தாளாப்பள்ளி பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாளப்பள்ளி பாறை ஓவியங்கள் என்பன, தாளாப்பள்ளி என்னும் ஊருக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் காணப்படும் பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகும். தாளாப்பள்ளி அல்லது தாளப்பள்ளி எனப்படும் ஊர், கிருட்டிணகிரி மாவட்டத்தில், கிருட்டிணகிரிஇராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது.[1][2] இப்பகுதியில் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய சின்னங்களும் காணப்படுகின்றன. அமாவாசைக்குண்டு, குண்டு, கோட்டைக்குண்டு என்பன உட்பட நான்கு இடங்களில் இவ்வோவியங்கள் உள்ளன.

ஓவியங்கள்[தொகு]

இவ்வோவியங்களில், மனிதர், வீடு, பல்வேறு குறியீடுகள் என்பன வரையப்பட்டுள்ளன. வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் பெரும்பாலானவை கோட்டுருவங்களாகவே உள்ளன. இங்குள்ள மனித உருவங்கள் வேட்டை, நடனம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு ஓவியத்தில் மூன்று பெண்கள் நடனம் ஆடும் காட்சி காணப்படுகின்றது. ஒரு ஓவியத்தில் சக்கரம் இல்லாத வண்டியொன்றை விலங்கு ஒன்று இழுத்துச்செல்வது போல் இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 129.
  2. துரைசாமி, ப., மதிவாணன், இரா. , பக். 71.

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.
  • Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]