தாமான் மெலாத்தி
தாமான் மெலாத்தி | |
|---|---|
| Taman Melati | |
தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம் | |
![]() | |
| ஆள்கூறுகள்: 3°13′10″N 101°43′18″E / 3.21944°N 101.72167°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கோம்பாக் |
| மாநகராட்சி | கோலாலம்பூர் |
| நேர வலயம் | மலேசிய நேரம் 08:00 |
| அஞ்சல் குறியீடு[1] | 53100 |
| போக்குவரத்து | V W |
| இணையதளம் | dbkl |
தாமான் மெலாத்தி (ஆங்கிலம்; மலாய்: Taman Melati; சீனம்: 茉莉花园); என்பது மலேசியா, கோலாலம்பூர், கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்புறப் பகுதி ஆகும். கோம்பாக், கிள்ளான் கேட் அணை அல்லது கிள்ளான் கேட்ஸ் நீர்த்தேக்கம் (Klang Gates Dam), வங்சா மாஜு நகர மையம்; மற்றும் தாமான் மெலாவத்தி (Taman Melawati) ஆகிய நகர்ப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. மலேசியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு குடியிருப்பு பகுதி தாமான் (Taman) என்று அழைக்கப்படுகிறது.
364 எக்டேர் பரப்பளவு கொண்ட இந்த நகர்ப்பகுதி, புக்கிட் பிந்தாங் நகர மையப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 15 நிமிடங்கள் தொலைவில் உள்ளது. இதன் கட்டுமானம் 1970-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டது.[2]
இந்த நகர்ப்பகுதி வங்சா மாஜு மக்களவைத் தொகுதியில் உள்ளது. இந்தத் தொகுதியில், ஒரு சதுர கி.மீ.-க்கு 13,000 பேருக்கு மேல் வசிக்கின்றனர். மலேசியாவில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், இந்தத் தொகுதி மட்டுமே அதிகமான மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட தொகுதியாக அறியப்படுகிறது.[3]
வரலாறு
[தொகு]தாமான் மெலாத்தி அமைந்துள்ள வங்சா மாஜு புறநகர்ப் பகுதியின் அசல் பெயர் அவ்தோர்ன்டன் (Hawthornden). தாமான் மெலாத்தி தற்போது அமைந்துள்ள இடம், 1900-ஆம் ஆண்டு-களில் இருந்து 1980-ஆம் ஆண்டுகள் வரை அவ்தோர்ன்டன் எனும் பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு அந்தக் காலக்கட்டத்தில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன.[2]
பொதுவாக அந்தத் தோட்டங்களை, செதாபாக் ரப்பர் தோட்டங்கள் என்று அழைத்தார்கள்.[4] அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டம், 1900-ஆம் ஆண்டுகளில், லோக் இயூ (Wong Loke Yew) எனும் சீனப் பெருந்தகையாளருக்குச் சொந்தமானது. அவ்தோர்ன்டன் ரப்பர் எஸ்டேட் கம்பெனி (Hawthornden Rubber Estate Company Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் அந்தத் தோட்டம் செயல்பட்டு வந்தது.[2]
அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டம்
[தொகு]அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டத்திற்கு அருகில், கொங்காங் தோட்டம் (Gonggang Estate); கெண்ட் தோட்டம் (Kent Estate); வார்டிபன் தோட்டம் (Wardieburn Estate) போன்ற பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. வங்சா மாஜுவைச் சுற்றிலும், குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள் உருவாக்கப் பட்டதாலும்; நகர்ப்புற மேம்பாடுகளினாலும் அந்த ரப்பர் தோட்டங்கள் மறைந்துவிட்டன.[5]
முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது ஆட்சியின் போது, அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டத்தை ஒரு புதிய நகரமாக உருவாக்க அந்தத் தோட்டம் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில் பண்டார் பாரு வங்சா மாஜு (Bandar Baru Wangsa Maju) நகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது.
துரிதமான வளர்ச்சி
[தொகு]கடந்த சில ஆண்டுகளில் இங்கு ஏற்பட்டுள்ள துரிதமான வளர்ச்சிகளினால், இங்குள்ள பழைய வீடுகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. ஓர் இரட்டை மாடி வீடு இன்று ஏறக்குறைய RM1 மில்லியன் வரையில் விற்பனையாகிறது.[2]
போக்குவரத்து
[தொகு]தாமான் மெலாத்தி நகர்ப்பகுதியின் தற்போதைய தொடருந்து நிலையங்கள்:
- 5 கிளானா ஜெயா வழித்தடம்
எதிர்காலத்தில், செதாபாக் நகர்ப்பகுதியின் முழுப் பகுதியும் 13 எம்ஆர்டி சுற்று வழித்தடத்தின் செதாபாக் எம்ஆர்டி நிலையம் எனும் பெயரில் ஓர் உயர்த்தப்பட்ட நிலையத்தால் சேவை செய்யப்படும்.
அரசியல்
[தொகு]மக்களவை
[தொகு]| தொகுதி | மாநிலம் | உறுப்பினர் |
|---|---|---|
| வங்சா மாஜு மக்களவைத் தொகுதி | கோலாலம்பூர் | ஜாகிர் அசான் (பாக்காத்தான்-பி.கே.ஆர்) |
கல்விக் கழ்கங்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taman Melati, Kuala Lumpur - Postcode - 53100 - Malaysia Postcode". postcode.my. Retrieved 29 October 2025.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Kammed, Khairul Ashraf (16 June 2017). "The 364ha township, located about 15 minutes from the Golden Triangle area, was launched in the mid-1970s". NST Online (in ஆங்கிலம்). Retrieved 29 October 2025.
- ↑ "P.116 WANGSA MAJU" இம் மூலத்தில் இருந்து 19 ஜனவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230119103806/https://cloud.stats.gov.my/index.php/s/VDynFsMkxI4dxAE?path=/14%20W.P.%20KUALA%20LUMPUR#pdfviewer.
- ↑ Kaur, Sharen (9 August 2018). "Making an oasis in Wangsa Maju". New Straits Times. https://www.nst.com.my/property/2018/08/399681/making-oasis-wangsa-maju.
- ↑ Maju, Budak Wangsa (23 July 2016). "There were many rubber plantations such as the Wardieburn Estate, Gonggang Estate, Kent Estate near Awthornton Rubber Estate. Those estates no longer exist. The estates have disappeared by residential and commercial areas surrounding Wangsa Maju". Budak Wangsa Maju. Retrieved 6 December 2022.
