உள்ளடக்கத்துக்குச் செல்

தார்பார்க்கர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தார்பார்க்கர் மாவட்டம்
Tharparkar District
ضلعو ٿرپارڪر
மாவட்டம்
மாவட்டத்தில் இருக்கும் நகரத்தின் காட்சி
மாவட்டத்தில் இருக்கும் நகரத்தின் காட்சி
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து
தலைநகரம்மித்தி
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்16,49,661
நேர வலயம்ஒசநே+5 (பாக்கித்தானிய சீர் நேரம்)
இணையதளம்www.tharparkar.com Tharparker District

தார்பார்க்கர் மாவட்டம் (Tharparkar District) என்பது பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இடம்பெற்றுள்ள இருபத்தி ஒன்பது மாவட்டங்களில் இதுவும் ஒரு மாவட்டமாகும். மேலும் இம்மாகணத்திலுள்ள மாவட்டங்களில் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமும் இதுவேயாகும்[2][3][4]. மித்தி என்ற நகரம் இதன் தலைநகரமாகும். சிந்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்மாவட்டம் மிகக் குறைந்த மனித வளர்ச்சி குறியீட்டைக் கொண்டுள்ளது. தார்பார்க்கர் மாவட்டத்திலிருந்து தொடங்கும் பாக்கிஸ்தானிய தார் பாலைவனம் ஒரு வளமான பகுதியாகும். இப்பகுதியில் வாழும் தாரிய மக்களின் வாழ்வாதாரம் மழைப்பொழிவு விவசாயத்தைச் சார்ந்தே உள்ளது[5]. உலகிலேயே வளம் மிக்க பாலைவனம் தார்பார்க்கரில் உள்ள தார்ப்பாலைவனம் ஒன்றே என்று கருதப்படுகிறது[6].

இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தின் இந்தோ-ஆரியக் கிளையிலுள்ள ராசத்தானி மொழிகளில் ஒன்றான தாட்கி மொழி தார்பார்க்கர் மாவட்டத்தில் பேசப்படும் உள்ளூர் மொழியாகும். மார்வாரி சிந்தி மொழிக்கு மிக நெருக்கமாக உள்ள தாட்கி மொழியை உருது மற்றும் பஞ்சாபி பேசும் குடிமக்களும் புரிந்து கொள்கிறார்கள்.

மதம்

[தொகு]

1998 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் 59 சதவீதமும் இந்துக்கள் 41 சதவீதமும் தார்பார்க்கர் மாவட்டத்தில் இருந்தனர்[7]. 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் சுதந்திரம் அடைந்தபோது இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 80 சதவீதம் பேரும் இசுலாமியர்கள் 20 சதவீதம் பேரும் இருந்தனர். 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான மக்கள்தொகை பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் (குறிப்பாக உயர் வர்க்க கம்யூனிச மக்கள்) பாக்கித்தானிய தார் பாலைவனப் பகுதியிலிருந்து இந்திய தார் பாலைவனப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். 3,500 இசுலாமியக் குடும்பங்கள் இந்தியப் பகுதியிலிருந்து பாக்கிஸ்தான் தார் பகுதிக்கு மாறி குடிபெயர்ந்தனர்[8][9][10]. இசுலாமியக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 12 ஏக்கர் நிலம் வீதம் மொத்தமாக 42000 ஏக்கர் நிலம் அப்போது வழங்கப்பட்டது[8].

இந்து கோயில்கள்

[தொகு]

செல்கார்

[தொகு]
 1. சிறீ தேவி மாதா மந்தர்
 2. சிறீ முர்ளி மந்தர்
 3. சிறீ இராமாபி மந்தர்
 4. சிவ மந்தர் செல்கார்

மித்தி

[தொகு]
 1. லோகேசு மந்தர்
 2. சந்தோசி மா மந்தர்
 3. சிறீ அனுமன் மந்தர்
 4. சிறீ கிருட்டிணா மந்தர்
 5. சிறீ முரிதர் மந்தர்
 6. சிவ பார்வதி மந்தர்
 7. சிறீ பிர் பித்தோரோ மந்தர்
 8. சிறீ இராமா பிர் மந்தர்
 9. சிறீ குருநானக் தர்பார்

தார்பார்க்கர் மாவட்டத்திலுள்ள பிற முக்கிய இடங்கள்

[தொகு]
 1. நாகர்பார்க்கர் நகரிலுள்ள சூரியோ யாபால் துர்கா கோயில்
 2. குரியில் உள்ள குரி மந்தர்
 3. கிருட்டிணா மந்தர் காண்டியோ தார்பார்க்கர்
 4. நாகர்பார்க்கர் கோயில்கள்
 5. காகா கிராமத்திலுள்ள ஆசுத்தான் சிறீ தேவாள் மாதா கோயில்

