உள்ளடக்கத்துக்குச் செல்

தாமிர சிட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(II) சிட்ரேட்டு
Copper(II) citrate

நீரற்ற தாமிரம்(II) சிட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(II) 2-ஆக்சிடோப்புரோப்பேன்-1,2,3-டிரைகார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
குப்ரிக் சிட்ரேட்டு; இருதாமிர சிட்ரேட்டு
இனங்காட்டிகள்
866-82-0 [1]
6020-30-0
ChemSpider 21171752
32700143
EC number 212-752-9
InChI
  • InChI=1S/C6H7O7.2Cu/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;;/h1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);;/q-1;2*+2/p-3
    Key: FWBOFUGDKHMVPI-UHFFFAOYSA-K
  • InChI=1S/2C6H7O7.4Cu.5H2O/c2*7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;;;;;;;;;/h2*1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);;;;;5*1H2/q2*-1;4*+2;;;;;/p-6
    Key: NBHBWRHMKGDJMS-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 14454876
71586843
  • C(C(=O)[O-])C(CC(=O)[O-])(C(=O)[O-])[O-].[Cu+2].[Cu+2]
  • C(C(=O)[O-])C(CC(=O)[O-])(C(=O)[O-])[O-].C(C(=O)[O-])C(CC(=O)[O-])(C(=O)[O-])[O-].O.O.O.O.O.[Cu+2].[Cu+2].[Cu+2].[Cu+2]
UNII F70D117TTU
L40S1PLZ5W
பண்புகள்
C6H4Cu2O7 (நீரிலி); C6H4Cu2O7·2.5H2O (அரைபெண்டாநீரேற்று)[1]
வாய்ப்பாட்டு எடை 315.18 கி·மோல்-1 (நீரிலி); 360.22 கி·மோல்-1 (2.5-ஐதரேட்டு)[2]
தோற்றம் நீலப்பச்சை திண்மம்[2]
அடர்த்தி 1.667 கி·செ.மீ-3[2]
நீரில் சிறிதளவு கரையும்; நீர்த்த அமிலங்கள் நன்றாக கரையும் மற்றும் நீர்த்த அமோனியாவிலும் கரையும்[3]
தீங்குகள்
GHS குறியீடு:[1]
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
இடர் அறிக்கைகள்
H302, H410
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

தாமிர சிட்ரேட்டு (Copper citrate) என்பது C6H4Cu2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிர(II) சிட்ரேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. சிட்ரிக் அமிலத்தின் தாமிரம் உப்பாக தாமிர சிட்ரேட்டு வகைப்படுத்தப்படுகிறது. இது பல்வேறு நீரேற்ற நிலைகளில் காணப்படுகிறது. வணிகரீதியாகக் கிடைக்கும் இச்சேர்மம் பொதுவாக நீலப்பச்சை நிறம் கொண்ட திண்மப் பொருளாக உள்ளது. தொழில்துறை, விவசாயம் மற்றும் சில ஊட்டச்சத்துத் துணைப்பொருட்களில் தாமிரத்திற்கான ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

பண்புகள்

[தொகு]

நீரற்ற வடிவம் நீல நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. அதே சமயம் நீரேற்று வெளிர் பச்சை நிறத்தில் உள்ளது.[2]

தயாரிப்பு

[தொகு]

தாமிர(II) சல்பேட்டு போன்ற ஒரு கரையக்கூடிய தாமிர(II) உப்பை, டிரைசோடியம் சிட்ரேட் அல்லது டிரைபொட்டாசியம் சிட்ரேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தாமிர(II) சிட்ரேட்டைத் தயாரிக்கலாம்; வினைச் சூழல்களைப் பொறுத்து, வெவ்வேறு நீரேற்று விகிதங்களைக் கொண்ட சேர்மங்களைப் பிரித்தெடுக்க இயலும்.[4]

பயன்கள்

[தொகு]

தாமிர(II) சிட்ரேட்டு சில விவசாய நுண்ணூட்டச் சேர்மங்களிலும், தனியுரிமைச் சத்துணவுச் சேர்மங்களிலும் ஒரு தாமிர மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சிச் சூழல்களில் இது ஒரு வினையாக்கியாகவும் தாமிரம் மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Cupric citrate". PubChem. Retrieved 2025-11-17.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Copper(II) Citrate 2.5-Water product data". FUJIFILM Wako. Retrieved 2025-11-17.
  3. "Copper citrate - supplier data and solubility notes". Lohmann Minerals. Retrieved 2025-11-17.
  4. "Cupric citrate — product information". Sigma-Aldrich / Merck. Retrieved 2025-11-17.
  5. "Copper fungicides for organic and conventional disease management in vegetables". Cornell University. Retrieved 2025-11-17.
  6. "Copper supplements: product example". Pure Encapsulations (product page). Retrieved 2025-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர_சிட்ரேட்டு&oldid=4487071" இலிருந்து மீள்விக்கப்பட்டது