உள்ளடக்கத்துக்குச் செல்

தாராக்கான்

ஆள்கூறுகள்: 3°18′0″N 117°38′0″E / 3.30000°N 117.63333°E / 3.30000; 117.63333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராக்கான்
Tarakan
City of Tarakan
Kota Tarakan
மேல் இடதுபுறத்தில் இருந்து : தாராக்கான் இசுலாமிய மையம் , போர்னியோ தாராக்கான் பல்கலைக்கழக வளாகம், அமால் கடற்கரை, தாராக்கானின் தெருக் காட்சி
தாராக்கான் -இன் சின்னம்
சின்னம்
Location of தாராக்கான்
Map
தாராக்கான் is located in இந்தோனேசியா
தாராக்கான்
      தாராக்கான்

ஆள்கூறுகள்: 3°18′0″N 117°38′0″E / 3.30000°N 117.63333°E / 3.30000; 117.63333
நாடு
 இந்தோனேசியா
பகுதிகலிமந்தான்
மாநிலம் வடக்கு கலிமந்தான்
நிறுவல்15 திசம்பர் 1997
பரப்பளவு
 • நிலம்86.35 km2 (33.34 sq mi)
 • நீர்406.53 km2 (156.96 sq mi)
உயர் புள்ளி
287 m (942 ft)
மக்கள்தொகை
 (2024)
 • மொத்தம்2,55,310[1]
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +9
தொலைபேசி(+62) 551
காலநிலைஅயனம்
HDI (2019)Increase 0.769 (உயர்வு)[2]
இணையதளம்tarakankota.go.id

தாராக்கான் (இந்தோனேசியம்: Tarakan; ஆங்கிலம்: City of Tarakan) என்பது இந்தோனேசியா, வடக்கு கலிமந்தான் மாநிலத்தின், பெருநகரம் மற்றும் தீவு ஆகும். வடக்கு கலிமந்தான் மாநிலத்தில், உள்ள மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியாகவும் இந்தத் தீவு நகரம் விளங்குகிறது. அத்துடன் இந்தத் தீவு நகரம், வடக்கு போர்னியோ, வடக்கு கலிமந்தான் மாநிலத்தின் சுலாவெசி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

இடச்சு கிழக்கிந்திய குடியேற்ற காலத்தில், தாராக்கான் ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியமாக இருந்தது. பசிபிக் போரின் போது இந்தத் தீவு நகரம், பெரும் உத்திசார் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. மேலும் போர்னியோ போர் தொடக்கத்தில் அரச சப்பானிய இராணுவத்தின் முதல் இலக்குகளில் இந்த நகரமும் ஒன்றாகும்.

இந்த நகரம் இந்தோனேசிய மாநிலமான வடக்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள ஒரே மாநகரமாகும். (2012-இல் நிறுவப்பட்டது) இந்தோனேசிய புள்ளிவிவரங்கள் நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த நகரத்தின் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை 193,370; 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை 242,786 ஆகவும் இருந்தது.[3][4] 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அரச மதிப்பீடு 255,310 (132,175 ஆண்கள்; 123,135 பெண்கள்) ஆகவும் இருந்தது.[1]

1942 சனவரி 10 அன்று சப்பான், நெதர்லாந்து கிழக்குத் தீவுகள் மீது போரை அறிவித்தது. அரச சப்பானிய இராணுவத் துருப்புக்கள் மறுநாள் தாராக்கானில் தரையிறங்கின.[5] நெதர்லாந்து ஒரு மாதத்திற்கு முன்பே சப்பான் மீது போரை அறிவித்திருந்தது.[6] இதன் பின்னர் தாராக்கான் போர் தொடங்கியது.

புவியியல்

[தொகு]

இந்த நகரம் கலிமந்தான் கிழக்கு கடற்கரையிலிருந்து தாராக்கான் தீவில் அமைந்துள்ளது. 8,635 எக்டேர் (21,340 ஏக்கர்)[7] நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்த நகரத்தின் 27.5% பகுதி வண்டல் களிமண்ணாலும் 57.63% செம்புறை மண்ணாலும் ஆனது; கடல் மட்டத்திலிருந்து 0–110 மீட்டர் (0–361 அடி) உயரத்தில் உள்ளது.[7]

வரலாறு

[தொகு]

சொல் பிறப்பியல்

[தொகு]
தாராக்கானில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் ப்பல்துறை (1905-1914)
இடச்சு குடியேற்றக் காலத்தில் தாராக்கானில் ஒரு கப்பல் தளம் மற்றும் எண்ணெய் பீப்பாய்கள் (1925)
1945-ஆம் ஆண்டு தாராக்கான் போரின் போது நேச நாட்டுக் கப்பல்கள்

