தாமின் மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமின் மான்
Burmese brow-antlered deer at Chester Zoo
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
குடும்பம்: மான்
துணைக்குடும்பம்: பழைய உலக மான்
பேரினம்: Panolia
இனம்: P. eldii
இருசொற் பெயரீடு
Panolia eldii
(M'Clelland, 1842)

தாமின் மான் (thamin, Panolia eldii [2]) என்பது ஒருவகை மான் ஆகும். இது அருகிய இனம் ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது .[1] இந்த இனம் முதன் முதலில் இந்தியாவின் மணிப்பூரில் 1839 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர், Cervus eldi, 1844 ஆண்டு உருவாக்கப்பட்டது. [3] இந்த மான் உருவத்தில் சிறியது. அழகுவாய்ந்தது. இதன் கொம்புகள் ஏறக்குறைய வட்டவடிவமாக காட்சியளிக்கும். இவற்றின் கொம்புகளில் இரண்டு முதல் பத்துவரையிலான கிளைக்கொம்புகள் இருக்கும். திறந்த வெளிப் புதர்க்காடுகளை விரும்பும். தாமின் மான்கள் மணிப்பூரின் லோடாக் ஏரிக்கரையருகேயுள்ள கெய்புல் லாம்ஜா தேசியப் பூங்காவில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Timmins, R.J. & Duckworth, J.W. (2008). "Rucervus eldii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 10 March 2011. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Pitraa, Fickela, Meijaard, Groves (2004). Evolution and phylogeny of old world deer. Molecular Phylogenetics and Evolution 33: 880–895.
  3. "Cervus eldii (Eld's Brow-Antlered Deer)". ZipCode.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமின்_மான்&oldid=3413921" இலிருந்து மீள்விக்கப்பட்டது