தாமிர(II) குளோரேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(2+)
குளோரேட்டு நீரேற்று (1:2:4) | |
| வேறு பெயர்கள்
தாமிர(II) குளோரேட்டு;
குப்ரிக் குளோரேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 14721-21-2 13478-36-9 | |
| ChemSpider | 2340508 |
| EC number | 238-767-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 3014850 நீரிலி 3083246 நான்கு நீரேற்று |
| |
| UNII | 242533NAM2 TVV0TW380J |
| UN number | 2721 |
| பண்புகள் | |
| Cu(ClO3)2•4H2O | |
| வாய்ப்பாட்டு எடை | 302.509 |
| தோற்றம் | இளம் நீலம் |
| அடர்த்தி | 2.26 கி செ.மீ−3 |
| உருகுநிலை | 73 °செல்சியசு (நீரிலி) 65 °செல்சியசு (அறுநீரேற்று) (சிதைவடையும்) |
| நீரில் நன்கு கரையும் நான்கு நீரேற்று [1][2] 54.59 கி/100 மி.லி (-31 °செல்சியசு) 57.12 கி/100 மி.லி (-21 °செல்சியசு) 58.51 கி/100 மி.லி (0.8 °செல்சியசு) 62.17 கி/100 மி.லி (18 °செல்சியசு) 66.17 கி/100 மி.லி (45 °செல்சியசு) 69.42 கி/100 மி.லி (59.6 °செல்சியசு) 76.9 கி/100 மி.லி (71 °செல்சியசு) அறுநீரேற்று[3] 141 கி/100 மி.லி (0 °செல்சியசு) 164.4 கி/100 மி.லி (18 °செல்சியசு) 195.6 கி/100 மி.லி (45 °செல்சியசு) 332 கி/100 மி.லி (70 °செல்சியசு) | |
| கரைதிறன் | அசிட்டோன் மற்றும் எத்தனாலில் கரையும் (அறுநீரேற்று) |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
| புறவெளித் தொகுதி | Pcab |
| Lattice constant | a = 12.924 Å, b = 9.502 Å, c = 7.233 Å |
| ஒருங்கிணைவு வடிவியல் |
உருக்குலைந்த எண்முகம் |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள்
|
ஆக்சிசனேற்றி |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தாமிர(II) குளோரேட்டு (Copper(II) chlorate) என்பது Cu(ClO3)2•4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரம் உலோகமும் குளோரேட்டு எதிர் மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தாமிர குளோரேட்டு ஓர் ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.[4] பொதுவாக Cu(ClO3)2•4H2O என்ற வாய்ப்பாடுடைய நான்கு நீரேற்று வடிவத்தில் காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]வெப்பமான ஒரு மோலார் தாமிர சல்பேட்டு கரைசலை பேரியம் குளோரேட்டுடன் சேர்ப்பதன் மூலம் தாமிர(II) குளோரேட்டு சேர்மத்தைத் தயாரிக்கலாம். இச்செயல்முறையின் விளைவாக பேரியம் சல்பேட்டு வீழ்படிவாகிறது. இக்கரைசலை வடிகட்டி, குளிரச்செய்து, வெற்றிடத்தில் ஆவியாக்கும்போது நீல நிறப் படிகங்கள் உருவாகின்றன.[5]
- CuSO4 + Ba(ClO3)2 → Cu(ClO3)2 + BaSO4(திண்மம்)
பண்புகள்
[தொகு]1902-ஆம் ஆண்டில், ஏ. மியூசர் என்பவர் தாமிர(II) குளோரேட்டின் கரைதிறனை ஆராய்ந்தார்; அப்போது, 73 °செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையில் அது உருகிச் சிதையத் தொடங்கி, குளோரின் வாயுவை வெளியிடுவதை கண்டறிந்தார்.[6]
தாமிர(II) குளோரேட்டைச் சூடுபடுத்தும்போது அது சிதைவடைந்து, குளோரின், ஆக்சிஜன் மற்றும் குளோரின் டை ஆக்சைடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மஞ்சள் நிற வாயுவை வெளியிடுகிறது.[7] இச்சிதைவின் இறுதியில், ஒரு கார காப்பர் உப்பான பச்சை நிறத் திண்மம் எஞ்சுகிறது.[8]
