தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு

தா.இ.கா.செ. அலகு கூடு. சிவப்பு = Cu, மஞ்சள் = Se, நீலம் = In/Ga
இனங்காட்டிகள்
12018-95-0(CuInSe2)
ChemSpider 24774055 Y[<del.> chemspider]
பண்புகள்
CuIn(1-x)GaxSe2
அடர்த்தி ~5.7 கி/செ.மீ3
உருகுநிலை 1,070 முதல் 990 °C (1,960 முதல் 1,810 °F; 1,340 முதல் 1,260 K) (x=0–1)[1]
Band gap 1.0–1.7 eV (x=0–1)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம், பியர்சன் குறியீடு tI16 [1]
புறவெளித் தொகுதி I42d
Lattice constant a = 0.56–0.58 நானோமீட்டர் (x=0–1), c = 1.10–1.15 நானோமீட்டர் (x=0–1)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு (Copper indium gallium selenide) என்பது I-III-VI2 குறைக்கடத்தி வேதிப்பொருளாகும். தாமிரம், இண்டியம், காலியம், செலீனியம் தனிமங்கள் சேர்த்து இக்குறைகடத்தி உருவாக்கப்படுகிறது. தாமிர இண்டியம் செலீனைடு மற்றும் தாமிர காலியம் செலீனைடுகளின் திண்மக் கரைசலான இதை CuIn(1-x)Ga(x)Se2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்துவர். இவ்வாய்ப்பாட்டிலுள்ள x இன் மதிப்பு தாமிர இண்டியம் செலீனைடின் தூய்மைப் பொறுத்து 0 முதல் 1 வரை மாறுபடும். சால்கோபைரட்டு படிகக் கட்டமைப்பில் தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு நான்முகியாக பிணைக்கப்பட்டுள்ள ஒரு குறைக்கடத்தியாகும். தாமிர இண்டியம் செலீனைடுக்கு 1.0 எலக்ட்ரான் வோல்ட்டு முதல் தாமிர காலியம் செலீனைடுக்கு 1.7 எலக்ட்ரான் வோல்ட்டு வரை என ஆற்றல் இடவெளியும் தொடர்ச்சியாக மாறுபடுகிறது.

கட்டமைப்பு[தொகு]

சால்கோபைரட்டு படிகக் கட்டமைப்பில் தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு நான்முகியாக பிணைக்கப்பட்டுள்ளது. சூடுபடுத்தும்போது இது துத்தநாகபிளன்டு வடிவத்திற்கு மாறுகிறது. நிலைமாறு வேப்பம் 1045 செல்சியசிலிருந்து 805 ° செல்சியசு வரை மாறுகிறது.[1]

பயன்பாடுகள்[தொகு]

ஒளிமின்னழுத்தத் தொழிலில் பயன்படுத்தப்படும் மென்-படத் தொழில்நுட்பமான தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு சூரிய மின்கலங்களுக்கான வேதிப் பொருளாக இது அறியப்படுகிறது.[2] இப்பணியில் தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு ஆனது நெகிழ்வான அடி மூலக்கூறு பொருட்களில் படியும் நன்மையைக் கொண்டுள்ளது. அதிக நெகிழ்வான, இலகுரக சூரியத் தகடுகளையும் இது உருவாக்குகிறது. செயல்திறன் மேம்பாடுகள் தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடை நிறுவப்பட்ட ஒரு மாற்று வேதிப்பொருள் தொழில்நுட்பமாக மாற்றியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Tinoco, T.; Rincón, C.; Quintero, M.; Pérez, G. Sánchez (1991). "Phase Diagram and Optical Energy Gaps for CuInyGa1−ySe2 Alloys". Physica Status Solidi A 124 (2): 427. doi:10.1002/pssa.2211240206. Bibcode: 1991PSSAR.124..427T. 
  2. "DOE Solar Energy Technologies Program Peer Review" (PDF). U.S. department of energy 2009. பார்க்கப்பட்ட நாள் 10 February 2011.