தாயத் சங்கரன்
தாயத் சங்கரன் (Thayat Sankaran, 1924 - 1983) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், அரசியல்வாதி, விடுதலைச் செய்ற்பாட்டாளர் ஆவார்.[1] சங்கரன் 1924 ஆம் ஆண்டு ஆகத்து 5 ஆம் நாள் தலச்சேரிக்கு அருகிலுள்ள பன்னியன்னூரில் பிறந்தார். ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் கோழிக்கோடு கணபத் உயர்நிலைப் பள்ளியில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், முதுகலைப் பட்டம் பெற்று பல்கலைக்கழக அளவில் ஆசிரியரானார்.[2] இவர் இந்திய தேசிய காங்கிரசிலும், பின்னர் பிரஜா கட்சியிலும், பிரஜா சோசலிசக் கட்சியிலும் பணியாற்றி, பின்னர் இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார்.[3] கோழிக்கோட்டில் இருந்து வெளியாகும் இடதுசாரி சார்பு வாரார்நித செய்தித்தாளான விப்லவத்தின் ஆசிரியராக இருந்தார். நக்சல் வர்கீசின் மரணம் குறித்த சர்ச்சைக்குரிய எழுத்துக்களைத் தொடர்ந்து தாயத் விப்லம் இதழ் பணியில் இருந்து விலகினார். 1982–85 காலகட்டத்தில், இவர் தேசாபிமானி வார இதழின் ஆசிரியராக இருந்தார். யாருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இலக்கியத்திலும் அரசியலிலும் தனது கருத்துக்களைத் துணிச்சலாக வெளிப்படுத்தினார். இவர் கேரள கிரந்தசாலா சங்கம் மற்றும் புரோகமான கலா சாகித்ய சங்கத்துடன் தொடர்புடையவர். இவர் பல புத்தகங்களை வெளியிட்டார். இவரது படைப்பான மானசிகமயா ஆதிமதம் 1968 ஆம் ஆண்டு இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. இவர் 1983 மார்ச் 23 அன்று பம்பாயில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் இறந்தார்.[4]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
[தொகு]- புதிய பரிப்ரேக்ஷயம் (പുതിയ പരിപ്രേക്ഷ്യം)
- அனாச்சாதனம் (അനാച്ഛാദനം)
- அந்தர்தர்சனம் (അന്തർദ്ദർശനം)
- சீதயும் நிரூபகன்மாரும் (സീതയും നിരൂപകന്മാരും)
- சாஹித்ய தீப்தி (സാഹിത്യദീപ്തി)
- சிந்தா சௌரபம் (ചിന്താസൗരഭം)
- துரவஸ்த: ஒரு படனம் (ദുരവസ്ഥ: ഒരു പഠനം)
- ஆசான்: நவோத்தானத்தின்றெ கவி (ആശാൻ: നവോത്ഥാനത്തിന്റെ കവി)
- வள்ளத்தோல்: நவயுகத்தின்றெ கவி (വള്ളത്തോൾ: നവയുഗത്തിന്റെ കവി )
- ஜெயபிரகாஷ் நாராயணன் (ജയപ്രകാശ് നാരായണൻ)
- பார்லமெந்றறி ஜனாதிபத்யம் (പാർലമെന്ററി ജനാധിപത്യം)
- பிறவியும் வளர்ச்சயும் (പിറവിയും വളർച്ചയും)
- பாரதீய நவோத்தானத்திந்றெ ரூபரேக (ഭാരതീയ നവോത്ഥാനത്തിന്റെ രൂപരേഖ )
- இந்தியன் வித்யாப்யாசம் நூற்றாண்டுகளிலூடெ (ഇന്ത്യൻ വിദ്യാഭ്യാസം നൂറ്റാണ്ടുകളിലൂടെ)
- மானசிகமாய அடிமத்தம் (മാനസികമായ അടിമത്തം)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pillai, Erumeli Parameswaran (1998). മലയാള സാഹിത്യം കാലഘട്ടങ്ങളിലൂടെ: സാഹിത്യ ചരിത്രം (in மலையாளம்). Prathibha Books. ISBN 978-81-240-0615-3.
- ↑ "മാർച്ച് 23: വിപ്ലവകാരിയായ ഗദ്യസാഹിത്യകാരൻ, തായാട്ട് ശങ്കരൻ ഓർമ്മ ദിനം |" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-03-22. Retrieved 2023-03-31.
- ↑ Haridas, Harikrishnan (2022-10-20). "കാലഘട്ടത്തിന്റെ ചരിത്രസാക്ഷ്യം". Kesari Weekly (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-31.
- ↑ "തായാട്ട് ശങ്കരന്" (in மலையாளம்). கேரளச் சாகித்திய அகாதமி. Archived from the original on 18 July 2017. Retrieved 22 February 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- Works by Thayat Sankaran Grandham.in (in Malayalam)