தாமோதர பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதம அமைச்சர்
மூல்காஜி சாகிப்
தாமோதர பாண்டே
श्री मूलकाजी साहेब
दामोदर पाँडे
தாமோதர பாண்டே
முதல் நேபாள பிரதம அமைச்சர் (மூல்காஜி)
மூல்காஜி
பதவியில்
1799–1804
ஆட்சியாளர்கீர்வான் யுத்த விக்ரம் ஷா
பின்னவர்ரணஜித் பாண்டே
தலைமைப் படைத்தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகிபி 1752
இறப்புகிபி 1804
தேசியம்நேபாளி
பிள்ளைகள்5 மகன்கள்: ரணகேஸ்வர் பாண்டே, ரணபம் பாண்டே, ராணதல் பாண்டே, ராணா ஜங் பாண்டே, கரவீர பாண்டே[1]
பெற்றோர்
  • கலு பாண்டே (father)
Military service
பற்றிணைப்பு நேபாளம்
தரம்தலைமைப் படைத்தலைவர்
போர்கள்/யுத்தங்கள்சீன நேபாளப் போர்

தாமோதர பாண்டே (Damodar Pande) (நேபாளி: दामोदर पाँडे) (1752 – மார்ச் 13, 1804) ஷா வம்ச, நேபாள இராச்சியத்தின் மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் முதல் பிரதம அமைச்சராக, 1799 முதல் 1804 முடிய பதவி வகித்தவர்.[2]

இவரது தந்தை கலு பாண்டே, நேபாள இராச்சியத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் கஜி எனும் பதவியில் அமைச்சர் இருந்தவர். தாமோதர பாண்டே, இமயமலை சத்திரிய இனங்களில் ஒன்றான சேத்திரி பிரிவைச் சேர்ந்தவர்.

1752ல் கோர்காவில் பிறந்த தாமோதர பாண்டே, சீன - நேபாளப் போரின் போது, நேபாளப் படைத்தலைவராக பணியாற்றியவர். [3][4][5]

அரசியல்[தொகு]

நேபாள மன்னர் ராணா பகதூர் ஷாவிற்கு (ஆட்சிக் காலம்: 1777 - 1799) எதிரான மக்கள் போராட்டத்தால் வாரணாசிக்கு நாடு கடத்தப்பட்ட போது[6], சிறு குழந்தையாக இருந்த கீர்வான் யுத்த விக்ரம் ஷாவை அரியணை ஏற்றி, அவரது மெய்காப்பாளராகவும், அமைச்சராகவும் தாமோதர பாண்டே நியமிக்கப்பட்டார்.

4 மார்ச் 1804ல் முன்னாள் மன்னர் ராணா பகதூர் ஷா நேபாளம் திரும்பி, நேபாளத்தின் தலைமை அமைச்சராக (முக்தியார்) பொறுப்பேற்றார். 13 மார்ச் 1804ல் ராணா பகதூர் ஷாவின் உத்திரவுப்படி, தாமோதர பாண்டேவை தன்கோட்டில் வைத்து தலையை கொய்து கொல்லப்பட்டார்.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Acharya 2012, ப. 54.
  2. [https://web.archive.org/web/20161220102904/http://nepalarmy.mil.np/history.php?page=three பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம் Nepal Army
  3. "Tibetan and Nepalese Conflict". Official website of Nepal Army.
  4. Nepal 2007, ப. 58.
  5. Acharya 2012, ப. 55.
  6. "Advanced history of Nepal" by Tulasī Rāma Vaidya
  7. Nepal:The Struggle for Power (Sourced to U.S. Library of Congress)

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமோதர_பாண்டே&oldid=3759554" இலிருந்து மீள்விக்கப்பட்டது