கல்வி

[தொகு]

2017 ஆம் ஆண்டின் பாக்கித்தான் மாவட்டக் கல்வித் தரம்

[தொகு]

2017 ஆம் ஆண்டின் பாக்கித்தான் மாவட்ட கல்வி தரவரிசையின் படி தார்பார்க்கர் மாவட்டத்தின் கல்வித்தரம் நூற்றுக்கு 30 மதிப்பெண்கள் என்ற அளவில் இருந்தது. கற்றல் மதிப்பெண், தக்கவைக்கும் மதிப்பெண் மற்றும் பாலின சமநிலை மதிப்பெண் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இக்கல்வித்தரம் இருந்தது.

தார்பார்க்கர் மாவட்டத்தின் தக்கவைப்பு வீதம் வெறும் 26 என்ற அளவிலேயே இருந்தது. அதே நேரத்தில் இம்மாவட்டத்தின் பாலினச் சமநிலை மதிப்பு 64 என்ற அளவில் இருந்தது [11].

உள்கட்டமைப்பு குறைபாடுகள்

[தொகு]

தரவரிசைக்குட்படுத்தப்பட்ட 155 பாக்கித்தானிய மாவட்டங்களில் நடுநிலைப்பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டில் தார்பார்க்கர் மாவட்டம் 128 ஆவது இடத்தைப் பெறுகிறது. பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களின் நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி இம்மதிப்பீடு நடத்தப்பட்டது. பள்ளிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமையும் திருப்தியற்ற அபாயகரமான பள்ளி கட்டடங்களும் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு அக்கறை செலுத்தவேண்டிய அம்சங்களாக நீடித்திருக்கின்றன[11].

தார்பார்க்கர் மாவட்டத்தில் இருக்கும் 200 பள்ளிகள் தற்காலிகமாக இயங்காத பள்ளிகளாகும். 78 பள்ளிகள் மூடப்படக்கூடிய நிலையில் செயல்படுகின்றன. இம்மாவட்டத்தின் 170 பள்ளிகள் நிரந்தரமாக இயங்காத நிலைக்குச் சென்றுவிட்டன. 345 பள்ளிகள் பாதுகாப்பான இடவசதிக் குறைவுடன் இயங்குகின்றன. மொத்தமுள்ள 3439 பள்ளிகளில் 1929 பள்ளிகள் ஒரு வகுப்பறை பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மாவட்டத்தில் 22 பள்ளிகளில் மட்டுமே அறிவியல் ஆய்வக வசதியைப் பெற்றுள்ளன. 3413 பள்ளிகளில் நூலகம் ஏதும் கிடையாது.

பாலின வேறுபாடு

[தொகு]

10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்டவர்களின் மக்கள் தொகையில் ஆண்களில் 54% பேரும் பெண்களில் 21% பேரும் மட்டுமே படிப்பறிவு கொண்டவர்களாக இருந்தனர். மாவட்டத்தில் இருந்த மொத்தப் பள்ளிகளில் 21% பாடசாலைகள் மட்டுமே பெண்களுக்கான பாடசாலைகளாகும். பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தால் வகுப்புகளின் நிலை உயர உயர பள்ளிகளிள் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறிப்பாக வகுப்பு 5 முதல் வகுப்பு 6 வரையும் வகுப்பு 8 முதல் 9 ம் வகுப்பு வரையும் குறைவதைப் பார்க்க முடிகிறது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை இதில் அதிகமாக இருந்தது. இம்மாவட்டத்தில் பயிலும் ஒட்டுமொத்த மானவர்களில் பெண்களின் சதவீதம் 34 சதவீதம் மட்டுமேயாகும்.

சிறுவர்களுக்காக உள்ள 2,506 பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் சிறுமிகளுக்கு வெறும் 673 பள்ளிகள் மட்டுமே உள்ளன, சிறுவர்களுக்கு 182 நடுநிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் சிறுமிகளுக்கு 31 பள்ளிகளும், சிறுவர்களுக்கான 33 உயர்நிலைப்பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், சிறுமிகளுக்கு 7 உயர்நிலைப் பள்ளிகளும் மட்டுமே உள்ளன என்பது கவனிக்கத்தக்கது ஆகும். தார்பார்க்கர் மாவட்டத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஏதுமில்லை.

