தாயுமானவன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாயுமானவன், எழுத்தாளர் பாலகுமாரனின் ஒரு புகழ்பெற்ற புதினமாகும். இப்புதினத்தை பாலகுமாரன் தன் வாழ்க்கை அனுபவத்தை தழுவி எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்புதினம் முதலில் ஆனந்த விகடன் கிழமை இதழில் ஒரு தொடர் கதையாக வெளிவந்தது. பின்னர் இதை விகடன் பதிப்பகம் நூல் வடிவில் வெளியிட்டது.

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொழிற்சங்க தலைவராகவும், தலைமை தொழிலாளியாகவும் பணிபுரியும் பரமசிவத்தையும் மனைவி சரஸ்வதியையும் மையமாக கொண்டது இப்புதினம். தொழிற்சாலை அரசியல் காரணமாக ஏற்படும் ஒரு சூழ்நிலையில் தனது தன்மானத்தை காப்பற்றுவதற்காக பரமு வேலையை ராஜினாமா செய்கிறான். வீட்டின் பொருளாதார நிலையை காப்பதற்காக சரசு வேலைக்கு செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், சண்டை சச்சரவுகள், மற்றும் மாறுகிற பந்தங்களை விவரிக்கும் கதை இது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயுமானவன்_(நூல்)&oldid=1660200" இலிருந்து மீள்விக்கப்பட்டது