தாரா கோவிந்த் சப்ரே
தாரா கோவிந்த் சப்ரே (Tara Govind Sapre)(1919-1981) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிராவினை சேர்ந்தவரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் நான்காவது மக்களவையில் வடகிழக்கு மும்பை மக்களவை தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
ஆர். பி. கோவிந்த் ரகுநாத் பார்வேயின் மகளாக, தாரா பம்பாய் மாகாணம் புனேயில் 9 மே 1919-ல் பிறந்தார். இவர்பெர்குசன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]
பணி[தொகு]
தாரா அகில இந்திய மகளிர் மாநாட்டில் உறுப்பினராக இருந்தார்.[1] இந்தியத் தேசிய காங்கிரசின் அரசியல்வாதியும் பம்பாய் வடகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான தனது சகோதரர் எஸ். ஜி.பார்வேக்காகவும் இவர் பிரச்சாரம் செய்தார். 1967-ல் பார்வேயின் திடீர் மரணம் காரணமாக இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தாரா போட்டியிட்டார். அதே நேரத்தில் முந்தைய தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த வி. கே. கிருஷ்ண மேனன் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.[2] இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், "வெளிமாநிலத்தவர்" என்பதற்காக சிவசேனா இவரது தேர்வை கடுமையாக எதிர்த்தது.[3] இத்தேர்தலில் சப்ரே 156,313 வாக்குகளைப் பெற்று, நான்காவது மக்களவை உறுப்பினரானார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
தாரா 25 மே 1940-ல் கோவிந்த் விட்டல் சப்ரேவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.[1] தாரா புனேவில் மாரடைப்பு காரணமாக 1981 ஜனவரி 14 அன்று இறந்தார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Members Bioprofile: Sapre, Shrimati Tara Govind". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ Varma, Shanti Prasad; Narain, Iqbal; Bhambhri, Chandra Prakash (1968). Fourth general election in India. 1. Orient Longmans. பக். 538. https://books.google.com/books?id=rMaJAAAAMAAJ.
- ↑ Shenoy, T V R (18 July 2012). "Pranabda and the burden of two past Presidents". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ "Details of Bye Elections from 1952 to 1995" (XLXS). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1981. பக். 28. https://books.google.com/books?id=aUAwAAAAMAAJ.