- 2 Cu(ClO3)2 → 2 CuO + Cl2 + 3 O2 + 2 ClO2
கந்தகமானது தாமிர(II) குளோரேட்டுடன் அதிக வினைத்திறன் கொண்டது. எனவே, எடுத்துக்காட்டாக வெடிபொருட்கள் தயாரிக்கும்போது, இவ்விரு வேதிப்பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து மாசுபடாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.[9]
கட்டமைப்பு
[தொகு]தாமிர(II) குளோரேட் பொதுவாக ஒரு நான்கு நீரேற்றாகப் படிகமாகிறது; இருப்பினும், ஓர் அறுநீரேற்று வடிவ தாமிர(II) குளோரேட்டும் அறியப்படுகிறது. நான்குநீரேற்று தாமிர(II) குளோரேட்டு (Cu(ClO3)2•4H2O) ஒரு செஞ்சாய்சதுரப் படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[10] ஒவ்வொரு தாமிர அணுவும் எண்முக வடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது நான்கு நீர் மூலக்கூறுகளின் ஆக்சிசன் அணுக்களாலும், ஒன்றுக்கொன்று எதிரெதிரே அமைந்துள்ள குளோரேட்டு தொகுதிகளின் இரண்டு ஆக்சிசன் அணுக்களாலும் சூழப்பட்டுள்ளது. குளோரேட்டை விட நீர் மூலக்கூறு தாமிரத்திற்கு மிக அருகில் உள்ளது. 2.396 Å உடன் ஒப்பிடும்போது 1.944 Å, என்பது இயான்-டெல்லர் விளைவைக் காட்டுகிறது. குளோரேட்டு தொகுதிகள் ஓர் உருக்குலைந்த நான்முகியின் வடிவத்தைக் கொண்டுள்ளன. 298 கெல்வின் (25 °செல்சியசு) வெப்பநிலையில், ஒவ்வொரு குளோரேட்டு அயனியில் உள்ள குளோரின்-ஆக்சிசன் இடைவெளிகள் முறையே 1.498, 1.488 மற்றும் 1.468 Å ஆக உள்ளன. இவற்றில், தாமிரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆக்சிசனுக்கான இடைவெளியே மிக நீண்டதாகும். ∠O-Cu-O (ஆக்சிசன் அணுக்களால் தாமிரத்தில் உருவாக்கப்படும் கோணம்) முறையே 105.2°, 108.3° மற்றும் 106.8° ஆகும். குறைந்த வெப்பநிலைகளில் (233 கெல்வின், −40 °செல்சியசு), நீர் மூலக்கூறுகளுக்கும் தாமிரம்-குளோரேட்டிற்கும் இடையிலான தொலைவு குறைகிறது.[10]
பயன்கள்
[தொகு]1843-ஆம் ஆண்டில், தீச்சுடர்களை நீல நிறமாக்க பிராங்காயிசு-மேரி செர்ட்டியர் என்பவர் டெட்ரா அமீன் தாமிர(II) குளோரேட்டைப் பயன்படுத்தினார். இச்சேர்மம் டெ.அ. தா.கு எனச் சுருக்கமாகவும், Cu(NH3)4(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்டும் குறிப்பிடப்பட்டது. டெட்ரா அமீன் தாமிர(II) குளோரேட்டு மோதலுக்கு உள்ளாகும்போது வெடிக்கும் தன்மை கொண்டது.[11]
நீல நிறப் பட்டாசு வேலைப்பாடுகளில் பயன்படுத்தப்பட்டதால், இவ்விப்பொருள் செர்ட்டியரின் தாமிரம் (செர்ட்டியரின் செம்பு) என அறியப்பட்டது.[12] இருப்பினும், இதன் ஈரத்தை உறிஞ்சும் தன்மையானது ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறது.[13] பிற உலோக உப்புகளுடன் கலக்கும்போது, ஊதா அல்லது இளஞ்சிவப்பு நிறங்களையும் இது உருவாக்கக்கூடும்.[14]
தாமிரத்திற்கு பழுப்பு நிறமூட்டவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Seidell, Atherton (1919). A. Solubilities of inorganic and organic compounds. - 3ed., vol.1 (PDF) (2 ed.). New York: D. Van Nostrand Company. p. 264. Archived from the original (PDF) on 2018-02-03. Retrieved 2018-02-01.