உள்ளூர் புராணங்களின்படி, பூர்வீக திடுங் மக்கள் (Tidung people) கி.பி 1076-ஆம் ஆண்டு வாக்கில் தாராக்கானில் தங்கள் இராச்சியத்தை நிறுவினர். பல நூற்றாண்டுகளாகத் தங்கள் தலைநகரை பலமுறை மாற்றிய பிறகு, கி.பி 1571-இல் அவர்கள் தாராக்கானின் கிழக்கு கடற்கரையில் நிரந்தரமாகக் குடியேறினர்.[8]

தாராக்கான் எனும் பெயர் திடுங் மொழியிலிருந்து பெறப்பட்டது: தாராக் (Tarak) என்றால் சந்திக்கும் இடம்; கான் (Ngakan) என்றால் உண்ணுதல் என்று பொருள்படும். முன்பு காலத்தில், கப்பலோட்டிகளும் வணிகர்களும் திடுங் பகுதியில் தங்களின் கடல் உணவுகளைச் சாப்பிடவும்; ஓய்வெடுக்கவும்; மற்றும் வணிகம் செய்யவும்; ஒரு சந்திப்பு இடமாக தாராக்கான் இருந்துள்ளது.

பெட்ரோலியம்

[தொகு]

1863-ஆம் ஆண்டில் இடச்சு ஆய்வாளர்கள் தாராக்கானில் பெட்ரோலிய எண்ணெய் கசிவுகளைக் கண்டறிந்தனர். 1905-ஆம் ஆண்டில், நெதர்லாந்து மாட்சாப்பி பெட்ரோலிய (Koninklijke Nederlandsche Petroleum Maatschappij) நிறுவனத்திற்கு எண்ணெய் உற்பத்திச் சலுகை வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் ராயல் டச்சு ஷெல் நிறுவனத்திற்கு முன்னோடியாக இருந்தது.

ஓர் ஆண்டு கழித்து 1906-ஆம் ஆண்டில், 57,928 பீப்பாய்களுக்கு மேல் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தது. 1920-களில் தாராக்கானில் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது.[9] இது இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் முழுவதிலுமான மொத்த எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகும்.[10]

மக்கள்தொகை

[தொகு]

இந்த நகரத்தின் மக்கள் தொகை:

  • 2010-ஆம் ஆண்டு - 193,370[3]
  • 2020-ஆம் ஆண்டு - 242,786[11]
  • 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அரச மதிப்பீடு 255,310

சமயம்

[தொகு]
# இனக்குழுக்கள் %
1 பூகிஸ் மக்கள் 37.45%
2 ஜாவானிய மக்கள் 11.08%
3 திடுங் மக்கள் 10.89%
4 மண்டார் மக்கள் 7.44%
5 தயாக்கு* 7.21%
6 பஞ்சார் மக்கள் 6.06%
7 இந்தோனேசிய சீனர்கள் 4.50%
8 தவுசுக் மக்கள் 1.77%
9 தோராஜா மக்கள் 1.48%
10 மற்றவர்கள்* 12.12%
*குறிப்பு: "தயாக்கு மக்கள்" பல்வேறு துணை இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர்;[13]

காலநிலை

[தொகு]

தாராக்கான் தீவில், ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்யும் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Kota Tarakan Utara Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.6571)
  2. "IPM Tarakan Meningkat Jadi 76,09". korankaltara.com. Retrieved 2021-05-19.
  3. 3.0 3.1 Biro Pusat Statistik, Jakarta, 2011.
  4. Badan Pusat Statistik, Jakarta, 2021.
  5. Dull, Paul S. (12 November 2013). A battle history of the Imperial Japanese Navy, 1941-1945 (1978). Naval Institute Press. ISBN 9781612512907.
  6. Dull, Paul (12 December 2012) [1978]. "Isolation of Java". A Battle History of the Imperial Japanese Navy: 1941-1945. Annapolis, Maryland: Naval Institute Press. pp. 61–62. ISBN 9781612512907. Retrieved 22 April 2024.
  7. 7.0 7.1 "Profil Kota Tarakan" (PDF).
  8. Prasetyo, Deni (2009). Mengenal Kerajaan-Kerajaan Nusantara. Pustaka Widyatama (Yogyakarta). ISBN 9789796103096.
  9. "The Pacific War Online Encyclopedia". Kent G. Budge. Retrieved 2011-02-17.
  10. Wolborsky, Stephen L. Choke Hold: The Attack on Japanese Oil in World War II (1994) United States Air Force
  11. Badan Pusat Statistik, Jakarta, 2021
  12. "Badan Pusat Statistik". tarakankota.bps.go.id. Retrieved 2021-04-20.
  13. IPUMS and BPS Kota Tarakan, 2010.
  14. "தாராக்கான்/சுவாத்தா காலநிலை: 1991–2020". Starlings Roost Weather. Retrieved 25 December 2024.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராக்கான்&oldid=4407330" இலிருந்து மீள்விக்கப்பட்டது