உள்ளடக்கத்துக்குச் செல்

தாமான் தேசா

ஆள்கூறுகள்: 3°06′11.68″N 101°40′33.85″E / 3.1032444°N 101.6760694°E / 3.1032444; 101.6760694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமான் தேசா

Taman Desa
கோலாலம்பூர்
புறநகர் பகுதி
தாமான் தேசா சாலை
தாமான் தேசா சாலை
Map
ஆள்கூறுகள்: 3°06′11.68″N 101°40′33.85″E / 3.1032444°N 101.6760694°E / 3.1032444; 101.6760694
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
தொகுதிசெபுத்தே மக்களவைத் தொகுதி
அமைவு1970- 1980
நேர வலயம்மலேசிய நேரம் 08:00
அஞ்சல் குறியீடு
58100[1]
தொலைபேசி+60-03-7980
போக்குவரத்துப் பதிவெண்கள்W; V

தாமான் தேசா (ஆங்கிலம்; மலாய்: Taman Desa) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் தென் மேற்குப் பகுதியில்; கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை மற்றும் கிள்ளான் லாமா சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். ஓர் அமைதியான குடியிருப்பு பகுதியான தாமான் தேசா; ஒரு காலத்தில் காடுகளாலும் ரப்பர் தோட்டங்களாலும் சூழப்பட்டிருந்தது. தற்போது கோலாலம்பூர் மாநகர மையத்திற்கு எளிதாகச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளது.[2][3]

கோலாலம்பூர் மாநகரின் தெற்கே, செபுத்தே மக்களவைத் தொகுதிக்குள் அமைந்துள்ள இந்த தாமான் தேசா புறநகர்ப் பகுதியின் கிழக்கே சுங்கை பீசி, வடக்கே பண்டார் தாசேக் செலாத்தான் மற்றும் மேற்கே செரி பெட்டாலிங், கூச்சாய் லாமா போன்ற நகரங்கள் எல்லைகளாக உள்ளன.

தாமான் தேசாவில் வசிப்பவர்களுக்கு கோலாலம்பூர் மாநகர மையம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அருகாமை நகரங்களுக்கு விரைவாகச் செல்வதற்கு எளிதான அணுகலையும் இந்த நகரம் வழங்குகிறது.

சிறப்புக் கூறுகள்

[தொகு]

தாமான் தேசாவின் கட்டுமானப் பணிகள் 1970-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தொடங்கப்பட்டன. கிள்ளான் லாமா சாலையில் அமைந்துள்ள இந்த நகர்ப்பகுதி, தாமான் செபுத்தே, பந்தாய் டாலாம், மிட் வெளி சிட்டி மற்றும் சாலாக் செலாத்தான் ஆகிய நகர்ப் பகுதிகளுக்கு அருகிலும் உள்ளது. இங்கிருந்து கோலாலம்பூரின் மையப் பகுதியை சுமார் 10 முதல் 15 நிமிடங்களில் அடையலாம்.

போக்குவரத்து

[தொகு]

சாலைகள்

[தொகு]

தேசா பெட்டாலிங் நகரத்தை கீழ்க்காணும் முக்கிய விரைவுச் சாலைகள்; மற்றும் சாலைகள் வழியாக அணுகலாம்.

E37 கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை [4]
E5 சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS)[4]
E10 பந்தாய் புதிய விரைவுச்சாலை (NPE)[4]
28 கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2)[4]
E20 மாஜு விரைவுச்சாலை[4]

தொடருந்து

[தொகு]

கேடிஎம் கொமுட்டர் தொடருந்து/மெட்ரோ நிலையங்கள்:

பேருந்து

[தொகு]

ரேபிட் கேஎல்

மாநகராட்சிகள்

[தொகு]

தாமான் தேசா நகரத்தின் வளர்ச்சிக்கு, அந்த நகர்ப் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளும்; மற்றும் நெடுஞ்சாலைகளும்தான் முதன்மைக் காரணங்களாக அமைகின்றன. தாமான் தேசா அமைந்துள்ள பெட்டாலிங் மாவட்டம் அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதுவே பெட்டாலிங் மாவட்டம் 3 நகராட்சி மன்றப் பகுதிகளாகப் பிரிக்கப்படுவதற்கும் வழிவகுத்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Taman Desa, Kuala Lumpur - Postcode - 58100 - Malaysia Postcode". postcode.my. Retrieved 23 October 2025.
  2. "Taman Desa, Kuala Lumpur - Postcode - 58100". Malaysia Postcode Search (in ஆங்கிலம்). Retrieved 2017-03-12.
  3. "The enclave, once surrounded by jungle and rubber estates is now considered a strategic area". Address Condo. Retrieved 23 October 2025.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Desa Petaling". PropertyGuru. Retrieved 15 January 2025.
  5. "Nowadays, this district has grown very rapidly and this situation has caused the administration to be divided into 3 Municipal Council areas". Sejarah Daerah Petaling. Retrieved 23 October 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமான்_தேசா&oldid=4372155" இலிருந்து மீள்விக்கப்பட்டது