தாலுகா பஞ்சாயத்து (குஜராத்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாலுகா பஞ்சாயத்து (Taluka Panchayat) குஜராத் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் இயங்கும் இது தமிழ்நாட்டின் ஊராட்சி ஒன்றியம் போன்ற அமைப்பாகும். மூன்று அடுக்கு கொண்ட குஜராத் மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில், தாலுக்கா பஞ்சாயத்து இரண்டாம் அடுக்கு ஆகும்.

தாலுகா பஞ்சாயத்தின் முக்கியப் பணிகள்[தொகு]

தாலுகா பஞ்சாயத்து அமைப்புகள், தாலுகாக்களில் சுகாதார மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல், கிராம சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரித்தல், தொடக்கப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல். தாலுகா மட்டத்தில் விவசாய மேம்பாடுகள் மற்றும் திட்டமிடல். பெண்கள் நலன், இளைஞர் நடவடிக்கைகள் மேம்பாடு மற்றும் உதவி செய்தல். வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரழிவுகளுக்கு நிவாரணப் பணி செய்தல் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gujarat Taluka Panchayat[தொடர்பிழந்த இணைப்பு]