தாமோதரன் எம். வாசுதேவன்
பேராசிரியர் தாமோதரன் எம். வாசுதேவன் (Damodaran M. Vasudevan) என்பவர் அமிரிதா விசுவ வித்யாபீட மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும், இந்தியாவின் கொச்சியின் அமிரிதா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வராகவும் இருந்தார். 31.12.2009 அன்று ஓய்வு பெற்றபின்னும், கொச்சியின் அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் தலைவராகத் தொடர்கிறார்.[1] திருச்சூர் ஜூபிலி மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ ஆராய்ச்சிக்கான ஜூபிலி மையத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை முடித்த பின்னர், 1971ஆம் ஆண்டில் அனைத்திந்திய இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உயிர் வேதியியலில் எம்.டி. பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டில் ராயல் நோயியல் கல்லூரி சகாவாக ஆனார். இவர் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மேலும் புற்றுநோயிலும் விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். இங்கிருந்து ஓய்வு பெற்ற பின்னர், மங்களூரில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி மற்றும் சிக்கிம் மணிப்பால் மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் முதல்வராக 2000இல் சேர்ந்தார். 2002 முதல் தற்போதைய பணியாற்றும் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார்.
தேசிய மருத்துவ அறிவியல் குழுமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகாவான வாசுதேவன்,[2] இந்திய மருத்துவ குழுவின் மதிப்புமிக்க மரு. பி.சி.ராய் விருதை 1994ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து மருத்துவ கற்பித்தலில் சிறந்து விளங்கியமைக்காகப் பெற்றார். மருத்துவர் வாசுதேவன் தனது மாணவர்களால் அன்பான நினைவுகூரப்படுவார். உறுதியான ஆசிரியர், வழிகாட்டி மற்றும் உயிர் வேதியியலில் அறிஞர் எனப் பாராட்டப்படுகிறார். இவர் மருத்துவ மாணவர்களுக்கான உயிர் வேதியியல் பாடநூலை எழுதியுள்ளார்.[3] முதல் பதிப்பு 1995இல் வெளியிடப்பட்டது. 2016இல் எட்டாவது பதிப்பும் 9வது பதிப்பு 2019இல் வெளியானது. இந்த புத்தகம் இப்போது சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் மற்றும் சிலோவாக்கியா பதிப்புகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளன. மருத்துவ பாடநூல் உலகின் 23 நாடுகளில் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. டாக்டர் வாசுதேவன் பல் மாணவர்கள், துணை மருத்துவ மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் 30 மாணவர்களின் முனைவர் பட்ட வழிகாட்டியாகவும் உள்ளார். 230க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சக மதிப்பாய்வு அறிவியல் ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr. Damodaran Vasudevan". www.amrita.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
- ↑ "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
- ↑ DM Vasudevan; Sreekumari S; Kannan Vaidyanathan (2019). Textbook of Biochemistry for Medical Students (Ninth edition (2019) ed.). India: Jaypee Brothers Medical Publishers (published 1995). p. 824. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-89034-98-1.
{{cite book}}
: Unknown parameter|மொழி-=
ignored (help)