தாமிர இறக்கை இலைக்கோழி
Jump to navigation
Jump to search
தாமிர இறக்கை இலைக்கோழி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | சரத்ரீபார்மசு |
குடும்பம்: | Jacanidae |
பேரினம்: | Metopidius Wagler, 1832 |
இனம்: | M. indicus |
இருசொற் பெயரீடு | |
Metopidius indicus (Latham, 1790) | |
![]() |
தாமிர இறக்கை இலைக்கோழி (Bronze-winged jacana, Metopidius indicus) அல்லது தாமரை இலைக்கோழி) என்பது இலைக்கோழி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை இந்தியா, தென்கிழக்காசியா, தெற்கு சீனா, தெற்கு சுமத்ரா, மேற்கு ஜாவா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை[2].
தோற்றம்[தொகு]
பொதுவாகப் பார்த்தால் இது நீலத் தாழைக்கோழி போல காணப்படுகிறது. கௌதாரியின் அளவு உள்ளது. இதன் தலை, கழுத்து, மார்பு ஆகியன மினுமினுக்கும் கறுப்பு நிறமுடையதாகவும், இறகுகளும், முதுகும் தாமிர நிறத்தில் இருக்கும்.
கள இயல்புகள்[தொகு]
இலைக்கோழிகளுக்கு உரிய தாமரையிலையின் மீது நடக்கும் இயல்பு இதற்கும் உண்டு.
மேற்கோள்[தொகு]
- ↑ BirdLife International (2012). "Metopidius indicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bronze-winged Jacana -- Range Map".