாவரப் பூச்சிக்கொல்லிகள் இர்சாயண மருந்துகளைவிட விலை குறைவு மற்றூம் பாதுகாப்பானவை.

தாவர பூச்சிகொல்லிகளில் சில[தொகு]

 • புகையிலை பூச்சிக்கொல்லி
 • வேம்பு பூச்சிக்கொல்லி
 • வசம்பு பூச்சிக்கொல்லி
 • புங்கம்பூ ச்சிக்கொல்லி
 • தங்க அரளி பூச்சிக்கொல்லி
 • தென்னை/சோளம் இலைக்கரைசல்
 • இலுப்பை எண்ணெய் பூச்சிக்கொல்லி
 • பைரித்ரம் பூச்சிக்கொல்லி
 • மரிகோல்டு பூச்சிக்கொல்லி

புகையிலை பூச்சிக்கொல்லி[தொகு]

 புகையிலையில் அடங்கியிருக்கும் 14 சதவிகித நிக்கோட்டின் தொடுநஞ்சாகவும்,நரம்பு நஞ்சாகவும் செயல்பட்டு அசுவனி,இலைப்பேன் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெருகிறது.

வேம்பு பூச்சிக்கொல்லி[தொகு]

 வேம்பின் இலை,விதை, எண்ணெய், மற்றும் பிண்ணாக்கு ஆகிய அனைத்தும் பூச்சிக்கொல்லியாக பயன்படுகின்றன.நீமசால்,நீம்கோல்டு போன்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

வேம்பு இலை[தொகு]

  பொடி செய்யப்பட்ட 11கி.கிராம் வேம்பு இலையை 100கி.கிராம் தானியத்துடன் கலந்து சேமிப்பில் பயன்படுத்தலாம்.

வேம்பு விதைச்சாறு[தொகு]

  இடித்து தூளாக்கிய 5கிலோ வேம்புவிதைத்தூளை கோணியில் கட்டி 100லிட்டர் தண்ணீரில் 8மணி நேரம் ஊரியபிறகு வ்டிகட்டி 100மில்லி திரவ சோப்பைக்கலந்து ஏக்கருக்கு 200லிட்டர் கரைசலை தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகள்,இலை சுருட்டுப்புழுக்கள்,நெல் கதிர் நாவாய் பூச்சிகள் போன்ற தீங்குயிரிகளை கட்டுப்படுத்தலாம்.

வேம்பு எண்ணெய் கறைசல்[தொகு]

  100லிட்டர் தண்ணீருடன் 1லிட்டர் சோப்பு கரைசல் கலந்த கலவயில் 3லிட்டர் வேப்பம் எண்ணெயை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து தெளித்து மேற்கண்ட பல்வேறு பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

வேம்பு பிண்ணாக்கு கரைசல்[தொகு]

  10 கிலோ வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி ஒரு மூட்டையில் கட்டி 100லிட்டர் தண்ணீரில் 8மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு மூட்டையை எடுத்துவிட்டு 300மில்லி திரவ சோப்பைக் கலந்து ஒரு ஏக்கருக்கு 200லிட்டர் கரைசல் என்ற அளவில் தெளித்து வெட்டுக்கிளி,அசுவினி,இலப்பேன்,தத்துப்பூச்சி,வெள்ளை ஈ,மற்றும் இலை உண்ணும்,காய்ப்புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.மேலும் நெல் துங்ரோ வைரஸ் நோயின் தீவிரத்தையும் குறைக்கலாம்.

வசம்பு பூச்சிக்கொல்லி[தொகு]

  வசம்புச்செடியின் கிழங்கு பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.ஒரு கிலோ கிழங்கை நன்றாக பொடி செய்து 50கிலோ விதையுடன் கலந்து வைப்பதால் ஒரு வருட காலம்வறை சேமிப்புக் கிடங்குகளில் பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கலாம்.

புங்கம் பூச்சிக்கொல்லி[தொகு]

 வேம்பு போன்றே புங்கமரத்தின் இலை,விதை,எண்ணெய், மற்றும் பிண்ணாக்கு கரைசல்களை தயாரித்து கம்பளிப்புழு,எலுமிச்சை இலை துலைப்பான்,படைப்புழு,அசுவிணிகள் போன்ற தீங்குயிரிகளை கட்டுப்படுத்தலாம்.

தங்க அரளி பூச்சிக்கொல்லி[தொகு]

 15முதல் 30கிராம் ந்ன்றாக பொடி செய்த விதை தூளுக்கு 10லிட்டர் தண்ணீர் வீதம் கலந்த கலவையில் சிரிதளவு சோப்பு கலவையை சேர்த்து இலைப்பேன்,அசுவினி,செதில் பூச்சி போன்ற தீங்குயிரிகளை கட்டுப்படுத்தலாம்.

தென்னை/சோளம் இலைக் கரைசல்[தொகு]

 நிலக்கடலையி மொட்டழுகல் நோயினைக் கட்டுப்படுத்த காயவைத்து பொடி செய்த 1கிலோ இலைத்தூளுடன் 2லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு மணி நேரம் 70’சி முதல் 80’சி வரை கொதிக்கவிட்டு வடிகட்டி 10லிட்டராக ஆக்கிய கலவையை தெளிக்கலாம்.