உள்ளடக்கத்துக்குச் செல்

தாம்ராய் ரதயாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாம்ராய் ஜகன்னாதர் தேரோட்டம் (Dhamrai Rathayatra) (தாம்ராய் ஜகந்நாத் ரோத் எனவும் அழைக்கப்படுகிறது) வங்காளதேசத்தின் தாம்ராயில் அமைந்துள்ள இந்துக் கடவுளான ஜகன்னாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேர்க் கோயிலாகும். ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டம் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் புகழ்பெற்ற இந்து பண்டிகையாகும். வங்காளதேசத்தின் இந்து சமூகத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று [1] ஜகந்நாதர் இந்துக்களின் புனிதமான இந்து மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரம் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது (படைக்கும் கடவுள் பிரம்மா, பாதுகாப்பவர் விஷ்ணு, சிவன் அழிப்பவர்). ஜகன்னாதர் பகவான் கிருஷ்ணரின் தெய்வ வடிவமாகவும் நம்பப்படுகிறது.

ஆயிரக்கணக்கான இந்து பக்தர்களுக்கு, இது ஒரு புண்ணிய செயலாகக் கருதப்படுகிறது. மேலும், தேர்களுடன் வரும் பெரிய ஊர்வலங்கள் மேளம், எக்காளங்களுடன் பக்தி பாடல்களை இசைக்கின்றன. தேரின் மீது வரும் ஜகன்னாதரை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. துறவிகள், கவிஞர்கள் மற்றும் புனித நூல்கள் இந்த சிறப்புத் திருவிழாவை போற்றியுள்ளன.

கட்டமைப்பு

[தொகு]

வெளியிடப்படாத ஆவணங்கள் மற்றும் பதிவுகள் மூலம் தாம்ராய் ரோத் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. பங்களா ஆண்டு 1079 (கிரிகோரியன் நாட்காட்டியில் 1672 உடன் தொடர்புடையது) முதல் 1204 (கி.பி. 1697) வரை இருந்த ரோத் மூங்கில்களால் செய்யப்பட்டது என்று அந்த பதிவுகளிலிருந்து அறியப்படுகிறது. இருப்பினும், இந்த மூங்கில் செய்யப்பட்ட ரோத் எவ்வாறு மரத்தால் ஆனது என்று தெரியவில்லை. 1204 முதல் 1340 வரையிலான காலப்பகுதியில் பாலியாட்டியின் ஜமீந்தார் (இப்போது சதுரியா உபாசிலாவில் உள்ளது) நான்கு 'ரோத்'களை உருவாக்கி அதன் கட்டுமானத்திற்கான அனைத்து செலவுகளையும் வழங்கியதாக வெளியிடப்படாத ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

சான்றுகள்

[தொகு]
  1. "Rathajatra festival today". The New Nation, Dhaka(subscription required). 24 June 2009 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924203244/http://www.highbeam.com/doc/1P3-1758735781.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்ராய்_ரதயாத்திரை&oldid=3666486" இலிருந்து மீள்விக்கப்பட்டது