தாவரங்களின் உயிரியல் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.பி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த டி மெட்டீரியா மெடிகாவில் இடம் பெற்றுள்ள வியன்னா டையஸ்கோரடீஸ் ஆவணம். இது தொன்மையான மூலிகைகள் பற்றிய தகவல்களுடன்  டையஸ்கோரடீஸ் என்பவரால் கி.பி. 50  முதல் 70 க்குள்ளாக எழுதப்பட்ட புத்தகம்

தாவரங்களின்  உயிரியல் வகைபாடு  என்பது  பண்டைய கிரேக்க அறிஞர்கள் முதல் நவீன பரிணாம உயிரியலாளர்கள் வரை துறை அறிஞர்களால் கூறப்பட்டுள்ள தாவரங்களின் உயிரியல் வகைப்பாடாகும். பரிணாமக் கோட்பாட்டின் வருகை வரை , கிட்டத்தட்ட அனைத்து வகைப்பாடுகளும் அனைத்து உயிர்களின் சங்கிலி படிநிலை கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு இயற்கை அறிவியல் மற்றும் இயற்கை இறையியல் மூலமாகவே தாவரங்களின் வகைபாடு மற்றும் அதற்கான விளக்கங்கள் அமைக்கப்பட்டன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தாவரவியலின் தொழில்முறைமயமாக்கல், முழுமையான வகைப்பாடு முறைகளை நோக்கிய மாற்றத்தைக் கொண்டு, தற்போது பரிணாமக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

பண்டைய கிரேக்கத்தில் அரிஸ்டாட்டிலின் மாணவராகவும், பெரிபேடிடிக் தத்துவத்தை பின்பற்றியவருமான, தியோபிராசுடசு(கிமு 372-287), தாவரங்கள் பற்றிய அவரது ஆரம்பகால ஆய்வுக் கட்டுரையான ஹிஸ்டோரியா பிளாண்டாரம்(தாவரங்களின் வரலாறு) என்பதில், 500 க்கும் மேற்பட்ட தாவர இனங்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.[1]

பெடானியஸ் டியோஸ்கோரைடுசுவின் டி மெட்டீரியா மெடிகா தாவரங்களை முக்கியமாக அவற்றின் மருத்துவ விளைவுகளால் வகைப்படுத்தும் தாவர விளக்கங்களின் (ஐநூறுக்கும் மேற்பட்ட) முக்கியமான ஆரம்ப தொகுப்பாகும், பைசண்டைன் பேரரசர் கான்ஸ்டன்டைன் VII, 9 ஆம் நூற்றாண்டில் குர்துபாவை ஆண்ட உமையாத் கலிஃப் அப்துல்-ரஹ்மான் III க்கு இநத் மருத்துவ நூலின் நகலை அனுப்பி இப்புத்தகத்தை அரபு மொழியில் மொழிபெயர்க்க நிக்கோலஸ் என்ற துறவியையும் அனுப்பியுள்ளார்.[2] இது வெளியிடப்பட்டதிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது, இடைக்காலம் முழுவதும் மூலிகை நூல் என்று அறியப்பட்ட இந்நூல் முக்கியமானதாக இருந்துள்ளது.[3][4]

அபு எல்-கைர் உள்பட பல்வேறு தாவரவியல் அறிஞர்களால் 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்ட ஆண்டலூசி தாவரவியல் உரை என்பது நவீன அறிஞர்களால் அறியப்பட்ட மிகவும் முழுமையான தாவர உருவவியல் மற்றும் காலநிலை மாறுபாடுகள் பற்றிய விரிவான விளக்கங்களைக் கொண்ட உரையாகும்.[5]

லின்னேயஸ் எழுதிய ஸ்பீசீஸ் பிளாண்டரம் (1753) என்ற புத்தகம் தாவர அமைப்புமுறையின் அறிவியலில் மகத்தான விளைவை ஏற்ப்படுத்தியது. இது ஐரோப்பாவில் அப்போது அறியப்பட்ட தாவர இனங்களின் முழுமையான பட்டியலை தொகுத்து, அத்தாவரங்களின் ஆண் மற்றும் பெண் பாலின உறுப்புகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பைப் பயன்படுத்தி எளிதாக அடையாளம் காணும் நோக்கத்திற்காக வரிசைப்படுத்தப்பட்டது. மேலும் முதன்முதலில் தாவங்களை இருசொற் பெயரீட்டு அழைக்கும் முறையைப் பயன்படுத்தி வகைப்படுத்தப்பட்டது.

தற்போது, ​​தாவரவியலில் அடைமொழிகளின் கடுமையான பயன்பாடு , சர்வதேச குறியீடுகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், நடைமுறைக்கு மாறானதாகவும் காலாவதியானதாகவும் கருதப்படுகிறது. இனங்கள் பற்றிய பல்வேறு கருத்துக்கள் , அடிப்படை வகைப்பாடு, அலகு, மற்றும் பெரும்பாலும் அகநிலை உள்ளுணர்வுக்கு உட்பட்டதால், இதை முழுமையாக வரையறுக்க முடியாமல் மரபணுக் குறியீட்டை உள்ளடக்கிய மூலக்கூறுகளின் ஒற்றுமை அடிப்படையில் வரிசைப்படுத்தி வருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]