உள்ளடக்கத்துக்குச் செல்

தாவரப் பூசணவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலைப்பூஞ்சை(Powdery mildew)
விதைகளைப் பாதிக்கும் ஆசுபெர்கில்கோசிசு(Aspergillosis, H&E stain)
நெல் பூஞ்சை

தாவரப் பூசணவியல் என்பது தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் இடர்களை உருவாக்கும் பூஞ்ஞைகளைப் பற்றி விவரிப்பதாகும். இதனால் மறைமுகமாக மனிதனுக்கும் பெரிய இழப்புகள் உண்டாகின்றன. இவ்விதம் ஊறுவிளைவிக்கும் பூஞ்சைகள் என 300 க்கும் மேற்பட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.[1] சேமிப்புப் பூசணங்களும் விதை முளைப்புத்திறனும் சேமிப்புப் பூசணங்களால் பாதிக்கப்பட்ட விதைகளில் முளைப்புத்திறன் குறைந்துவிடுகிறது. மேக்ரோபோமினா ஃபேசியோலினா (Macrophomita phaseolin) என்னும் பூசணத்தால் பாதிக்கப்பட்ட சூரியகாந்தி விதைகளில் சேமிப்புக் கலத்திற்குத் தக்கவாறு முளைப்புத்திறன் குறைகிறது. இவற்றினை பலவகையாகப் பிரிக்கலாம். அவற்றில் முக்கியமானது சேமிப்புப்பூசணவியல்.

சேமிப்புப் பூசணவியல்

[தொகு]

பயிர் அறுவடையின்போது, தானியங்கள் நுண்ணுயிரிகளால் தாக்க மடைகின்றன. அவ்வாறான தானியங்கள் சேமிப்பின்போது மிகுதியாகப் பாதிக்கப்படுகின்றன. தானியங்களில் ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் விரைவில் பல்வேறு நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்டுத் தானியங்களின் முளைப்புத் திறன் குறைகிறது. சேமிப்பின்போது இழப்பை ஏற்படுத்தும் பூசணம் போன்ற நோய்க் காரணிகளைப் பற்றிய அறிவியல் சேமிப்புப் பூசணவியல் (storage pathology) ஆகும்.

முளைப்புத்திறன்

[தொகு]

சேமிப்புப் பூசணங்களும், விதை முளைப்புத்திறனும் சேமிப்புப் பூசணங்களால் பாதிக்கப்பட்ட விதைகளில் முளைப்புத்திறன் குறைந்துவிடுகிறது. மேக்ரோபோமினா ஃபேசியோலினா (Macrophomita phaseolin) என்னும் பூசணத்தால் பாதிக்கப்பட்ட சூரியகாந்தி விதைகளில் சேமிப்புக் கலத்திற்குத் தக்கவாறு முளைப்புத்திறன் குறைகிறது. சூரியகாந்தி விதைகளில் முளைப்புத்திறன் குறைவதற்கான காரணம் அவை பூசணத்தால் ஏற்படும் நச்சு, நொதிப் பொருள்களைத் தோற்றுவித்து விதை உறை (seed coat) வழியாக உட்செல்கின்றன. விதையின் தசைப் பகுதியில் (Seedcentdosperint) உள்ள ஊட்டச்சத்தைப் பயன் படுத்திக் கொண்டு டாக்சின் நச்சை வெளிப்படுத்தி விதை முளைப்புத் திறனைக் குறைக்கின்றன. முளைக்கும் விதைகளிலிருந்து வலிமையற்ற கன்றுகளே தோன்றுகின்றன.

தாக்கும் காரணிகள்

[தொகு]

விதை விதைக்கப்பட்டவுடன் நிலத்திலுள்ள நீரை உறிஞ்சிக் கொண்டு பலவித வேதி மாற்றங்கள் பெற்று முளைவிடுகிறது. விதையின் உள்ளும் புறமும் உள்ள நுண்ணுயிரிகள், அவற்றிற்குத் தேவையான உணவும் நீரும் கிடைக்கும் காரணத்தால் விரைந்து வளர்கின்றன. ஆகவே அவை விதையைச் சுற்றிலும் மிகுதியாகப் பெருக்கமடைகின்றன. அதாவது முளைக்கும் விதையைச் சுற்றி 1 செ.மீ. தொலைவில் உள்ள மண்ணிலுள்ளதைவிட ஏறத்தாழ பத்து மடங்கு கூடுதலான நுண்ணுயிரிகளைக் காணலாம்.

