தாய்லாந்தில் இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரத் தானி மசூதி

இசுலாம்(Islam) தாய்லாந்தில் சிறுபான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது. (மொத்த மக்கள் தொகையில் 4.9 விழுக்காடு மக்கள்) [1] தாய்லாந்தின் மக்கள் தொகையில் 5 விழுக்காடு அளவிற்கு எனவும் குறிப்பிடப்படுகிறது.[2][3][4] பெரும்பாலான தாய்லாந்து இசுலாமியர்கள் சன்னி இசுலாம் பிரிவினைச் சார்ந்தவர்கள் ஆவர். உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர்ந்தோர்களை உள்ளடக்கிய பல்வேறு பண்பாடுகளைத் தாய்லாந்து கொண்டுள்ளது.[5][6]

மக்கள் தொகையியலும் புவியியலும்[தொகு]

நாட்டின் பெரும்பான்மையான இசுலாமியர்கள் சத்தூன், யாலா, பட்டானி மற்றும் நாரதிவாட் ஆகிய நான்கு தென்கிழக்கு மாகாணங்களில், பெரும்பான்மையான மக்களைக் கொண்டுள்ளனர் என்று பிரபலமான கருத்தாக்கங்கள் தெரிவிக்கின்றன.[7] இருந்த போதிலும், தாய்லாந்தில் வாழும் இசுலாமியர்களின் 18 சதவீதத்தினர் மட்டுமே அந்த மூன்று மாகாணங்களில் வாழ்ந்து வருவதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மீதமுள்ள விழுக்காட்டினர் தாய்லாந்து முழுமைக்கும் பரவியுள்ளனர். குறிப்பாக பேங்காக் மற்றும் தெற்குப் பகுதி முழுமையிலும் அதிக அளவிலான மக்கள் செறிவு காணப்படுகிறது.

தாய்லாந்தின் தேசிய புள்ளிவிபர அறிக்கையின்படி, 2005 ஆம் ஆண்டில், தெற்கு தாய்லாந்தில் உள்ள 15 வயதிற்கு மேலான பொதுமக்களில் 30.4 சதவிகிதத்தை இசுலாமியர்கள் உருவாக்குவதாகவும். நாட்டின் இதர பகுதிகளில் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே இசுலாமியர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.[8]

வரலாறு[தொகு]

தொடக்க கால நவீன தாய்லாந்தில் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து வந்த இசுலாமியர்கள் திருநங்கைகளாக தாய் அரண்மனையிலும் நீதிமன்றத்திலும் பணியாற்றினர்.[9][10]

இனம் மற்றும் அடையாளம்[தொகு]

சின் ஆவில் உள்ள பான் ஹோ மசூதி

தாய்லாந்தில் உள்ள இசுலாமிய மக்கள் தொகையானது பலவிதமான மரபுசார்ந்த குடிகளில் சீனா, பாக்கித்தான், இந்தியா, கம்போடியா, வங்காளதேசம், மலேசியா மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் இருந்து வந்தவர்களும் தாய்லாந்தின் பூர்வ குடிமக்களையும் உள்ளடக்கியதாகும். மேலும், தாய்லாந்தில் உள்ள இசுலாமியர்களின் மூன்றில் இரண்டு பகுதியினர் தாய் மலாய் இன மக்களைச் சார்ந்தவர்கள் ஆவர்.[11]

பூர்வகுடி தாய்லாந்து மக்கள்[தொகு]

பெரும்பாலான தாய்லாந்து இசுலாமியர்கள், இன ரீதியாகவும், மொழியியல் ரீதியாகவும் தாய்லாந்தின் பூர்வீக குடிமக்களாக உள்ளனர். இவர்கள் மரபுவழியாக வந்த இசுலாமியர்களாகவோ, திருமண உறவின் காரணமான இசுலாமியர்களாகவோ அல்லது சமீபத்தில் விசுவாசத்தின் அடிப்படையில் இசுலாமியர்களாக மாறியவற்களாகவோ உள்ளனர்.  பாரம்பரிய தாய்லாந்து வாழ் இசுலாமியர்கள் முக்கியமாக மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் வாழ்கிறார்கள் - இசுலாமிய சமுதாயத்தினர் முழுமையான சமூகமாகவும், பல்வேறு இனமக்கள் கலந்த குடியிருப்புகளிலும் பல்வேறு விதமாக வசித்து வருகின்றனர்.[12]

மலேசிய இசுலாமியர்கள்[தொகு]

தெற்கு உள்பகுதி மாகாணங்களில் உள்ள பெரும்பான்மை இசுலாமியர்கள் (அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தொைகயில் 80 விழுக்காடு) மலேசியாவைச் சார்ந்தவர்கள் ஆவர்.[13]தாய்லாந்தில் வாழும் மலாய் மக்கள் தாய்லாந்து மொழிக்குடும்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட கெலான்டன்-பட்டானி மலாய் மொழியைப் பேசுகிறார்கள்.[14] இது தாய்லாந்தில் வாழும் மலாய் இசுலாமியர்களுக்கு கலாச்சார ரீதியாக ஒரு தனித்த அடையாளத்தைச் சேர்க்கிறது.

