பனமலை தாளகிரீசுவரர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாளகிரீஸ்வரர் ஆலயம், பனமலை, விழுப்புரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தாளகிரீஸ்வரர் ஆலயம்
பெயர்
பெயர்:தாளகிரீஸ்வரர் ஆலயம்
ஆங்கிலம்:TALAGIRISWARAR
அமைவிடம்
ஊர்:பனமலை
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தாளகிரீஸ்வரர்
தாயார்:அஷ்டதளாம்பிகை
தல விருட்சம்:பனை
தீர்த்தம்:கங்கை
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரை மாதத்தில் 1 ஆம் தேதி படி திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பல்லவர்கள்
கல்வெட்டுகள்:கோவில் வரலாறு பற்றி கூறும் இருமொழி கல்வெட்டு
வரலாறு
தொன்மை:கி.பி 728
அமைத்தவர்:இரண்டாம் நரசிம்ம பல்லவன்

தாளகிரீஸ்வரர் ஆலயம் (Talagirisvara Temple) தமிழ்நாட்டிலுள்ள, விழுப்புரம் மாவட்டம், பனமலை என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில்.

அமைவிடம்[தொகு]

இவ்வாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள பனமலை கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. பனமலை, செஞ்சியிலிருந்து 23கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

"தாள் " என்ற எழுது பனை மரத்தை குறிக்கும். பனை மரத்தை தலமரமாக கொண்ட சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று.[1] இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், கைலாசநாதர் கோயில், பனமலை தாளகிரீசுவரர் கோயில் இவ்வரசனால் கட்டப்பட்டைவை. [2]

பல்லவர் கால சுவர் ஓவியம்[தொகு]

எழில் மிகு சோமஸ்கந்தர் தேவியுடன் இருக்கும் ஏழாம் நூற்றாண்டு கலையழகு மிக்க சுவர் ஓவியம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களில் இந்த ஓவியம் ஒன்று ஆகும்.[3]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1096&ncat=20&Print=1
  2. http://ngm.nationalgeographic.com/2008/01/india-ancient-art/map-interactive
  3. http://asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp