தாம்கினி கணவாய்
தாம்கினி கணவாய் என்பது இந்திய மாநிலமான மகராட்டிரத்தில் முல்சி மற்றும் தாம்கினிக்கிடையே அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும்.[1]
மேற்குத் தொடர்ச்சி மலையின் முகட்டில் அமைந்துள்ள தாம்கினி கணவாய் அதன் அழகிய சூழல், அருவிகள், குளங்கள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கு பெயர்பெற்றதாகும். இக்கணவாயைப் பார்க்க ஆகத்து மற்றும் செப்டம்பர் ஏற்ற மாதங்களாகும். தாம்கினி கணவாய், முல்சி அணையிலிருந்து தொடங்கி பழத்தொட்ட அருந்தகத்தில் முடிகிறது.
வரலாறு
[தொகு]முன்பு டாடா சக்தி நிறுவனத்திடம் நிலபரப்பு இருந்ததால், தாம்கினி கணவாய் வழியே செல்ல அனுமதியில்லை. கொன்கனிலிருந்து பூனே மற்றும் லோனாவாலா செல்ல இவ்வழித்தடம் முன்வைக்கப்பட்டுள்ளது .
சாலை
[தொகு]தாம்கினி கணவாய், சகாயத்திரி மலைத்தொடரினுடாகச் சென்று முல்சி-தாம்கினியில் இணைந்து, பூனேவிலிருந்து கொன்கனிற்கு வழியாக அமைந்துள்ளது. இக்கணவாயின் நீளம் 15கிமீ. இப்பகுதியில் அதிகமான மேடு பள்ளங்கள் இருக்கின்றன. மாரிக் காலத்தில், இப்பகுதி பல அருவிகள், சிறு ஓடைகள் என பச்ச பசேலன காட்சியளிக்கின்றன. பூனேவிலிருந்து கோவா நெடுஞ்சாலையில் (NH17) செல்ல பல மாநில பேருந்துகள் உள்ளன.
மும்பையிலிருந்து, மும்பை-கோவா நெடுஞ்சாலை வழியாக கொலாது சென்று, பின்பு, பூனே-முல்சி அணை காயலினை கடந்து தாம்கினி கணவாயினை அடையலாம். இக்கணவாய் கொலாது மற்றும் காயலுக்கு இடையே அமைந்துள்ளது. இது பார்பத்ற்கு பச்சைக் கம்பளம் போர்தியது போல் இருக்கும். இங்கு ஆரவாரத்துடன் ஓடும் ஓடைகள், கரு மேகங்கள் மற்றும் அவ்வப்போது தோன்றும் அருவிகள் என பார்வையாளர்களை கவருகிறது.
இக்கணவாயிலிருந்து, முல்சி அணை காயல் சாலை வழியாக பால்சியில் உள்ள அருவிக்கு செல்லலாம். இந்நாட்களில் இவ்வருவியில் கூட்டம் அலைமோதுகிறது. இவ்வருவியைத் தாண்டி கோலாது, உள்ளது. இங்குள்ள குண்டலிகா ஆற்றில் தெப்பம் ஒட்டுதல் பிரபலமடைந்து வருகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamhini ghat". Archived from the original on 2016-01-24. பார்க்கப்பட்ட நாள் 2018-06-14.
- ↑ घाटवाटा : साठी पायऱ्यांची वाट – घोण्याचा दांड