தாமான் மிடா எம்ஆர்டி நிலையம்
KG24 CC22 தாமான் மிடா | |||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாமான் மிடா நிலையம் | |||||||||||||||||||||
| பொது தகவல்கள் | |||||||||||||||||||||
| வேறு பெயர்கள் | Taman Midah MRT station Stesen Taman Midah MRT 美达花园 | ||||||||||||||||||||
| அமைவிடம் | தாமான் மிடா, செராஸ் | ||||||||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°06′16.2″N 101°43′55.9″E / 3.104500°N 101.732194°E | ||||||||||||||||||||
| உரிமம் | |||||||||||||||||||||
| இயக்குபவர் | |||||||||||||||||||||
| தடங்கள் | 13 (திட்டத்தில்) | ||||||||||||||||||||
| நடைமேடை | 2 உயர்த்தப்பட்ட மேடை | ||||||||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 தடங்கள் | ||||||||||||||||||||
| கட்டமைப்பு | |||||||||||||||||||||
| கட்டமைப்பு வகை | நிலத்தடி நிலையம் | ||||||||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | ||||||||||||||||||||
| தரிப்பிடம் | |||||||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | |||||||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||
| மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG24 CC22 | ||||||||||||||||||||
| வரலாறு | |||||||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG24 17 சூலை 2017 CC22 2031 | ||||||||||||||||||||
| சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Midah MRT Station; மலாய்: Stesen MRT Taman Midah) என்பது மலேசியா, கோலாலம்பூர், செராஸ், தாமான் மிடா (Taman Midah) பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம் தற்போது
மலேசிய கூட்டரசு சாலை 1 - செராஸ் சாலையில் உள்ளது. இந்தச் சாலைக்கு அருகில் செராஸ் சாலை சுங்கச்சாவடி உள்ளது. இந்த நிலையம் எதிர்கால எம்ஆர்டி சுற்று வழித்தடத்துடன் (MRT Circle Line) ஒரு பரிமாற்ற நிலையமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
எம்ஆர்டி சுற்று வழித்தடம்
[தொகு]எம்ஆர்டி சுற்று வழித்தடம் அல்லது பெரும் விரைவு தொடருந்து சுற்று வழித்தடம் (ஆங்கிலம்: MRT Circle Line மலாய்: Laluan MRT Lingkaran) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் திட்டமிடப்பட்டு உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து வழித்தடம் (Mass Rapid Transit) (MRT) ஆகும்.
இந்த வழித்தடம், மலேசியாவில் முழு 'ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொடருந்து' அமைப்புகளில் ஐந்தாவது வழித்தடம் ஆகும். ஏற்கனவே, இந்த வழித்தடத்திற்கு மிக அருகில் உள்ள கிளானா ஜெயா வழித்தடமும் அந்தத் தானியங்கி அமைப்பைக் கொண்டுள்ளது.
பொது
[தொகு]சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[1]
மாலூரி நிலத்தடி நிலையத்திற்குப் பிறகு காஜாங் வழிதடத்தில் தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் என்பது இரண்டாவது உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் செராஸ் புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.
நிலைய அமைப்பு
[தொகு]இந்த நிலையம், காஜாங் வழிதடத்தில் உள்ள பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை மட்டம் உள்ளது.
இந்த நிலையத்தில் இரட்டை வழிதடத்துடன் இரண்டு பாதுகாப்பான பக்க நடைமேடைகள்; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகள் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
| L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
| நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் தொடருந்து KG35 (→) | ||
| நடைமேடை 2 9 காஜாங் (→) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
| பக்க நடைமேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் B |
| G | தரை மட்டம் | நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) 2/90 சாலை (→) பெர்த்தாமா சாலை (→) செராஸ் சாலை (→) கோலாலம்பூர் மிதிவண்டியோட்ட அரங்கம் |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | செராஸ் சாலை மேற்குப் பகுதி | தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) மிடா சாலை 1 (→) மே பேங்க் (தாமான் மிடா கிளை) (→) ஆர்எச்பி வங்கி (தாமான் மிடா கிளை) (→) ஆங் லியோங் வங்கி (தாமான் மிடா கிளை) (→) அஃபின் வங்கி (தாமான் மிடா கிளை) (→) டிஎச்எல் சேவை மையம் தாமான் மிடா | |
| B | செராஸ் சாலை கிழக்குப் பகுதி | தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) செல் (செராஸ் சாலை) (→) மெக்டொனால்ட்சு (செராஸ் சாலை) (→) தொயோட்டா மலேசியா செராஸ் மையம் | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி |
|---|---|---|---|
| KG24 தாமான் மிடா
(நுழைவாயில் A) |
SP13 சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம் | மலேசிய கூட்டரசு சாலை 1 செராஸ் சாலை துவாங்கு முகிரிஸ் மருத்துவ மையம் (PPUKM) | |
| KG24 தாமான் மிடா
(நுழைவாயில் B) |
செரி நிலாம் முனையம் பண்டார் பாரு அம்பாங் |
மலேசிய கூட்டரசு சாலை 1 செராஸ் சாலை KG24 தாமான் மிடா (நுழைவாயில் A) |
பிற பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | இயக்குநர் | தொடக்கம் | இலக்கு | பயணவழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| ரேபிட் கேஎல் | காஜாங் நிறுத்தம் | லெபோ புடு மையம் | ரெக்கோ சென்ட்ரல்
KG34 காஜாங் அரங்கம் எம்ஆர்டி நிலையம் |
KG25 தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையம் | |
| ரேபிட் கே.எல் | டாமாய் பெர்டானா | புது நெடுஞ்சாலை மையம் | தாமான் டேசா பைதூரி மலேசிய கூட்டரசு சாலை 1 செராஸ் சாலை |
காட்சியகம்
[தொகு]தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் (2023)
மேலும் காண்க
[தொகு]- செராஸ்
- காக்ரேன் எம்ஆர்டி நிலையம்
- மலூரி நிலையம்
- காஜாங் தொடருந்து நிலையம்
- மலேசிய கூட்டரசு சாலை 1
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html.
- ↑ "Line Route T402 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2021-01-20.
- ↑ "Taman Midah MRT Feeder Bus T305 | mrt.com.my". mrt.com.my. Retrieved 2021-01-18.
- ↑ "Line Route T305 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2021-01-18.
- ↑ "Line Route 450 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2020-12-31.
- ↑ "Line Route 400 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2021-01-13.
