தார்ண்டைக்கின் கற்றல் அடிப்படை விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தார்ண்டைக்கின் அடிப்படை விதிகள்

தார்ண்டைக் தனது சோதனைகளின் அடிப்படையில் முயன்று தவறிக்கற்றலில் மூன்று முக்கிய விதிகள் அடங்கியுள்ளன. 1. விளைவு விதி 2. பயிற்சி விதி 3. தயார் நிலை விதி

விளைவு விதி[தொகு]

கற்றல் என்பது முறை மற்றும் விளைவு என்ற இருநிலைகளில் அமையும்.ஓர் உயிருக்கு இன்பம்ääமகிழ்ச்சிääஅளிக்கத்தக்க எதிர்வினைகளை நிலை நிறுத்திக்கொள்ளப்படுகிறது. விளைவு என்பது நமக்குக் கிடைக்கும் பயன் அல்லது வெகுமதி,பரிசு இவற்றினைக் குறிக்கிறது. நாம் எந்த காரியத்தைச் செய்தாலும்ääகற்றாலும் அது பயன் அடிப்படையிலேயே அமைகிறது.

பயிற்சி விதி[தொகு]

நாம் கற்றுக்கொள்ளும் எந்தச்செயலும் பயிற்சியின் அடிப்படையே .ஒரு செயலினைத்திரும்பத் திரும்பப் பயிற்சி செய்வதன் காரணமாக அது சிறப்பாகääவெற்றிகரமாக அமைகிறது. ஒரு காரியத்தைத் திரும்பத்திரும்ச் செய்யும் போது அது நிலையாக இடம் பெறுகிறது.

தயார் நிலை விதி[தொகு]

கற்றல் சிறப்பாக அமைய வேண்டுமானால் கற்க முறையும் ஒருவர் தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தயார் நிலை என்பது ஆர்வம்ääஊக்கம்ääவிருப்பம் ஆகிய ஒருவரது மனநிலையினைக் குறிக்கிறது.ஒருவன் சிறப்பாகக் கற்க வேண்டுமெனில் அவனிடம் கற்க வேண்டும் என்ற ஈடுபாடும் விருப்பமும் இருக்க வேண்டும்.

[1]

  1. குட்லக் பதிப்பகம்-மதுரை