தாழ்வழுத்தப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கடிகார திசையில் சுழலும் குறைந்த அழுத்தப் பகுதி அல்லது சூறாவளி.
ஐஸ்லாந்தின் இந்த குறைந்த அழுத்த அமைப்பு எதிர்-கடிகார திசையில் சுழல்கிறது.

தாழ்வழுத்தப் பகுதி அல்லது சூறாவளி என்பது நிலவியல் வரைபடத்தில் வளிமண்டல அழுத்தமானது சுற்றியுள்ள இடங்களை விட குறைவாக உள்ள இடத்தைக் குறிக்கிறது. அடிவளிமண்டலப் பகுதிகளின் மேல் மட்டத்தில் உருவாகும் காற்று விரிவடைதலை மையமாகக் கொண்டு தாழ்வழுத்தப் பகுதி உருவாகின்றன. குறைந்த அழுத்தப் பகுதியின் உருவாக்கச் செயல்முறையானது சூறாவளியின் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. வானிலையியல் துறையில், வளிமண்டல விரிவாக்கம் இரண்டு பகுதிகளில் நிகழ்கிறது. முதல் பகுதி மேல் தாழ்வழுத்தப் பகுதியின் கிழக்கில் உள்ளது. இது மேல்காற்று அடுக்கிற்குள் ஒரு ரோஸ்பி அலையின் பாதியை உருவாக்குகிறது (வெப்பமண்டலத்தின் வழியாக விரிவடையும் பெரிய அலைநீளம் கொண்ட ஒரு தொட்டி). சிறிய அலைநீளம் கொண்ட உட்பொதிக்கப்பட்ட குற்றலை காற்றழுத்தத் தாழ்வழுத்தப் பகுதிகளுக்கு முன்னால் காற்றின் வேறுபாட்டின் இரண்டாவது பகுதி நிகழ்கிறது. இந்த இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகளுக்கு மேலே விரிவடையும் காற்றுகள் கீழேயுள்ள வெப்பமண்டலத்திற்குள் வளிமண்டல உயர்வுக்கு காரணமாகிறது. மேல்நோக்கிய இயக்கமானது பகுதியளவு ஈர்ப்பு சக்திக்கெதிராக ஈடுசெய்வதாலும் மேலே சொன்ன காரணமானது பரப்பு அழுத்தங்களைக் குறைக்கிறது.

வெப்பவியல் தாழ்வழுத்தங்கள் பெரிய நிலப்பகுதிகள் அல்லது பாலைவனப் பகுதிகளில் உண்டான அதிகளவு சூரிய வெப்பத்தால் ஏற்படுவதாகும். இப்படிப்பட்ட வெப்பம் மிகுந்த பகுதிகளில் உள்ள வெப்பமிகு காற்றானது அதன் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை விட குறைவான அடர்த்தி உடையதாக உள்ளது. இந்த வெப்பமான காற்று மேலெழும்புவதால், வளிமண்டல அழுத்தமானது புவியின் மேற்பரப்பிற்கு அருகில் குறைகிறது. பேரளவிலான நிலப்பகுதிகளின் மீதான வெப்பத் தாழ்வழுத்தம் பருவக்காற்றுகளின் சுழற்சிக்கு உதவுகின்றன. குறைந்த காற்றழுத்தப் பகுதிகளானது வெப்பமான நீர்ப்பகுதியின் மேல் ஏற்படும் இடிமின்னல் செயல்பாட்டின் காரணமாகவும் ஏற்படலாம். இது வெப்ப மண்டலப் பகுதிகளில் வெப்ப மண்டலத்திடை காற்றழுத்த தாழ்வு மண்லங்களுடன் ஏற்படும் போது இது பருவக்காற்று காற்றழுத்தத் தாழ்பகுதி என அழைக்கப்படுகிறது. இத்தகைய தாழ்வழுத்தப் பகுதிகள் தங்கள் வடக்கு முனையை ஆகத்திலும், தெற்கு முனையை பிப்ரவரியிலும் அடைகின்றன. வெப்பமண்டலங்களில், நன்கு வெப்பமான சுழற்சியை ஒரு வெப்பச்சலனமானது பெறும்போது அது வெப்பமண்டலச் சூறாவளி என்று அழைக்கப்படுகிறது. உலகளவில் ஆண்டின் எந்த மாதத்திலும் வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகலாம். ஆனால், டிசம்பர் மாதத்தில் வடக்கு அரைக்கோளத்திலோ அல்லது தெற்கு அரைக்கோளத்திலோ இது ஏற்படலாம்.

