தாமிர(I) சல்பைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
தாமிர(I) சல்பைடு
| |
| வேறு பெயர்கள்
குப்ரசு சல்பைடு
சால்கோசைட்டு காப்பர் கிளான்சு | |
| இனங்காட்டிகள் | |
| 22205-45-4 | |
| ChEBI | CHEBI:51114 |
| ChemSpider | 8305611 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10130093 62755 (சால்கோசைட்டு) |
| வே.ந.வி.ப எண் | GL8910000 |
| |
| UNII | 349M3C1RS1 |
| பண்புகள் | |
| Cu2S | |
| வாய்ப்பாட்டு எடை | 159.15 g·mol−1 |
| தோற்றம் | நீலம் முதல் சாம்பல் கருப்பு நிறத் திண்மம்[1] |
| அடர்த்தி | 5.6 g/cm3[1] |
| உருகுநிலை | 1,130 °C (2,070 °F; 1,400 K)[2] |
| கரையாது[1] | |
| கரைதிறன் | அசிட்டிக் காடியில் கரையாது நைட்ரிக் காடி சல்பூரிக் அமிலம் போன்றவற்றில் சிதையும் ஐதரோகுளோரிக் காடியில் சிறிதளவு கரையும்[1] |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
| அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:[3] | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
தாங்கும் திறன் 1 மி.கி/மீ3 ( Cu) |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
தாங்கும் திறன் 1 மி.கி/மீ3 (Cu) |
உடனடி அபாயம்
|
தாங்கும் திறன் 100 மி.கி/மீ3 (Cu) |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் |
|
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தாமிர(I) சல்பைடு (Copper(I) sulfide) என்பது Cu2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இயற்கையில் 'சால்கோசைட்டு எனும் கனிம வடிவில் காணப்படுகிறது. இது Cu1.997S முதல் Cu2.000S வரையிலான ஒரு குறுகிய அளவிலான விகிதவியல் வரம்பைக் கொண்டுள்ளது.[4] இதன் மாதிரிகள் பொதுவாக கருப்பு நிறத்தில் இருக்கும்.
கட்டமைப்பு
[தொகு]
விகிதவியல்
[தொகு]தாமிர(I) சல்பைடின் இரண்டு வடிவங்கள் (ஓர் இருவடிவத்துவம்) அறியப்படுகின்றன. குறைந்த வெப்பநிலை ஒற்றைச்சாய்வு படிக வடிவம் என அழைக்கப்படுவது, அலகு செல்லில் 96 தாமிர அணுக்களைக் கொண்ட ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது.[5] மற்றொன்று 104 °செல்சியசு (219 °பாரங்கீட்டு)-வெப்பநிலைக்கு மேல் நிலைப்புத்தன்மை கொண்ட அறுகோண வடிவமாகும்.[6] இதன் கட்டமைப்பு சமதள 3 ஒருங்கிணைப்பில் உள்ள தாமிர அணுக்களுடன், கந்தக அணுக்களின் அறுகோண நெருக்க அடுக்கப்பட்ட வரிசையை ஒத்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. மாதிரிப் படிகத்தின் இரட்டைமையாக்கம் காரணமாக, இவ்வமைப்புக்குத் தொடக்கத்தில் ஒரு செஞ்சாய்சதுர செல் ஒதுக்கப்பட்டது.
விகிதவியலுக்கு ஒவ்வாத வடிவம்
[தொகு]இயூர்லைட்டு என்ற கனிமத்தால் விளக்கப்பட்டுள்ளபடி, பிற குப்ரசு சல்பைடுகளும் அறியப்படுகின்றன. தோராயமான வாய்ப்பாடு Cu1.96S உடன், இந்த பொருள் விகிதவியலுக்கு ஒவ்வாததாகவும் (வரம்பு Cu1.934S-Cu1.965S) மற்றும் அலகு செல்லில் 248 தாமிரம் மற்றும் 128 கந்தக அணுக்களுடன் ஓர் ஒற்றைச்சரிவச்சிலும் உள்ள கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[5] Cu2S மற்றும் Cu1.96S ஆகியவை தோற்றத்தில் ஒத்தவை மற்றும் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துவது கடினம்.[7]
கட்டமாற்றம்
[தொகு]104 °செல்சியசு (219 °பாரங்கீட்டு) அளவிலான வெப்பநிலையில் கட்ட மாற்றப் புள்ளியில் மின்தடை திடீரென அதிகரிக்கிறது; இத்துல்லியமான வெப்பநிலை, வேதியியல் விகிதவியலைச் சார்ந்து அமைகிறது.
தயாரிப்பு
[தொகு]தாமிரத்தைச் கந்தகம் அல்லது H2S வாயுவுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தாமிர(I) சல்பைடு சேர்மத்தைத் தயாரிக்கலாம்.[2] இவ்வினையின் வேகம் துகள் அளவு மற்றும் வெப்பநிலையைப் பொறுத்திருக்கும்.[8]
- 2 Cu2S + 3 O2 -> 2 Cu2O + 2 SO2
வினைகள்
[தொகு]சால்கோசைட்டிலிருந்து தாமிரத்தை உற்பத்தி செய்வது தாதுக்களிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுப்பதில் ஒரு பொதுவான செயல்முறையாகும். வழக்கமாக, இந்த மாற்றத்தில் வறுத்தல் அடங்கும். இது Cu2O சேர்மத்தை ஓர் இடைநிலையாகக் கொடுக்கிறது. மேலும் உலோகமாகவும், கந்தக டை ஆக்சைடாகவும் ஒடுக்கப்படுகிறது:
- Cu2S + O2 -> 2 Cu + SO2
ஆக்சிசன் முன்னிலையில் வெப்பப்படுத்தப்படும்போது தாமிர(I) ஆக்சைடு எளிதில் தாமிர(II) ஆக்சைடாக மாறுகிறது. ஒடுக்கும் சூழலில் வெப்பப்படுத்தப்படும்போது அது தாமிரம் உலோகமாக மாறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Perry, Dale L. (2016-04-19). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 142. ISBN 978-1-4398-1462-8.
- ↑ 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 1373. ISBN 0-08-022057-6.
{{cite book}}: Cite has empty unknown parameter:|1=(help) - ↑ "NIOSH Pocket Guide to Chemical Hazards".
- ↑ Potter, R. W. (1977). "An electrochemical investigation of the system copper-sulfur". Economic Geology 72 (8): 1524–1542. doi:10.2113/gsecongeo.72.8.1524. Bibcode: 1977EcGeo.72.1524P.
- ↑ 5.0 5.1 Evans, H. T. (1979). "Djurleite (Cu1.94S) and Low Chalcocite (Cu2S): New Crystal Structure Studies". Science 203 (4378): 356–8. doi:10.1126/science.203.4378.356. பப்மெட்:17772445. Bibcode: 1979Sci...203..356E. https://archive.org/details/sim_science_1979-01-26_203_4378/page/356.
- ↑ Wells, A. F. (1984). Structural inorganic chemistry (5th ed.). Oxford [Oxfordshire] : New York: Clarendon Press; Oxford University Press. ISBN 0-19-855370-6.
- ↑ Evans H.T. (1981). "Copper coordination in low chalcocite and djurleite and other copper-rich sulfides". American Mineralogist 66 (7–8): 807–818. http://www.minsocam.org/ammin/AM66/AM66_807.pdf.
- ↑ Blachnik R., Müller A. (2000). "The formation of Cu2S from the elements I. Copper used in form of powders". Thermochimica Acta 361: 31. doi:10.1016/S0040-6031(00)00545-1.