உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்து குதிரைலாட வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய்லாந்து குதிரைலாட வெளவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோலோபிடே
பேரினம்:
ரைனோலோபசு
இனம்:
ரை. சியாமென்சிசு
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு சியாமென்சிசு
கைல்டென்சுடோல்பி, 1917
தாய்லாந்து குதிரைலாட வௌவால் வாழிடங்கள்

தாய்லாந்து குதிரைலாட வெளவால் (Thai horseshoe bat) (சில நேரங்களில் தாய் இலை-மூக்கு வெளவால் என்று அழைக்கப்படும்) என்பது ரைனோலோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வெளவால் சிற்றினம் ஆகும். இது பெரிய காதுகள் கொண்ட குதிரைலாட வெளவால்களின் துணையினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இது லாவோசில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிற்றினங்களின் விளைவாக இருக்கலாம். இது சீனா, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளை தாயகமாகக் கொண்டது.[1][2]

இந்த சிற்றினம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டது.[1] தாய்லாந்து குதிரைலாட வெளவால்களைப் பற்றி மிகுதியான எண்ணிக்கை, மக்கள்தொகை, மக்கள்தொகையின் போக்கு, அச்சுறுத்தல்கள், இயற்கை வரலாறு அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருப்பது உட்பட அதிகம் அறியப்படவில்லை.[1] தாய்லாந்து குதிரைலாட வெளவால்கள் இதன் பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்களைப் போலவே பசுமையான காடுகளில் உள்ள சுண்ணாம்புக்கல் குகைகளுடன் தொடர்புடையவை என்று கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Tu, V.; Furey, N.; Görföl, T.; Csorba, G. (2019). "Rhinolophus siamensis". IUCN Red List of Threatened Species 2019: e.T136651A21990143. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T136651A21990143.en. https://www.iucnredlist.org/species/136651/21990143. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Simmons, N.B. (2005). "Order Chiroptera". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 363. ISBN 978-0-8018-8221-0. கணினி நூலகம் 62265494.