தாரா பீயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாரா பீயர்
Blue Light Image.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்தாரா பிரவுனி
பிறப்புகனடா, பிரிட்டிசு கொலம்பியா வான்கூவர்
இசை வடிவங்கள்நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புற மற்றும் பாப.
தொழில்(கள்)பாடகர்-பாடலாசிரியர் மற்றும் நடிகை.
இசைத்துறையில்2007–தற்போதுவரை
வெளியீட்டு நிறுவனங்கள்Red Raven Records (distributed by Kobalt Music Group)[1]

தாரா பீயர் (நீ பிரவுன்) (Tara Beier) என்பவர் ஒரு கனடா நாட்டைச் சேர்ந்த அமெரிக்கப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பீயர் கனடாவின் வான்கூவர் நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை பிலிப்பைன்சு வம்சாவளியையும், தாய் பிரிட்டிசு ஆத்திரிய மற்றும் இசுக்காட்லாந்து வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர்[2] பீயரின் தந்தை ஒரு சிகையலங்கார நிபுணர் மற்றும் முடிதிருத்தும் கடையின் உரிமையாளராக இருந்தார். இவரது தாயார் ஒரு சிறு வணிக தொழில்முனைவோர். தாத்தா கனடாவின் விக்டோரியாவில் பியானோ கலைஞராகப் பணிபுரிந்தார்.

பீயரின் குழந்தை பருவத்தில் இவரது குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தது. இதனால் மூன்று வெவ்வேறு தொடக்கப் பள்ளிகளிலும், மூன்று வெவ்வேறு உயர்நிலைப் பள்ளிகளிலும் பீயர் கல்வி பயின்றார். மிகவும் சிறிய கிராமம் ஒன்றில் இவர்களுடைய குடும்பம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வசித்தது. அங்குதான் பீயருக்கு விலங்குகள் மற்றும் இயற்கையின் மீதான அன்பு வளர்ந்தது. குதிரையேற்றத்தில் ஆர்வம் கொண்ட வீராங்கனையாகவும் இவர் ஆனார். சவாரி செய்வதற்கு வசதியாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமென்பதற்காக பீயர் பெரும்பாலும் குதிரைக் கொட்டிகளில் தூங்குவார்[3]. பீயர் குதிரை சவாரி பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது அவருடைய குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இவரிடம் இருந்து பெற்றோர் சிலகாலம் பிரிந்து வாழ்ந்தனர், பின்னர் சமரசமாயினர். தனது குழந்தைப் பருவம் கடினமானதாகவும், சில நேரங்களில் குழப்பமானதாகவும் இருந்ததாக பீயர் விவரிக்கிறார். இச்சூழல் சிறு வயதிலிருந்தே தனக்கு பெரும் சுதந்திர உணர்வைத் தந்தது என்றும் பீயர் கூறுகிறார். வெற்றிபெறுவதற்கு தனது பெற்றோர் பெரும் அழுத்தத்தை உண்டாக்கியதாகவும் பீயர் கூறியுள்ளார்[3].

தனது 5 வயதில் பீயர் பாரம்பரிய பியானோவை வாசிக்கத் தொடங்கினார். குழந்தை பருவத்திலேயே காற் கொட்டுத் தாள நடனம் (டேப் டான்சு) ஆடுபவராகவும், தீவிர குதிரையேற்ற வீரராகவும் இருந்தார். பீயர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரோயல் இசைப் பயிலகத்தில் இசை பயின்றார். இவர் மிகவும் மோசமான குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த பியானோ ஆசிரியரைக் கொண்டிருந்தார். எனவே சில சமயங்களில் பயத்தினால் தனது வகுப்புகளுக்குச் செல்லாமல் அழுதுகொண்டே பீயர் புறக்கணித்து விடுவார். இசையின் மீதுள்ள காதலால் இவர் தன் முயற்சியை முற்றிலுமாக விடாமல் இருந்தார். மேலும் இத்தகைய சூழல் அனுபவத்தின் காரணமாகவே தனக்கு இசையில் வலுவான அடித்தளம் கிடைத்தது என்று கூறிய பீயர் இதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

பீயர் அனைத்து பெண்கள் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கு இவர் பெண்ணியக் கோட்பாட்டின் பண்பாட்டறிவைப் பெற்றார். [3] பின்னர் இவர் சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் இளங்கலை படித்து பட்டம் பெற்றார். படித்த பட்டம் இவருக்கு சமூகம் மற்றும் மனித நடத்தை பற்றிய புரிதலை அளித்தது. மேலும் இவர் குற்றவியல் நீதி மற்றும் சிறை சீர்திருத்தத்திற்காக வாதாடுபவராக ஆனார். திரைப்படம் மற்றும் இசையை தொழிலாகக் கொள்வதற்கு முன்னர் வணிகம் அல்லது சட்டத்துறைக்குச் செல்ல பீயர் முதலில் விரும்பினார்.