கற்றல் விளைவுகள்

[தொகு]

2013-2018 ஆம் ஆண்டுக் காலத்தில் சிந்து மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் விளைவாக 2018-2023 ஆம் ஆண்டுக்கான வெற்றி தோல்வி சவால்கள் அறிக்கை தரமான சோதனைத் தேர்வுகல் மூலமாக 2017 ஆம் ஆண்டு சிந்து மாகாண அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் தரவுகள் தெரிவித்தபடி தார்பார்க்கர் மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் அடிப்படையில் இம்மாவட்டத்தை முதல் 10 மாவட்டங்களில் இடம்பிடிக்கச் செய்தனர். ஆனால் மொழிப்பாடங்களில் இவர்கள் பின்தங்கியே இருந்தனர். 8 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில்,தார்பார்க்கர் மாவட்ட மாணவர்கள் முதலிடம் பெற்றனர்[12].

தார்பார்க்கர் அறிவியல் திருவிழா

[தொகு]

தார்பார்க்கர் மாவட்ட மாணவர்கள் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அலிஃப் ஐலான் உதவியுடன் நடைபெற்ற தார் அறிவியல் திருவிழாவில் தங்களின் கணிதம் மற்றும் விஞ்ஞான ஆர்வத்தை நிருபித்தனர் [13][14] தார்பார்க்கர் மாவட்ட கல்வி அமைப்பினரும் மற்றும் பல அமைப்பினரும் ஒருங்கிணைந்து 15000 மாணவர்களுக்கு அதிகமான மாணவர்கள் பங்குபெற்ற அறிவியல் திருவிழாவை நடத்தினர் [15]. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் தலைநகரமான மித்தி நகருக்கு பயணம் செய்து வந்து சேர்ந்தனர். அச்சு, மின்னியல், எண்ணிம ஊடகத்தினர் இவ்விழாவை விரிவாக படம் பிடித்தனர். விழாவைப் பற்றி மாவட்டப் பொது மக்கள், அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர் [16].

குடிமக்களின் எதிர்பார்ப்பு

[தொகு]

மாவட்டத்திலுள்ள கல்வி ஆர்வலர்களும் இளம் தலைவர்களும் தாலீம்டூ செயலியில் பல்வேறு கல்வி பிரச்சினைகளை பதிவேற்றி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்கள் மற்றும் அரசுக்கிடையிலான பிரச்சினைகளும் எங்கும் நிறைந்துள்ளன. பல பள்ளிக்கட்டிடங்கள் செல்வாக்கு மிகுந்த நிலச் சொந்தக்காரர்களால் தனியார் விடுதிகளாகச் செயல்பட்டு வருகின்றன. தரமான ஆசிரியார்கள் பற்றாக்குறையும் அவர்களின் வருகையும் மிகப்பெரிய சிக்கல்களை உண்டாக்கி பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணமாகின்றன[17]. பொதுவாக தார்பார்க்கர் மாவட்டத்தின் கல்வி நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. தொடர்புள்ள அதிகாரிகள் இச்சிக்கல்களின் மீது அக்கறை செலுத்தி செயல்பட வேண்டிய கட்டாயத்தில் மாவட்டம் பின்னடைந்திருக்கிறது.

நிர்வாகம்

[தொகு]

நிர்வாக நலனை முன்னிட்டு மாவட்டம் ஏழு தாலுக்காக்களாகப் பிரிக்கப்பட்டு இயங்குகிறது.[18]

 • மித்தி
 • டிப்ளோ (பாக்கித்தான்)
 • இசுலாம்கோட்
 • சாக்ரோ
 • தாக்லி
 • நாகர்பார்க்கர்
 • கலோய்

