தாரகைமாலை
Jump to navigation
Jump to search
தாரகைமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். இப்பெயரிலான சிற்றிலக்கியம் குறித்து இரண்டு வகையான இலக்கணங்கள் பாட்டியல் நூல்களில் காணப்படுகின்றன. கற்பிற் சிறந்த அருந்ததியை ஒத்த மகளிரின் கற்பின் சிறப்புப் பற்றிப் பாடுவதே தாரகைமாலை எனச் சில பாட்டியல் நூல்கள் கூறுகின்றன[1][2]. ஆனால், அசுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களதும் சிறப்புக்களைக் கூறுவதே தாரகைமாலை என்பது வேறு சில பாட்டியல் நூல்களின் இலக்கணம்[3].
குறிப்புகள்[தொகு]
- ↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 867
- ↑ இலக்கண விளக்கம், வெண்பாப் பாட்டியல், பிரபந்த தீபிகை, முத்துவீரியம் என்பன இவற்றுட் சில.
- ↑ பன்னிரு பாட்டியல், பிரபந்த மரபியல் என்பன இவற்றுட் சில
உசாத்துணைகள்[தொகு]
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்