தாரோன் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரோன் மக்கள்
மொத்த மக்கள்தொகை
<5
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மியான்மர்
 மியான்மர்<5
 சீனாஅறியப்படவில்லை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பிக்மி இனம்

தாரோன் (Taron) என்பவர்கள் மியான்மரின் வடக்கு காசின் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய இனக்குழுவாகும். இவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் முற்றிலும் மறைந்து போகும் அபாயத்தில் உள்ளனர். இவர்கள் "ஆசிய பிக்மிகள்" என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் 1880 களில் திபெத்திலிருந்து மியான்மருக்கு குடிபெயர்ந்த தெருங் என அழைக்கப்படும் சீனாவில் குவிந்த ஒரு இனக்குழுவிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது . [1]

மத்திய ஆப்பிரிக்காவின் பிக்மிகள் மற்றும் தென்கிழக்காசியாவின் நெக்ரிடோக்களைப் போலவே, தாரோன்களும் மிகச் சிறிய உருவத்தை கொண்டவர்கள். சராசரியாக 129.5 செ.மீ (4 அடி மற்றும் 3 அங்குலங்கள்) இருப்பார்கள்.

பரிணாம வரலாறு[தொகு]

தாரோன்கள் தங்கள் பெயரை தங்கள் அசல் தாயகமான தாரோன் ஆற்றின் பெயரிலிருந்து (தெரோங் / துலோங்) பெற்றுள்ளனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் அசல் தாயகத்தை விட்டு வெளியேறிய தாரோன்கள், தாலர்கா மலைப்பாதை வழியாக மியான்மர் பகுதிக்கு சென்றனர். புட்டாவோ மாவட்டத்தின் நாங் முன் நகரத்தில் உள்ள அடுன்லாங் நதி பள்ளத்தாக்கிலுள்ள காசின் மாநிலத்தில் இவர்கள் குடியேறினர். இந்த நிலப்பரப்பு அடர்த்தியான காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இதில் நீரோடைகள் மற்றும் பனி மூடிய மலைகள் உள்ளன, மேலும் அவை நீல செம்மறியாடு மற்றும் இலை மான் போன்ற அரிய காட்டு விலங்குகளின் தாயகமாகும்.

1960 களில், ஒரு பர்மிய ஆராய்ச்சி பயணக்குழு 50 க்கும் மேற்பட்ட தூய-இரத்த பிக்மிகளைக் கண்டறிந்தது. மேலும் கிரட்டினிசம், மனநல குறைபாடு, முன்கழுத்துக் கழலை மற்றும் பிற உடல் மற்றும் மன நோய்கள் போன்றவை அங்கு காணப்பட்டிருந்தாலும், சமூகம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும் என இவர்கள் உணர்ந்தனர். [2]

காசின் மாநில அமைதி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட களப் பணியாளர்களால், தாரோன்களில் எட்டு நபர்கள் மட்டுமே எஞ்சியிருப்பது தெரியவந்தது. இது இன்று உலகில் அழிந்துவரும் மிகவும் ஆபத்தான மனித இனங்களில் ஒருவராக தாரோனை உருவாக்குகிறது.   [ மேற்கோள் தேவை ] ஆலன் ராபினோவிட்சு என்பவர் 1990களின் பிற்பகுதியில் தாரோன் பிக்மிகளைப் பற்றி அறிய அவர்கள் கிராமத்திற்குச் சென்றார். [2] அங்கு தூய்மையான ரத்தத்தில் மீதமுள்ள இளைய வயது 39 வயதான தாவி என்ற ஒரு தாரோனை கண்டுபிடித்தார். எந்தவொரு காரணமும் இல்லாமல், தாரோன் குழந்தைகள் பெருகிய முறையில் கடுமையான பிறப்பு குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள் என்று விளக்கினார். தாரோன் மூதியவர்கள் அவர்களின் இனம் அழிந்து போகும் என்று முடிவு செய்தனர். ராபினோவிட்சின் வருகையைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டில் கலிபோர்னியா அறிவியல் கழகத்தின் மானுடவியலாளர் பி. கிறிஸ்டியன் கிளீகர் அங்கு சென்றார். பல தாரோன் / துலோங் மக்கள் அங்கு வசித்து வந்ததால், மனைவியைத் தேடுவதற்காக திபெத் அல்லது யுன்னானுக்குப் பயணம் செய்வதாக தாவி அறிவித்தார். [3]

தெருங் மக்களுடன் தொடர்பு[தொகு]

சீனாவின் யுன்னானில் உள்ள துலோங் பள்ளத்தாக்கில் வசிக்கும் தெருங் மக்களிடமிருந்து தாரோன் மக்கள் வந்தவர்கள் என்று ரிச்சர்ட் டி. ஃபிஷர் முன்மொழிந்தார். பள்ளத்தாக்கிற்குள் நிறுவப்பட்ட ஆறு கிராமங்களில் தற்போது சுமார் 5,000 இன தெருங் மக்கள் வாழ்கின்றனர். [3] இது கிளீகரின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

இரு இனங்களுக்கிடையிலான மரபணு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மேலும் அனைத்து தாரோன் மக்களும் 1880 களில் திபெத்திலிருந்து மியான்மருக்கு குடிபெயர்ந்த மூன்று தெருங் மக்களிடமிருந்து வந்துள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. [1]

குறிப்புகள்[தொகு]

பொதுவான குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரோன்_மக்கள்&oldid=3215925" இருந்து மீள்விக்கப்பட்டது