தெற்குப் பகுதியில் உள்ள மலாய் வம்சாவளி பூர்வகுடி மக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதற்கு இப்பகுதியின் வரலாற்றுத் தன்மை காரணமாக இருந்துள்ளது. இது ஒரு காலத்தில் 19 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒரு இஸ்லாமிய மலாய் இராச்சியம் (பட்டாணிப் பேரரசு) என அறியப்பட்ட பகுதியாக இருந்தது. ஆனால், பின்னர் இப்பகுதி தாய்லாந்துடன் இணைக்கப்பட்டது.[15] இதே போன்று, வடக்கு மலேசியப் பகுதியில் தாய்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறுபான்மை சமுதாயமும் உள்ளது.

சீன இசுலாமியர்கள்[தொகு]

தொலைதூர வடக்குப் பகுதியிலும், குறிப்பிட்ட சில மத்திய மற்றும் தெற்கு நகர்ப்புறப் பகுதிகளிலும், பூர்வகுடி சீன இசுலாமியர்களின் ஆதியைக் கொண்ட தாய் இசுலாமியர்களின் சிறு குழுக்கள் காணப்படுகின்றன.[16][17] பெரும்பாலான சீன முஸ்லிம்கள் சின் ஹா என்றழைக்கப்படும் ஒரு குழுவினரைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். இருந்த போதிலும் பெரும்பாலான சின் ஹா மக்கள் இசுலாமியர்களாக இருப்பதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "US Department of State, Thailand". State.gov. பார்க்கப்பட்ட நாள் 25 April 2010.
  2. "Thailand’s southern insurgency: No end in sight". The Economist. 2 January 2016. https://www.economist.com/news/asia/21684829-southern-village-tries-remain-united-divisions-elsewhere-grow-no-end-sight. பார்த்த நாள்: 3 January 2016. 
  3. Joseph, Suad; Naǧmābādī, Afsāna, தொகுப்பாசிரியர்கள் (2003). Encyclopedia of Women and Islamic Cultures: Family, Law and Politics (illustrated ). BRILL. பக். 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004128187. 
  4. Raghavan, Chitra; Levine, James P., தொகுப்பாசிரியர்கள் (2012). Self-determination and Women's Rights in Muslim Societies. University Press of New England. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781611682809. 
  5. [1] பரணிடப்பட்டது 31 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  6. "thai2arab.com". thai2arab.com. Archived from the original on 13 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2013.
  7. "Muslim in Thailand". பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.
  8. "สรุปผลการสํารวจการเข??ารวมก ?? จกรรมทางว ิ ัฒนธรรม พ.ศ. 2548" (PDF). Service.nso.go.th. பார்க்கப்பட்ட நாள் 2 December 2013.
  9. Peletz (2009), p. 73 Gender Pluralism: Southeast Asia Since Early Modern Times, p. 73, கூகுள் புத்தகங்களில்
  10. Peletz (2009), p. 73 Gender Pluralism: Southeast Asia Since Early Modern Times, p. 73, கூகுள் புத்தகங்களில்
  11. "Thailand". Lcweb2.loc.gov. பார்க்கப்பட்ட நாள் 2 December 2013.
  12. Gilquin, Michel (2002). The Muslims of Thailand. IRASEC (Silkworm Books). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:974-9575-85-7. 
  13. "Thailand's southern insurgency: No end in sight". The Economist. 2 January 2016. https://www.economist.com/news/asia/21684829-southern-village-tries-remain-united-divisions-elsewhere-grow-no-end-sight. பார்த்த நாள்: 3 January 2016. 
  14. "Bangkok Post - General news - Yawi-Thai dictionary brings ray of hope". arquivo.pt. Archived from the original on 5 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  15. [2]  பரணிடப்பட்டது 29 ஏப்பிரல் 2015 at the வந்தவழி இயந்திரம்
  16. [3] பரணிடப்பட்டது 20 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம்
  17. Melvin Ember; Carol R. Ember; Ian Skoggard (30 November 2004). Encyclopedia of Diasporas: Immigrant and Refugee Cultures Around the World. Volume I: Overviews and Topics; Volume II: Diaspora Communities. Springer Science & Business Media. பக். 121–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-306-48321-9. https://books.google.com/books?id=7QEjPVyd9YMC&pg=PA121#v=onepage&q&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்லாந்தில்_இசுலாம்&oldid=3587187" இலிருந்து மீள்விக்கப்பட்டது