தாராய் சாம்பல் மந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராய் சாம்பல் மந்தி
Tarai gray langur
Tarai Grey Langur.jpg
தாராய் சாம்பல் மந்தி நைனிடால், கில்பரி சாலை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: பிரைமேட்
குடும்பம்: செர்கோபித்திசிடே
பேரினம்: செம்னோபிதேகசு
இனம்: செ. ஹெக்டர்
இருசொற் பெயரீடு
செம்னோபிதேகசு ஹெக்டர்
(போகாக், 1928)
Tarai Gray Langur area.png
தாராய் சாம்பல் மந்தி வாழ்விடம்

தாராய் சாம்பல் மந்தி (செம்னோபிதேகசு ஹெக்டர் ) தொல்லுககுரங்கு. இது முன்னர் வடவெளிச் சாம்பற் குரங்கின் கிளையினமாக கருதப்பட்டது. இந்த சிற்றினத்தின் எண்ணிக்கையானது 10,000க்கும் குறைவாக இருப்பதால் அச்சுறு நிலைய அண்மித்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இதனுடைய எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

செம்னோபிதேகசு அஜாக்சு மற்றும் செம்னோபிதேகசு பிரியம் ஆகியவற்றுடன் தி இலியாட் கதாபாத்திரங்களின் பெயரிடப்பட்ட செம்னோபிதேகசு இனங்களில் இதுவும் ஒன்றாகும்.[சான்று தேவை]

பரவலும் வாழ்விடமும்[தொகு]

தாராய் சாம்பல் மந்தி, வட இந்தியா, பூட்டான் மற்றும் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டது. இவை ராஜாஜி தேசிய பூங்காவிலிருந்து தென்மேற்கு பூட்டான் வரையிலான இமயமலை அடிவாரத்தில் வசிக்கிறது. இது சிவாலிக் மலைகளின் ஈரமான இலையுதிர் காட்டில் 150 முதல் 1,600 m (490 முதல் 5,250 ft) உயரத்தில் உள்ள ஓக் காடுகளில் வாழ்கிறது.

சூழலியல் மற்றும் நடத்தை[தொகு]

தாராய் சாம்பல் மந்தி மரங்களில் வாழ்வன. நிலப்பரப்பில் பகலாடிகளாகவும் இலைகளை உண்ணக்கூடிய பல ஆண் பல பெண் குழுக்களாக உள்ளன.[2] ராஜாஜி தேசிய பூங்காவிற்கு வெளியே உள்ள பழத்தோட்டங்கள் மற்றும் பயிர் வயல்களில் இவை உணவு உண்பதைப் பலர் அவதானித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Molur, S.; Chhangani, A. (2008). "செம்னோபிதேகசு ஹெக்டர்". IUCN Red List of Threatened Species 2008: e.T39837A10274974. https://www.iucnredlist.org/species/39837/10274974. 
  2. Molur, S., Brandon-Jones, D., Dittus, W., Eudey, A., Kumar, A., Singh, M., Feeroz, M. M., Chalise, M., Priya, P. and Walker, S. (2003) Status of South Asian Primates: Conservation Assessment and Management Plan பரணிடப்பட்டது 2016-12-21 at the வந்தவழி இயந்திரம் Workshop Report, 2003. Zoo Outreach Organization/CBSG-South Asia, Coimbatore, India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராய்_சாம்பல்_மந்தி&oldid=3630492" இருந்து மீள்விக்கப்பட்டது