தாயின் நல்ல பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாயின் நல்ல பெருமாள் என்பவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். இவரது பெயரைக் கல்வெட்டு 'புவனேக வீரத் தொண்டைமானான தாயின் நல்ல பெருமாள் முனையதரையன்' எனக் குறிப்பிடுகிறது.[1] இவர் ஆதித்த வல்லையன் என்னும் படைத்தலைவன் மீது பாடிய ஆறு பாடல்கள் ஆவணப் பாடல்களாகக் கல்வெட்டில் உள்ளன.[2][3]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. தாயினும் நல்ல பெருமாள் என்னும் பெயர் சேலம் மாவட்டம் ஆறகளூர் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான் பெயர்.
  2. சிதம்பரம் கோயில் தெற்குக் கோபுரத்துக்கு எதிரே உள்ள நந்தி மண்டபத்தில் இந்தக் கல்வெட்டு உள்ளது.
  3. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் புவனேக வீரன் என்னும் பட்டம் எய்தி அரசேறிய 1248-ஆம் ஆண்டு இது செதுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயின்_நல்ல_பெருமாள்&oldid=2717810" இலிருந்து மீள்விக்கப்பட்டது