உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்து மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய்லாந்து மாநிலங்கள்
Provinces of Thailand
จังหวัดของประเทศไทย

தாய்லாந்தில் சிறப்பு நிர்வாகப் பகுதியாக விளங்கும் பாங்காக் மாநகர்க் காட்சிகள்
வகைஒருமுக அரசு
அமைவிடம்தாய்லாந்து இராச்சியம்
எண்ணிக்கை76 மாநிலங்கள்
1 சிறப்பு நிர்வாகப் பிரிவு
மக்கள்தொகை193,305 – 2,648,927 (2019)[1]
பரப்புகள்414 km2 (160 sq mi)  – 22,135 km2 (8,546 sq mi)[2]
அரசுதாய்லாந்து அரசாங்கம்
உட்பிரிவுகள்தாய்லாந்து மாவட்டங்கள்

தாய்லாந்து மாநிலங்கள் (ஆங்கிலம்: Provinces of Thailand; தாய்: จังหวัดของประเทศไทย); என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள அரசாங்க நிர்வாக நிலப்பகுதிகள் ஆகும். அந்த அமைப்பில் தாய்லாந்தில் உள்ள 76 மாநிலங்களும் (தாய்: จังหวัด; ஆங்கிலம்: Changwat); புரோவின்சுகள் (Provinces) எனப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகின்றன.[3]

மற்றும் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி (ஆங்கிலம்: Bangkok Special Administrative Area; தாய்: เขตปกครองส่วนท้องถิ่นรงถิ่นรูปแบษ), தாய்லாந்து தலைநகர் பாங்காக் (Bangkok) மாநகரைக் குறிக்கும் நிர்வாகப் பகுதியாகும்.[4][5] அனைத்து மாநிலங்களும் தாய்லாந்து நாட்டின் முதன்மையான உள்ளாட்சி அரசுகள்.

பொது

[தொகு]

தாய்லாந்து நாட்டின் மாநிலங்கள் (Provinces); முதல் நிலையில் ஆம்போ (Amphoe) எனும் மாவட்டங்களாக (Districts) பிரிக்கப் படுகின்றன. இரண்டாம் நிலையில் தம்போன் (Tambon) எனும் துணை மாவட்டங்களாக (Sub Districts) பிரிக்கப் படுகின்றன. பின்னர் இந்தத் துணை மாவட்டங்கள் உள்ளாட்சி அரசுகளாக இயங்குகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் ஓர் ஆளுநரால் (ஆங்கிலம்: Phu Wa Ratchakan Changwat; தாய்: ผู้ว่าราชการจังหวัด) நிர்வாகம் செய்யப்படுகிறது. மாநில ஆளுநர்கள் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப் படுகிறார்கள்.

தாய்லாந்து இராச்சியம்

[தொகு]

தாய்லாந்து (ஆங்கிலம்: Thailand அல்லது Kingdom of Thailand; தாய்: ประเทศไทย), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (ஆங்கிலம்: Siam, தாய்: สยาม) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.

இந்த நாட்டின் வடக்கில் மியான்மர், லாவோஸ்; கிழக்கில் லாவோஸ், கம்போடியா; தெற்கில் தாய்லாந்து வளைகுடா, மலேசியா; மேற்கில் அந்தமான் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடா; வியட்நாம், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன.

சயாம்

[தொகு]

1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வப் பெயர் சயாம் ஆகும்.[6] பின்னர் இது தாய்லாந்து என மாற்றம் கண்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டது. மீண்டும் 1949 மே 12-ஆம் தேதி தாய்லாந்து என மாற்றம் கண்டது.

தாய்லாந்து மன்னர் அந்த நாட்டின் அரசுத் தலைவர்; இராணுவப் படைகளின் தலைவர்; பௌத்த மதத்தை உயர்நிலைப் படுத்துபவர்; அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.

