தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம்
PY28 தாமான் நாகா இமாஸ் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Taman Naga Emas | |||||||||||||||
| அமைவிடம் | தாமான் நாகா இமாஸ் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°04′38.35″N 101°41′59.39″E / 3.0773194°N 101.6998306°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 12 புத்ராஜெயா | |||||||||||||||
| நடைமேடை | தீவு நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| இணைப்புக்கள் | ||||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலை | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலை | செயல்பாட்டில் | |||||||||||||||
| நிலையக் குறியீடு | PY28 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | புத்ராஜெயா 16.03.2023 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Naga Emas MRT Station; மலாய்: Stesen MRT Taman Naga Emas) என்பது மலேசியா, கோலாலம்பூர், தாமான் நாகா இமாஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். தாமான் நாகா இமாஸ் பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.
தற்போது PY27 கூச்சாய் எம்ஆர்டி நிலையத்திற்கும் PY29 சுங்கை பீசி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம் PY28 எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[1] கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது.[1] இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் தாமான் நாகா இமாஸ் நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது.
முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது 12 புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது. இந்த PY28 தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.[1]
கட்டுமானங்கள்
[தொகு]டபிள்யூ-சிடி நிறுவனத்துடன் (WCT Holdings Berhad) மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட நிலத்தடி கட்டுமான உடன்படிக்கையின் கீழ் தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம் அடுக்குமாடி நிலையில் உருவாக்கப்பட்டது. 2017 செப்டம்பர் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 199.5 மில்லியன் மதிப்பிலான PY28 தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலைய கட்டுமான கட்டமைப்புகள் டபிள்யூ-சிடி நிறுவனத்திடம் வழங்கப்பட்டன.
கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும். அவற்றுள் PY28 தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையத்தின் கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளும் உள்ளடங்கும்.[2][3][4]
அத்துடன், பண்டார் மலேசியா தொடங்கி கம்போங் முகிபா (Kampung Muhibbah) புறநகர்ப் பகுதி வரையிலான நிலத்தடி இருப்புப்பாதையின் கட்டுமானமும் அந்த உடன்படிக்கையில் அடங்கும். இந்த உடன்படிக்கையும் அதே டபிள்யூ-சிடி நிறுவனத்திடம் நவம்பர் 2016-இல் RM 896.4 மில்லியனுக்கு வழங்கப்பட்டது.[5]
செயல்பாடு
[தொகு]தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம் பொதுமக்களுக்கு மார்ச் 16, 2023 அன்று திறக்கப்பட்டது. KC03 PY13 கம்போங் பத்து நிலையம் தொடங்கி PY41 புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.
அமைவு
[தொகு]இந்த நிலையம் கோலாலம்பூருக்கு தெற்கே உள்ள தாமான் நாகா இமாஸ் குடியிருப்பு பகுதியில் 4/140 சாலையில் அமைந்துள்ளது. செரி பெட்டாலிங் நகரமும் KB04 SP15 KT2 பண்டார் தாசேக் செலாத்தான் நிலையமும் கிழக்கே 1.5 கிலோமீட்டர் (0.9 மைல்) தொலைவில் உள்ளன.
கட்டமைப்பு
[தொகு]ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில், PY28 தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[6]
PY28 தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.[5] அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்து பொத்தான்கள் மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை சேவை மையங்கள் போன்றவை அடங்கும்.[6]
கூடுதலாக, பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் ஆகியவை பயனர்களின் தேவைகளையும் வசதியையும் நிறைவு செய்ய அமைக்கப்பட்டு உள்ளன. நிலைய நுழைவு மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[6]
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]இந்த நிலையத்தில் தற்போதைக்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.
| புத்ராஜெயா — கூச்சாய் எம்ஆர்டி நிலையம் | |||
| நுழைவாயில் | அமைவிடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | 4/140 சாலை |
நகரங்களுக்கு இடையிலான பேருந்துகள் நிறுத்தம் ( |
|
பேருந்து சேவைகள்
[தொகு]தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள ஊட்டி பேருந்து முனையம் தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையத்தின் நுழைவாயில் A-இல் உள்ளது. இந்த மையத்தில் ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளது. மேலும் தகவலுக்கு கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.[7]
| பேருந்து | தொடக்கம் | இலக்கு | |
|---|---|---|---|
| PY28 தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி | பண்டார் பாரு செரி பெட்டாலிங் | ||
காட்சியகம்
[தொகு]தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)
மேலும் காண்க
[தொகு]- பிரசரானா மலேசியா
- ரேபிட் பேருந்து
- ரேபிட் கேஎல்
- எம்ஆர்டி நிறுவனம்
- தேசா பெட்டாலிங்
- கம்போங் பத்து நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
- ↑ "WCT to build two elevated MRT stations for RM199.5m" [WCT akan membina dua stesen MRT bertingkat dengan harga RM199.5m]. The Edge Market (in ஆங்கிலம்). 20 September 2017. Retrieved 16 December 2022.
- ↑ "MRT Corp award RM200m job to WCT" [MRT Corp menganugerahkan kerja RM200m ke WCT]. New Starits Times (in ஆங்கிலம்). 19 November 2022. Retrieved 16 December 2022.
- ↑ "MRT Corp: All elevated station contracts for SSP Line awarded" (in en). The Star (Malaysia). 6 November 2016. https://www.thestar.com.my/business/business-news/2017/11/06/mrt-corp---all-elevated-station-contracts-for-ssp-line-awarded.
- ↑ 5.0 5.1 "Awarded Contracts for MRT Putrajaya Line" [Penganugerhan Kontrak untuk MRT Laluan Putrajaya]. mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
- ↑ 6.0 6.1 6.2 "Maklumat mengenai Stesen MRT Taman Naga Emas". www.mymrt.com.my. Mass Rapid Transit Corporation (MRT Corp) Sdn. Bhd. Retrieved 29 November 2022.
- ↑ "Prasarana Bus Movements". myrapidbus.prasarana.com.my. Retrieved 24 October 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Taman Naga Emas MRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Klang Valley Mass Rapid Transit website
- MRT Hawk-Eye View