தொழில்[தொகு]

திரைப்படம் மற்றும் தயாரிப்பு[தொகு]

பீயர் நாடக நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மேலும் பொழுதுபோக்காக கவிதைகளை எழுதினார். பின்னர் இவர் திரைப்படத் தயாரிப்பாளராக தன் தொழிலைத் தொடர்ந்தார். ஐ மெட் எ மேன் ஃப்ரம் பர்மா [4] என்ற ஆவணப்படத்தை இவர் எழுதி தயாரித்தார். இது பர்மிய அகதி மற்றும் முன்னாள் புரட்சிகர போராளியான லெர் வா லோ போவின் கதையை அடிப்படையாக கொண்டது. புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரும் ஆர்வலருமான பஃபி சைன்ட்-மேரியின் 1966 தொலைக்காட்சி நேர்காணலை சிறப்பிக்கும் ஒரு ஆவணப்படமான கவர்ட் என்ற பெயரிலான ஒரு பிறப்புரிமை தொடர்பான ஒரு திரைப்படத்தை இவர் எழுதி நடித்தார். [5] [6] சைன்ட்-மேரியின் முக்கிய கதாபாத்திரத்தில் பீயர் நடித்தார். [7] இந்த படம் வெளியானதைத் தொடர்ந்து, இவர் இசைக் குறிப்புகளை எழுதத் தொடங்கினார். பீயர் தனது துவக்க ஆண்டுகளில் நடிகையாக பணியாற்றினார், சுயாதீன படங்களில் தோன்றினார். இட் ரிமெய்ன்ஸ் அன்செய்ட் என்ற குறும்படத்தில் இவர் நடித்தார், இது இரட்டை இசைக்கலைஞர்களான டெகன் மற்றும் சாரா ஆகியோரால் இசையமைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டது. [8]

திரைப்பட விழாக்கள் மற்றும் பாராட்டுக்கள்[தொகு]

அவரது திரைப்படம் ஐ மெட் எ மேன் ஃப்ரம் பர்மா வான்கூவர் சர்வதேச திரைப்பட விழா திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [9]   2014 ஆம் ஆண்டில், டொராண்டோவில் நடந்த திரைப்பட விழாவில் பீயரின் திரைப்படமான கவர்ட் சிறந்த பரிசோதனை படப் பிரிவில் வென்றது. மேலும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, விஸ்லர் திரைப்பட விழா மற்றும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [10]

இசை வாழ்க்கை[தொகு]

பஃபி சைன்ட்-மேரி வேடத்தில் நடித்தது பியருக்கு இசையில் கவனம் செலுத்த ஊக்கமளித்தது. [11] கிரேட் லேக் நீச்சல் வீரர்களின் பிரட் ஹிக்கின்ஸ் தயாரித்த தனது முதல் ஆல்பமான ஹீரோ & தி சேஜ் ' [12] [13] ஐ 2016 இல் வெளியிட்டார் . இந்த ஆல்பத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன மேலும் கனடா முழுவதும் உள்ள வானொலி நிலையங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஒலிபரப்பப்பட்டன.

பீயர் பின்னர் கிராமி விருது பெற்ற தயாரிப்பாளர் டக் போஹமுடன் “Forgiveness” [14] என்ற ஒற்றை பாடலை வெளியிட்டார். பின்னர் இவர் டொராண்டோ, பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் முழுவதும் தனது இசைக்குழுவுடன் சுற்றுப்பயணம் செய்தார். [15]

பீயரின் இசை நாட்டுப்புற, இசை மற்றும் பாப் ஆகியவற்றின் கலவை என்று கூறப்படுகிறது. [16] [17]

இசை சரிதம்[தொகு]

ஆல்பங்கள்[தொகு]

 • ஹீரோ & தி சேஜ் (2016) [18]

ஒற்றை பாடல் மற்றும் பிற[தொகு]

 • கலிபோர்னியா 1970 (2017)
 • போர்கிவென்ஸ் (2017) [19]
 • டாக்டர் பிரவுன் (2018)

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நிவியா தொலைக்காட்சி விளம்பரத்தில் பணிபுரியும் போது, தாரா திரைப்பட தயாரிப்பாளர் டென்னிஸ் பீயரை சந்தித்தார். இருவரும் திருமணமாகி தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ், சி.ஏ மற்றும் ஜோசுவா ட்ரீ, சி.ஏ [2] [18] [20] ஆகிய இடங்களில் வசிக்கின்றனர், முன்பு ஹாம்பர்க், பெர்லின் மற்றும் டொராண்டோவில் வசித்து வந்தனர்.

