தாளவாடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாளவாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] தாளவாடி ஊராட்சி ஒன்றியம் பத்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. தாளவாடி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாளவாடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 63,359 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,444 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,900 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. பையண்ணபுரம்
  2. கேர்மாளம்
  3. ஆசனூர்
  4. இக்கலூர்
  5. மல்லாங்குழி
  6. நெய்தாளபுரம்
  7. தலமலை
  8. திகிநாரை
  9. தாளவாடி
  10. திங்களூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Panchayat Unions of Erode District
  2. Census of Erode District Panchayat Unions
  3. Village Panchayats of Thalavadi Block