தாரியாகஞ்ச்
தாரியாகஞ்ச் | |
---|---|
தில்லியின் நகர்புறம் | |
![]() ஞாயிற்றுக் கிழமை புத்தகச் சந்தை | |
![]() 1863 பழைய தில்லியின் வரைபடத்தில் ஷாஜகனாபாத் நகரம் | |
இந்தியாவின் தேசியத் தலைநகர் வலையத்தில் தாரியாகஞ்ச் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°38′39″N 77°14′31″E / 28.6443°N 77.2420°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | மத்திய தில்லி மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர தில்லி மாநகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,71,108 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம், உருது, பஞ்சாபி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | |
மாநகராட்சி | தில்லி மாநகராட்சி |
இணையதளம் | https://s34b0a59ddf11c58e7446c9df0da541a84.s3waas.gov.in/ |
தாரியாகஞ்ச் (Daryaganj), தில்லி மாநிலத்தின் மத்திய தில்லி மாவட்டத்தின் மூன்று வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். பிற வருவாய் வட்டங்கள் பாகர்கஞ்ச் மற்றும் கரோல் பாக் ஆகும்.. தாரியாகஞ்ச் மத்திய தில்லி மாவட்டம் மற்றும் தாரியாகஞ்ச் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். அன்சாரி சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளது. பழைய தில்லி பகுதியில் அமைந்த தாரியகஞ்ச் பகுதியின் தில்லி நுழைவாயில் வழியாகச் செல்லும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையின் முடிவில் செங்கோட்டை, ஜாமா பள்ளி, தில்லி, சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார், திகம்பர சமணக் கோயில் மற்றும் சாந்தினி சவுக் பகுதிகள் உள்ளது. தாரியாகஞ்ச் பகுதியில் 1964ஆம் ஆண்டு முதல் ஞாயிற்றுக் கிழமை சந்தை நடைபெறுகிறது.[1] இப்பகுதியில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 64.73% ஆக உள்ளது.இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.
1911ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைநகராக புது தில்லி மாறிய போது, பழைய தில்லிக்கும், புது தில்லிக்கும் இடையே தாரியாகஞ்ச் மற்றும் பாகர்கஞ்ச் பகுதிகள் இருந்தது.[2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தாரியாகஞ்ச் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 271,108 ஆகும். அதில் 143,293 ஆண்கள் மற்றும் 127,815 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 82.7% உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 30,211 மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 32.95%, இசுலாமியர் 64.73%, சமணர்கள் 1.08%, கிறித்தவர்கள் 0.57%, சீக்கியர்கள் 0.39% மற்றும் பிற சமயத்தினர் 0.28% வீதம் உள்ளனர். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Daryaganj Book Bazaar vs Khan Market bookstores". Hindustan Times. 22 November 2010 இம் மூலத்தில் இருந்து 2013-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130513235700/http://www.hindustantimes.com/News-Feed/Books/Daryaganj-Book-Bazaar-vs-Khan-Market-bookstores/Article1-629583.aspx.
- ↑ "A tale of two cities". Hindustan Times. 1 September 2011 இம் மூலத்தில் இருந்து 2015-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150702164816/http://www.hindustantimes.com/News-Feed/newdelhi/A-tale-of-two-cities/Article1-740282.aspx.
- ↑ Darya Ganj Tehsil Population, Caste, Religion Data - Central district, Delhi
- H.C. Fanshawe (1998). Delhi, past and present. Asian Educational Services. ISBN 81-206-1318-X.
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "History Of Daryaganj, Delhi". Moscow Batteries (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-08-25.