உள்ளடக்கத்துக்குச் செல்

தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°06′45.86″N 101°43′45.44″E / 3.1127389°N 101.7292889°E / 3.1127389; 101.7292889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG23  தாமான் பெர்த்தாமா
| எம்ஆர்டி
தாமான் பெர்த்தாமா நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Taman Pertama MRT station
Stesen Taman Pertama MRT
第一花园站
அமைவிடம்செராஸ் கோலாலம்பூர்
 மலேசியா
ஆள்கூறுகள்3°06′45.86″N 101°43′45.44″E / 3.1127389°N 101.7292889°E / 3.1127389; 101.7292889
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள் 9  காஜாங் 
நடைமேடை2 உயர்த்தப்பட்ட மேடை
இருப்புப் பாதைகள்2 தடங்கள்
இணைப்புக்கள் ரேபிட் கேஎல்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG23 
வரலாறு
திறக்கப்பட்டது KG23  17 சூலை 2017
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
மலூரி
குவாசா
 
காஜாங் வழித்தடம்
 
தாமான் மிடா
காஜாங்
அமைவிடம்
Map

தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Pertama MRT Station; மலாய்: Stesen MRT Taman Pertama) என்பது மலேசியா, கோலாலம்பூர் செராஸ் பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையம் தற்போது 1 மலேசிய கூட்டரசு சாலை 1 செராஸ் சாலையில் உள்ளது. இந்தச் சாலைக்கு அருகில் லோக் இயூ சாலை; யாக்கோப் லத்தீப் சாலைகள் உள்ளன.

பொது

[தொகு]

சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[1]

மாலூரி நிலத்தடி நிலையத்திற்குப் பிறகு காஜாங் வழிதடத்தில் இதுவே முதல் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையக் கட்டுமானத்தின் போது தற்காலிகமாக தாமான் புக்கிட் ரியா (Taman Bukit Ria) நிலையம் என்று அழைக்கப்பட்டது.

இந்த நிலையம் அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளான தாமான் பெர்த்தாமா, தாமான் புக்கிட் ரியா, கோலாலம்பூர் மாநகராட்சியின் பொது குடியிருப்பு வளாகங்கள்; மற்றும் பண்டார் துன் ரசாக்கின் சில பகுதிகளுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் தற்போது செயல்படாத செராஸ் மிதிவண்டியோட்ட அரங்கிற்கு (Cheras Velodrome) அருகிலும் உள்ளது.

நிலைய அமைப்பு

[தொகு]

இந்த நிலையம், காஜாங் வழிதடத்தில் உள்ள பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை மட்டம் உள்ளது.

இந்த நிலையத்தில் இரட்டை வழிதடத்துடன் இரண்டு பாதுகாப்பான பக்க நடைமேடைகள்; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகள் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

L2 நடைமேடை பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங் தொடருந்து  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (→) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் B
G தரை மட்டம் நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) 2/90 சாலை (→) பெர்த்தாமா சாலை (→) செராஸ் சாலை (→) கோலாலம்பூர் மிதிவண்டியோட்ட அரங்கம்

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A 2/90 சாலை தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) தாமான் பெர்த்தாமா -
B செராஸ் சாலை மேற்குப் பகுதி கோலாலம்பூர் மிதிவண்டியோட்ட அரங்கம், யாக்கோப் லத்தீப் சாலை, தாமான் தெனாகா (→) பாதசாரி மேம்பாலம் -

பேருந்து சேவைகள்

[தொகு]
எம்ஆர்டி பேருந்து சேவைகள்
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி குறிப்புகள்
T305 [2][3]
 KG24  தாமான் மிடா எம்ஆர்டி நிலையம்

(→) (நுழைவாயில் B)

செரி நிலாம் முனையம்

அம்பாங் புதிய நகரம்

குவாரி சாலை

தாமான் செரி பத்திரா
கம்பன் செராஸ் பாரு
தாமான் மூடா
தாமான் செராயா
தாமான் மேலூர்
பான்டான் மேவா
பாராகான் பாயிண்ட்
அம்பாங் மருத்துவமனை
அம்பாங் அவென்யூ
மலேசிய கூட்டரசு சாலை 1 செராஸ் சாலை
 KG24  எம்ஆர்டி தாமான் மிடா (நுழைவாயில் A)
 KG23  எம்ஆர்டி தாமான் பெர்த்தாமா / வெலோட்ரோம் வணிக பூங்கா

(→)  KG24  எம்ஆர்டி தாமான் மிடா (→) (நுழைவாயில் B)

காட்சியகம்

[தொகு]

தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம் (2023)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html. 
  2. "Taman Midah MRT Feeder Bus T305 | mrt.com.my". mrt.com.my. Retrieved 2021-01-18.
  3. "Line Route T305 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2021-01-18.

வெளி இணைப்புகள்

[தொகு]