தாய்லாந்து மாநிலங்கள்

[தொகு]
தாய்லாந்தில் உள்ள 76 மாநிலங்கள்
சின்னம் பெயர் பெயர்
தாய்லாந்து
மொழியில்
மக்கள் தொகை (2019)[1] பரப்பளவு (km2)[2] மக்கள் அடர்த்தி ஆங்கில
மொழியில்
பாங்காக் กรุงเทพมหานคร 5,666,264 1,564 3,623 en:Bangkok
அமாட் சாரோவன் อำนาจเจริญ 378,438 3,290 115 en:Amnat Charoen
ஆங் தோங் อ่างทอง 279,654 950 294 en:Ang Thong
புவேங் கான் บึงกาฬ 424,091 4,003 106 en:Bueng Kan
புரிராம் บุรีรัมย์ 1,595,747 10,080 159 en:Buriram
சாச்சோ எங்சாவ் ฉะเชิงเทรา 720,113 5,169 139 en:Chachoengsao
சாய் நாட் ชัยนาท 326,611 2,506 131 en:Chai Nat
சாயாபும் ชัยภูมิ 1,137,357 12,698 91 en:Chaiyaphum
சந்தாபுரி จันทบุรี 537,698 6,415 84 en:Chanthaburi
சியாங் மாய் เชียงใหม่ 1,779,254 22,135 79 en:Chiang Mai
சியாங் ராய் เชียงราย 1,298,304 11,503 113 en:Chiang Rai
சோன்புரி ชลบุรี 1,558,301 4,508 346 en:Chonburi
சும்போன் ชุมพร 511,304 5,998 85 en:Chumphon
கலாசின் กาฬสินธุ์ 983,418 6,936 142 en:Kalasin
கேம்ப்கெங் பெட் กำแพงเพชร 725,867 8,512 86 en:Kamphaeng Phet
காஞ்சனபுரி กาญจนบุรี 895,525 19,385 46 en:Kanchanaburi
கோன் கேன் ขอนแก่น 1,802,872 10,659 169 en:Khon Kaen
கிராபி กระบี่ 476,739 5,323 90 en:Krabi
லாம்பாங் ลำปาง 738,316 12,488 59 en:Lampang
லாம்பூன் ลำพูน 405,075 4,478 92 en:Lamphun
லோயி เลย 642,950 10,500 61 en:Loei
லோப்புரி ลพบุรี 755,556 6,493 116 en:Lopburi
மே ஓங் சான் แม่ฮ่องสอน 284,138 12,765 23 en:Mae Hong Son
மகா சரகம் มหาสารคาม 962,665 5,607 172 en:Maha Sarakham
முக்தாகன் มุกดาหาร 353,174 4,126 87 en:Mukdahan
நகோன் நாயக் นครนายก 260,751 2,141 122 en:Nakhon Nayok
நகோன் பாத்தோம் นครปฐม 920,030 2,142 430 en:Nakhon Pathom
நகோன் பானோம் นครพนม 719,136 5,637 127 en:Nakhon Phanom
நகோன் ரட்சசிமா นครราชสีมา 2,648,927 20,736 128 en:Nakhon Ratchasima
நகோன் சவான் นครสวรรค์ 1,059,887 9,526 111 en:Nakhon Sawan
நகோன் சி தம்மரத் นครศรีธรรมราช 1,561,927 9,885 158 en:Nakhon Si Thammarat
நான் น่าน 478,227 12,130 40 Nan
நாராதிவாட் นราธิวาส 808,020 4,491 180 en:Narathiwat
நோங் புவா லம்பு หนองบัวลำภู 512,780 4,099 125 en:Nong Bua Lam Phu
நோங் கை หนองคาย 522,311 3,275 160 en:Nong Khai
நொன்தபுரி นนทบุรี 1,265,387 637 1,986 en:Nonthaburi
பாத்தும் தனி ปทุมธานี 1,163,604 1,520 766 en:Pathum Thani
பட்டாணி ปัตตานี 725,104 1,977 367 Pattani
பாங் நிகா พังงา 268,788 5,495 49 en:Phang Nga
பத்தலுங் พัทลุง 524,865 3,861 135 en:Phatthalung
பாயோ พะเยา 472,356 6,189 76 en:Phayao
பெட்சாபன் เพชรบูรณ์ 992,451 12,340 80 en:Phetchabun
பெட்சாபுரி เพชรบุรี 485,191 6,172 77 en:Phetchaburi
பிச்சிட் พิจิตร 536,311 4,319 124 en:Phichit
பிட்சனுலோக் พิษณุโลก 865,247 10,589 82 en:Phitsanulok
பிரா நாகோன் சி அயுத்தாயா พระนครศรีอยุธยา 820,188 2,548 322 Phra Nakhon Si Ayutthaya
பிரே แพร่ 441,726 6,483 68 en:Phrae
புக்கெட் ภูเก็ต 416,582 547 762 Phuket
பிரச்சின்புரி ปราจีนบุรี 494,680 5,026 99 en:Prachinburi