உருவாதல்[தொகு]

சூறாவளி உருவாதல் என்பது வளிமண்டலத்திற்குள் சூறாவளி சுழற்சிகள் வளர்ச்சியடைதல் அல்லது வலுவடைதல் என்பதாகும்.[1] சூறாவளி உருவாக்கம் என்பது சூறாவளி நலிவாக்கத்திற்கு எதிரானது ஆகும். மேலும், இது சூறாவளிக்கெதிரான (உயர் அழுத்த அமைப்பு) சமானமான உயர் அழுத்த பகுதிகள் உருவாதல் அல்லது எதிர்ப்புயல் உருவாதலைக் குறிக்கிறது.[2] சூறாவளி உருவாதல் என்பது பல்வேறு செயல்முறைகளுக்கான ஒரு குடைச்சொல் ஆகும். சூறாவளி வளர்ச்சி தொடர்பாக உருவான அனைத்தும் இதன் கீழ் வருகின்றன. வானிலை ஆய்வாளர்கள் பூமியின் சுழற்சியின் திசையில் வட்ட அழுத்த அமைப்புகள் இயங்குவதைக் குறிப்பதற்கு "சூறாவளி" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.[3][4] இது இயல்பாக தாழ்வழுத்தப் பகுதியுடன் ஒத்திசைகிறது.[5][6]மிகப்பெரிய தாழ்வழுத்த அமைப்புகள் குளிர்-மைய துருவ சூறாவளிகள் மற்றும் வெப்பமண்டல சேய்மைச் சூறாவளிகள் ஆகும். அவை சுருங்கிய அளவில் உள்ளன. வெப்பமண்டல சூறாவளிகள், காற்றிடை புயலியக்கங்கள் மற்றும் துருவ தாழ்வழுத்தப் பகுதிகள் போன்ற வெப்பமைய சூறாவளிகள் சிறிய நடுத்தர அளவிலானவையாக உள்ளன. துணை வெப்பமண்டல சூறாவளிகளும் இடைநிலை அளவு கொண்டவை. [7][8] சூறாவளி உருவாதல் நுண் அளவுகளிலிருந்து சுருக்கமாக அளவுகள் வரை பல அளவுகளில் நிகழலாம். பெரிய அளவிலான தாழ்வழுத்தப் பகுதிகள், ரோஸ்பை அலைகள் எனவும் அழைக்கப்படுபவை, சுருக்கமான அளவிலானவை.[9]பெரிய அளவிலான தாழ்வழுத்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள இயக்கத்திற்குள் பொதிக்கப்பட்ட குறைநீள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் சிறிய அளவிலோ அல்லது இயற்கையிலேயே நடுத்தரமான அளவிலோ உள்ளன.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Arctic Climatology and Meteorology (2009). Cyclogenesis. பரணிடப்பட்டது 2006-08-30 at the வந்தவழி இயந்திரம் National Snow and Ice Data Center. Retrieved on 2009-02-21.
  2. Glossary of Meteorology (2009). "Cyclogenesis". American Meteorological Society. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
  3. Glossary of Meteorology (June 2000). "Cyclonic circulation". American Meteorological Society. Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2008-09-17.
  4. Glossary of Meteorology (June 2000). "Cyclone". American Meteorological Society. Archived from the original on 2008-10-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-17.
  5. BBC Weather Glossary (July 2006). "Cyclone". British Broadcasting Corporation. Archived from the original on 2006-08-29. பார்க்கப்பட்ட நாள் 2006-10-24.
  6. "UCAR Glossary — Cyclone". meted.ucar.edu. பார்க்கப்பட்ட நாள் 2006-10-24.
  7. Robert Hart (2003-02-18). "Cyclone Phase Analysis and Forecast: Help Page". Florida State University. பார்க்கப்பட்ட நாள் 2006-10-03.
  8. I. Orlanski (1975). "A rational subdivision of scales for atmospheric processes". Bulletin of the American Meteorological Society 56 (5): 527–530. doi:10.1175/1520-0477-56.5.527. Bibcode: 1975BAMS...56..527.. 
  9. Glossary of Meteorology (June 2000). "Rossby wave". American Meteorological Society. Archived from the original on 2010-12-31. பார்க்கப்பட்ட நாள் 2009-11-06.
  10. Glossary of Meteorology (June 2000). "Short wave". American Meteorological Society. Archived from the original on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2009-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழ்வழுத்தப்_பகுதி&oldid=3557777" இலிருந்து மீள்விக்கப்பட்டது