தாலா டுடு
தோற்றம்
தாலா டுடு | |
|---|---|
| பிறப்பு | 1972 ராஞ்சி, ஜார்கண்ட், இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | லால் பகதூர் சாஸ்திரி நினைவு கல்லூரி |
| பணி | எழுத்தாளர், செவிலியர் |
| உறவினர்கள் | [ரவீந்திரநாத் முர்மு] (சகோதரர்) |
தாலா டுடு (Tala Tudu) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாந்தாளி மொழி எழுத்தாளரும் செவிலியரும் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது பெற்றார். இவர் 1972 ஆம் ஆண்டு பிறந்தார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]தாலா டுடு, ரவீந்திரநாத் முர்முவின் சகோதரி ஆவார். அவர் லால் பகதூர் சாஸ்திரி நினைவு கல்லூரியில் கல்வி பயின்றார்.[1] இவர் சரத் சந்திர சட்டோபாத்யாய் எழுதிய பரிணீதா நாவலை சாந்தாலி மொழியில் பாப்லானிஜ் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். அது இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலாகும். இந்தப் படைப்பிற்காக 2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டது.[2][3]தாலா டுடு, வழக்கறிஞரான கணேஷ் டுடுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனிஷா மற்றும் ஆஷிஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Found in translation, a debut feat". The Telegraph. 22 February 2016. Retrieved 27 November 2019.
- ↑ "সাঁওতালি অনুবাদে শরৎচন্দ্র, পুরস্কার তালা টুডুর". Anandabazar Patrika (in Bengali). 19 February 2016. Retrieved 27 November 2019.
- ↑ "AKADEMI TRANSLATION PRIZES (1989-2018)". Sahitya Akademi. Retrieved 20 November 2019.