பிரசுவாப் கிரி கான் ประจวบคีรีขันธ์ 554,116 6,414 88 en:Prachuap Khiri Khan
ரானோங் ระนอง 193,370 3,230 60 en:Ranong
இரட்சபுரி ราชบุรี 873,101 5,189 168 en:Ratchaburi
ராயோங் ระยอง 734,753 3,666 201 en:Rayong
ரோய் எட் ร้อยเอ็ด 1,305,211 7,873 166 en:Roi Et
சா கயோ สระแก้ว 566,303 6,831 83 en:Sa Kaeo
சக்கோன் நகோன் สกลนคร 1,153,390 9,580 121 en:Sakon Nakhon
சமுத் பிரகான் สมุทรปราการ 1,344,875 947 1,420 en:Samut Prakan
சமுத் சகோன் สมุทรสาคร 584,703 866 675 en:Samut Sakhon
சமுத் சோங்க்ராம் สมุทรสงคราม 193,305 414 467 en:Samut Songkhram
சாராபுரி สระบุรี 645,911 3,499 185 en:Saraburi
சத்துன் สตูล 323,586 3,019 107 en:Satun
சிங் புரி สิงห์บุรี 208,446 817 255 en:Sing Buri
சிசாகெட் ศรีสะเกษ 1,472,859 8,936 165 en:Sisaket
சொங்கலா สงขลา 1,435,968 7,741 186 en:Songkhla
சுக்கோதாய் สุโขทัย 595,072 6,671 89 (en:Sukhothai Thani)
சுபன் புரி สุพรรณบุรี 846,334 5,410 156 en:Suphan Buri
சூராட் தானி สุราษฎร์ธานี 1,068,010 13,079 81 en:Surat Thani
சூரின் สุรินทร์ 1,396,831 8,854 157 Surin
தக் ตาก}} 665,620 17,303 39 Tak
திராங் ตรัง 643,164 4,726 136 Trang
திராட் ตราด 229,958 2,866 78 en:Trat
உபோன் இரட்சதானி อุบลราชธานี 1,878,146 15,626 120 en:Ubon Ratchathani
உடோன் தானி อุดรธานี 1,586,646 11,072 143 en:Udon Thani
உத்தாய் தானி อุทัยธานี 328,618 6,647 50 en:Uthai Thani
உத்தர ஆதித் อุตรดิตถ์ 453,103 7,906 58 en:Uttaradit
யாலா ยะลา 536,330 4,476 119 Yala
யசோதுன் ยโสธร 537,299 4,131 130 en:Yasothon
  • 31 டிசம்பர் 2019-இல் தாய்லாந்தின் மொத்த மக்கள் தொகை 66,558,935 ஆகும்.[1]
  • தாய்லாந்தின் மொத்த நிலப்பரப்பு 517,646 km2 (2013-இல்)[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Statistics, population and house statistics for the year 2019". Registration Office Department of the Interior, Ministry of the Interior. stat.bora.dopa.go.th. 31 December 2019. Archived from the original on 14 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021, information, Forest statistics Year 2019, Thailand boundary from Department of Provincial Administration in 2013{{cite web}}: CS1 maint: postscript (link)
  3. "Administrative information". Department of Provincial Affairs (DOPA). Provincial Affairs Bureau. 21 April 2017. Archived from the original on 10 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Announcement of the Central Registry. The number of people throughout the Kingdom. The evidence of registration as of 31 December 2015". Department of Provincial Administration (DOPA). பார்க்கப்பட்ட நாள் 28 May 2018.
  5. "The World Factbook: Thailand". U.S. Central Intelligence Agency. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
  6. history.htm Thailand (Siam) History, CSMngt-Thai.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்லாந்து_மாநிலங்கள்&oldid=4110811" இலிருந்து மீள்விக்கப்பட்டது