தனது தந்தையுடன் ஒருபோதும் தல்லுறவு தனக்கு இருந்தது இலை என்று பீயர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். கொரில்லா போர் காரணமாக இவரது தாத்தா பிலிப்பைன்சில் கொல்லப்பட்டார். அந்த நிகழ்வின் அதிர்ச்சி தனது தந்தையை பாதித்தது என்றும், அவர் வளர்ந்த பிறகு தன் மகளுடனான ஆரோக்கியமான உறவைவைத் தடுத்ததாகவும் இவர் நம்புகிறார். [19] அதே போல் இவரது குழந்தை பருவத்திலிருந்தே ஏற்பட்ட பிற மன உளைச்சல்களையும் பியர் கூறியுள்ளார்.

நெகிழி கழிவுகளை குறைப்பதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஆதரவாக பீயர் அடிக்கடி சமூக ஊடகங்களை, குறிப்பாக இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகிறார். [21] [22] [23] [24] [25]

குறிப்புகள்[தொகு]

 1. "Five Questions With ... Tara Beier". FYI Music News (17 April 2017). பார்த்த நாள் 28 April 2018.
 2. 2.0 2.1 "Tara Beier Sure-Footed Debut Album Hero and the Sage" (21 July 2016).
 3. 3.0 3.1 3.2 Staff, VoyageLA. "Meet Tara Beier - Voyage LA Magazine | LA City Guide" (en-US).
 4. "BTW Tara Beier, Rich Aucoin, Lucy Rose, Major Love, Ought, Liza Anne, Nagata Shachu/ Ken Yoshioka/ Julian Fauth" (17 March 2018).
 5. "Tara Beier Sure-Footed Debut Album Hero and The Sage" (21 July 2016).
 6. "Singing to inspire peace: Tara Beier plays Riverfest in Elora on Aug. 19" (18 August 2017).
 7. "Tara Beier".
 8. "It Remains Unsaid (2011)". IMDb.
 9. "About Reel Causes Society" (en).
 10. "Imaginenative 2014 Award Winner".
 11. "Five Questions With ... Tara Beier" (en) (2017-04-19).
 12. "Tara Beier – 'Hero and the Sage'" (31 October 2016).
 13. "Tara preps to put out 'Hero & The Sage’" (7 April 2016).
 14. "Premiere: Tara Beier is Liberated with "Forgiveness" - Atwood Magazine" (en-US) (2017-12-14).
 15. "TARA BEIER" (en-US).
 16. "Tara Beier". Canadian Broadcasting Corporation.
 17. "Live Review: Tara Beier at the Mint in Los Angeles, Ca" (27 June 2017).
 18. 18.0 18.1 "Tara Beier: Hero & The Sage" (13 June 2016).
 19. 19.0 19.1 "Premiere: Tara Beier is Liberated with "Forgiveness"" (14 October 2017).
 20. "New Music / Video: Tara Beier – "Guns Road" (Alternative Folk)" (16 November 2016).
 21. "TARA BEIER on Instagram: "Dear Trader Joe’s & rest of the world: #plasticisover it is toxic oil sitting on our food and causes cancer! New packaging solutions…"" (en).
 22. "TARA BEIER on Instagram: ""#saveyourplanet before it’s too late. Build an energy, a circle of love, it will lift you up to the stars above. Solanda, Take Me To…"" (en).
 23. "TARA BEIER on Instagram: "Globally humans buy a million plastic bottles per minute. In the United States, Americans used about 50 billion plastic water bottles last…"" (en).
 24. "TARA BEIER on Instagram: "Happy #worldoceansday 🌊! I pray we can unite to protect and restore our oceans, which cover 71% of Earth’s surface, and hold 97% of our…"" (en).
 25. "TARA BEIER on Instagram: "Let’s stand up for our planet and reduce plastic waste! (📸 @trippydana ) These are tips inspiring me to live by: Bring your own mug☕️ to…"" (en).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_பீயர்&oldid=2919308" இருந்து மீள்விக்கப்பட்டது