- ↑ Woolley, E. M.; Miyamoto, H.; Salomon, M. (1990). Copper and Silver Halates (PDF) (in ஆங்கிலம்). Elsevier. ISBN 9781483286051.
- ↑ "copper(II) chlorate hexahydrate". chemister.ru (in ஆங்கிலம்).
- ↑ Lewis, Richard J. (2008). Hazardous Chemicals Desk Reference (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 384. ISBN 9780470334454.
- ↑ Suhara, Masahiko (April 1973). "The Temperature Dependence of the Nuclear Quadrupole Resonance of 35Cl in KClO3, AgClO3, Ba(ClO3)2•H2 O, and Cu(ClO3) 2•6H2O". Bulletin of the Chemical Society of Japan 46 (4): 1053–1055. doi:10.1246/bcsj.46.1053. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1973-04_46_4/page/1052.
- ↑ Meusser, A. (April 1902). "Metallchlorate. Studien über die Löslichkeit der Salze. X". Berichte der Deutschen Chemischen Gesellschaft 35 (2): 1414–1424. doi:10.1002/cber.19020350240. https://zenodo.org/record/2290779.
- ↑ Rosenstiehl, A. (September 1876). "The Theory of Formation of Aniline Black". Journal of the Chemical Society (London) 30 (165): 311. https://books.google.com/books?id=PZowAAAAYAAJ&pg=PA311.
- ↑ Waechter, M. Alexander (30 April 2009). "On the preparation and properties of certain chlorates". Philosophical Magazine. 3rd Series 25 (165): 235–237. doi:10.1080/14786444408644978.
- ↑ Bretherick, L. (1990). Bretherick's Handbook of Reactive Chemical Hazards (in ஆங்கிலம்). Butterworths. p. 975. ISBN 9780750601030.
- ↑ 10.0 10.1 Blackburn, A. C.; Gallucci, J. C.; Gerkin, R. E. (1 August 1991). "Structure of tetraaquacopper(II) chlorate at 296 and 223 K". Acta Crystallographica Section B B47 (4): 474–479. doi:10.1107/S0108768191000435. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-7681. பப்மெட்:1930830. Bibcode: 1991AcCrB..47..474B.
- ↑ Kosanke, K. L.; Sturman, Barry T.; Winokur, Robert M.; Kosanke, B. J. (2012). Encyclopedic Dictionary of Pyrotechnics: (and Related Subjects) (in ஆங்கிலம்). Journal of Pyrotechnics. p. 1107. ISBN 9781889526218.
- ↑ Browne, W. H. (1873). The art of pyrotechny (in ஆங்கிலம்). London: The Bazaar. p. 35.
- ↑ Thorpe, Sir Thomas Edward (1924). A Dictionary of Applied Chemistry (in ஆங்கிலம்). Longmans, Green, and Company. p. 520.
- ↑ Hiscox, G. D. (1931). Henley's twentieth century formulas, recipes and processes (in ஆங்கிலம்). Рипол Классик. pp. 609–610. ISBN 9785876347008.
- ↑ Krause, Hugo (1938). Metal coloring and finishing: latest practical methods for coloring and finishing metals of all kinds (in ஆங்கிலம்). Chemical publishing co. of N. Y., inc. p. 96.