எடுத்துக்காட்டாக, சோள விதைகளில் 17% ஈரப்பதம் இருக்கும்போது 35 °C வெப்பமுள்ள அறையில் 80 நாள் சேமித்து வைத்திருந்தால் ஆஸ்பெர்ஜில்லஸ் (Aspergillus spp) பெனிசில்லியம் (Penicilliant spp) ஆகிய பூசணங்களால் பாதிக்கப்பட்டு முளைப்புத் திறன் 93% இலிருந்து 4% வரை குறைந்து விடுவதாகக் கண்டறியப்பட்டது. 14% ஈரப்பதம் கொண்ட நெல்விதைகளை 90 நாள் வரை 20 °C வெப்பமுள்ள அறையில் சேமித்து வைத்திருந்தால் 94% முளைப்புத் திறனைக் கொண்ட விதைகள் 4% மட்டும் முளைப்புத் திறனைப் பெறுகின்றன என்றும் அறியப்பட்டது.

சேமிப்புக் கலன்கள்

[தொகு]

சேமிப்புக் கலன்களும் பூசணங்களும். தானியங்களைச் 'சேமித்து வைக்கப் பயன்படும் சேமிப்புக் கலன்களுக்கு ஏற்றவாறு தானியங்களில் தோன்றும் சேமிப்புப் பூசணங்களும் வேறுபடுகின்றன. மேற்குக் கோதாவரியில் கடே (gade), கோட்லு (kotlu), பக்கா கொதி, (pucca kothi) ஆகிய மூவகைக் கலன்கள் தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுகின்றன. இவற்றில் நெல்லை ஐந்து மாதங்கள் சேமித்து வைத்தபின், ஆய்வு செய்ததில் இவற்றிலிருந்து எடுத்த நெல்லில் பல வகைப் பூசணங்கள் தொடர்பு கொண்டிருந்தன. எடுத்துக்காட்டு, ஆல்டர்நேரியா ஆல்டர்நேட்டா (Alternaria alternata ,Alternaria solani)

விதை நேர்த்தி

[தொகு]

விதை நேர்த்தி செய்து விதைகளைச் சேமித்து வைப்பதால் சேமிப்பின்போது இழப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் பரவாமல் தடுக்கலாம். அத்தகைய விதைகளை விதைக்கப் பயன்படுத்தினால் நோய்கள் தோன்றுவதையும் தவிர்க்கலாம். விதை நேர்த்தி பல வகைகளில் பின்பற்றப்படுகிறது. கோதுமைக் கரிப்பூட்டை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, வட இந்தியாவில் சூரிய ஒளியைப் பயன்படுத்தும் முறை கையாளப்படுகிறது. இம்முறையில் மே, ஜூன் மாதங்களில் விதைகள் நான்கு மணி நேரம் நீரில் ஊறவைக்கப்பட்ட பிறகு ஒரு மணி நேரம் வெயிலில் காய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் விதைகளிலுள்ள பூசண இழைகள் அழிக்கப் படுகின்றன.

கம்புத் தானியங்களுடன் கலந்துள்ள எர்காட் என்னும் பூசண வித்துகளை அகற்றுவதற்கு உப்புக் கரைசல் பயன்படுகிறது. இம்முறையில் 10% உப்புக் கரைசலைத் தயார் செய்து அதில் எர்காட் கலந்துள்ள தானியத்தை அமிழ்த்தி எர்காட் மேலே மிதக்கும்போது அதனை அகற்றிவிட்டுத் தானியம் நிழலில் உலரவைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

பூசணக் கொல்லிகளைப் பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்யும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இம்முறையில் திராம், கேப்டான் போன்ற பூசணக் கொல்லிகள், 1 கி. கி. விதைக்கு, 4 கிராம் வீதம் 5 முதல் 10 நிமிடங்கள் கலந்து பயன்படுத்தப்படும். இதன் மூலம் விதைகளுடன் தொடர்பு கொண்ட பூசணங்கள் அழிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Stop neglecting fungi". Nature Microbiology 2 (8): 17120. 25 July 2017. doi:10.1038/nmicrobiol.2017.120. பப்மெட்:28741610. 

துணை நூல்

[தொகு]
  1. J.C.Walker, Plant Pathologi, McGraw-Hill Book Co., Newyork, 1957.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரப்_பூசணவியல்&oldid=2866515" இலிருந்து மீள்விக்கப்பட்டது