நகரங்கள்

[தொகு]
 • செல்கார்
 • காண்டியோ
 • கலோய்

மேற்கோள்கள்

[தொகு]
 1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29.
 2. "Districts of Sindh, Pakistan" (in en). Wikipedia. 2017-09-13. https://en.wikipedia.org/w/index.php?title=Districts_of_Sindh,_Pakistan&oldid=800435490. 
 3. "Population - Pakistan Bureau of Statistics" (PDF). www.pbscensus.gov.pk/. Archived from the original (PDF) on 2018-09-20.
 4. "Districts of Pakistan" (in en). Wikipedia. 2017-10-22. https://en.wikipedia.org/w/index.php?title=Districts_of_Pakistan&oldid=806485727. 
 5. Genani, Manoj (2016-10-21). "Unbelievable pictures of Thar desert after the rain" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1290737. 
 6. "Tharparkar is the only fertile desert in the world - Online Sindh" (in en-US). Online Sindh. 2017-08-11. http://onlinesindh.com/tharparkar-fertile-desert-world/. [தொடர்பிழந்த இணைப்பு]
 7. Tharparkar District Official Website - District Profile - Demography
 8. 8.0 8.1 Hasan, Arif; Raza, Mansoor (2009). Migration and Small Towns in Pakistan. IIED. pp. 15–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843697343. In the 1965 war, Pakistan captured a large area of the Indian part of the Thar desert, and in 1971 India captured a large part of the Thar desert in Pakistan. Many UCs in Pakistani Thar were Hindu majority areas, and Pakistani Thar as a whole was dominated by the Hindu upper caste who controlled most of the productive land and livestock. They also dominated the politics of Thar and strictly enforced caste divisions, making upward social and economic mobility almost impossible for the Hindu lower castes. Their control over the caste system also ensured the maintenance of agriculture-related infrastructure through baigar (forced labour) and the protection of forests and pasture lands. Following the 1965 and 1971 wars, the Hindu upper castes and their retainers fled to India. As a result, the feudal institutions that managed agricultural production and the maintenance of infrastructure collapsed. This has had severe repercussions on the natural environment of Thar. In addition, the lower castes were freed from serfdom and to some extent from discrimination. Many of their members, as a result, have acquired education and are important professionals and NGO leaders. Apart from the migration of Hindus to India, 3,500 Muslim families moved from Indian Thar to Pakistani Thar. They were given 12 acres of land per family (a total of 42,000 acres), thus introducing another factor in the social and political structure of Thar and creating a new interest group.
 9. Maini, Tridivesh Singh (15 August 2012). "Not just another border". Himal South Asian. http://himalmag.com/just-another-border/. "It was not 1947 but the Indo-Pak war of 1971 which proved to be the game changer on this part of the border, since it was then that Hindus from Sindh, worried about persecution in Pakistan, fled to India. The cross-border train service had already been stopped following the 1965 war between India and Pakistan, and resumed only in 2006. Hindu Singh Sodha, a 15-year-old at that time he fled Pakistan in 1971, has set up the Seemant Lok Sangathan, which has been fighting for citizenship rights for all Hindu refugees from Sindh. During the war, Muslims from this region also fled to Pakistan." 
 10. Arisar, Allah Bux (6 October 2015). "Families separated by Pak-India border yearn to see their loved ones". News Lens Pakistan இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225150022/http://www.newslens.pk/families-separated-pak-india-border-yearn-see-loved-ones/. "Another woman, Amnat, a resident of Umerkot had a similar story to tell. She was married at the age of 17 and her husband took her to Pakistan. She is presently 60 years old. Her husband passed away 23 years ago. “My father Abdul Karim had also migrated from Rajasthan, India to Umerkot”. One of reasons is that his daughter lives in Sindh. Her father narrated to her that at the time of Pak-India wars, Muslims in the border’s districts were robbed, killed and harassed by the Indian army, hence he preferred to migrate to a Muslim country like Pakistan to avoid confrontation. She recalled that in the 1965 War between Pakistan and India; Kaprao, Konro, Boath, Vauri, Gahrr jo Tarr, Dedohar, Mate ka Talha, Bijhrar, and a number of other border villages were evacuated. Four persons were killed in the village of Kaprao by the Indian Army based on the allegations that they had been helping the Pakistan Army." 
 11. 11.0 11.1 Alif Ailaan 2017. Pakistan District Education Rankings 2017 பரணிடப்பட்டது 2018-07-30 at the வந்தவழி இயந்திரம். Islamabad: Alif Ailaan. vi-66 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-969-7624-06-5
 12. Alif Ailaan 2018. 2013-2018 Five Years of Education Reforms. Wins, Losses and challenges for 2018-2023. Islamabad: Alif Ailaan. vi-42 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-969-7624-08-9 https://elections.alifailaan.pk/wp-includes/file/SindhEducationReport18.pdf பரணிடப்பட்டது 2018-08-03 at the வந்தவழி இயந்திரம்
 13. "Thar Science Festival 2018 | #TaleemDo". elections.alifailaan.pk (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-08-06. பார்க்கப்பட்ட நாள் 2018-08-06.
 14. Samoon, Hanif (2018-02-14). "In pictures: First-ever science festival in Thar attracts people in droves" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1389398. 
 15. Samoon, Hanif (2018-02-16). "Thousands visit Thar science festival during two days" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1389656. 
 16. "Science Festival in Thar | TV Shows - geo.tv". www.geo.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-06.
 17. "تھر پارکر کا جھونپڑا سکول اساتذہ کی کمی کے باعث بند | #TaleemDo". elections.alifailaan.pk (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-08-06. பார்க்கப்பட்ட நாள் 2018-08-06.
 18. "District Government Tharparkar". Archived from the original on 2010-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்பார்க்கர்_மாவட்டம்&oldid=3620479" இலிருந்து மீள்விக்கப்பட்டது