தாமான் செரி மூடா
தாமான் செரி மூடா | |
|---|---|
| Alam Impian | |
தாமான் செரி மூடாவில் மேவா சாலை | |
| ஆள்கூறுகள்: 3°1′57.07″N 101°32′4.11″E / 3.0325194°N 101.5344750°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சா ஆலாம் |
| நிர்வாக மையம் | சா ஆலாம் |
| உருவாக்கம் | 1982 |
| அரசு | |
| • ஊராட்சி | சா ஆலாம் மாநகராட்சி |
| நேர வலயம் | மலேசிய நேரம் 08:00 |
| அஞ்சல் குறியீடு | 40400[1] |
| தொலைபேசி | +603- |
| போக்குவரத்து | B |
| இணையதளம் | kotakemuning |
தாமான் செரி மூடா, (மலாய்; ஆங்கிலம்: Taman Sri Muda; சீனம்: 斯里慕达公园) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சா ஆலாம் மாநகர்ப் பகுதியின் பிரிவு 25-இல் உள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். இந்த நகரியம் கிள்ளான் மாவட்டத்தில், கோத்தா கெமுனிங் மற்றும் ஆலாம் மேகா நகரத்திற்கும் இடையே அமைந்துள்ளது.
இருப்பினும் தாமான் செரி மூடாவின் அசல் பெயர் மெர்டன் தோட்டம் (Merton Estate). இந்தத் தோட்டம் ஒரு ரப்பர் தோட்டமாக இருந்தது. தாமான் செரி மூடாவின் முந்தைய பெயர் தாமான் செரி ஆலாம் (Taman Sri Alam) என அறியப்படுகிறது.[2]
வரலாறு
[தொகு]மெர்டன் பெருந்தோட்டம் 584 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. அதன் பூர்வீகக் குடிமக்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்; அவர்களில் பெரும்பாலோர் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்தனர். 1899-ஆம் ஆண்டில் மெர்டன் தோட்டத்தில் ரப்பர் பயிரிடப்பட்டது.[3]
இந்தத் தோட்டத்தில் விளைந்த ரப்பர்; தொடருந்துகள் மூலம் ஐந்தரை மைல் தொலைவில் இருந்த பத்து தீகா தொடருந்து நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து கிள்ளான் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[4]
செரி மூடா நவீன சந்தை
[தொகு]சா ஆலாம் மேவா சாலை 25/63-இல் அமைந்துள்ள ஆறு மாடி வளாகமான செரி மூடா நவீன சந்தை (ஆங்கிலம்: Sri Muda Modern Market; மலாய்: Pasar Moden Sri Muda) மார்ச் 2021-இல் திறக்கப்பட்டது. இதன் கட்டுமானச் செலவு RM 28 மில்லியன். கட்டுமானம் சூன் 2017-இல் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு திசம்பர் 15, 2020 அன்று நிறைவடைந்தது.
இந்தத் திட்டம் சிலாங்கூர் மாநில அரசிடமிருந்து RM 25 மில்லியன் வட்டி இல்லாத கடன்களைப் பெற்றது.[5]
போக்குவரத்து
[தொகு]சீருந்து
[தொகு]
சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS) EXIT 507; மற்றும்
கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை EXIT 1302 போன்ற முக்கிய விரைவுச்சாலைகள் வழியாக தாமான் செரி மூடாவை அணுகலாம். 2010-இல் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலைகள் தாமான் செரி மூடாவை சா ஆலாம் நகர மையத்துடன் இணைக்கின்றன.
பொது போக்குவரத்து
[தொகு] KJ35 ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் மற்றும் KD11 சா ஆலாம் கொமுட்டர் நிலையம் ஆகிய நிலையங்கள் தாமான் செரி மூடாவிற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும். இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து
SA06 இப்பகுதியை சா ஆலாம் கொமுட்டர் நிலையத்துடன் இணைக்கிறது.
SA08 இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து, KJ35 ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையத்துடன் இணைக்கிறது.
சா ஆலாம் (பிரிவு 14); மற்றும் தாமான் செரி மூடா ஆகிய இடங்களுக்கு இடையிலான சேவையை ரேபிட் கேஎல் பேருந்து
T756 இயக்குகிறது. கோலாலம்பூர் மாநகருக்கான நேரடி அணுகலுக்காக,
751 ரேபிட் கேஎல் பேருந்து கோலாலம்பூர் கிள்ளான் வழியாக தாமான் செரி மூடாவை KJ14 KG16 பசார் செனி நிலையத்துடன் இணைக்கிறது.
செரி மூடா வெள்ளம்
[தொகு]
2021 திசம்பர் 16-ஆம் தேதி தாமான் செரி மூடா நகரம் ஒரு பெரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. அந்த வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்தனர். செரி மூடா நகரம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி பேரழிவைச் சந்தித்தது. [6] செரி மூடாவில் வெள்ள நீரை வெளியேற்றும் செயல்முறையை விரைவுபடுத்த 16 இறைவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.[7] வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பேரிடர் புனர் மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய அனைத்து வகையான தரைவழி போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டன.
2021 திசம்பர் 20-ஆம் தேதி, வெள்ளத்தில் மூழ்கிய கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பலவற்றில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன.[8] சா ஆலாம் காவல் துறைத் தலைவரின் உதவி ஆணையர் பகாருதீன் மாட் தாயிப் அந்தச் செய்திகளை உறுதிப்படுத்தினார்.[9] ஒரு கொள்ளை நிகழ்ச்சியின் போது 31 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.[10]
2021 திசம்பர் 23-ஆம் தேதி, கொள்ளை நிகழ்ச்சிகளைத் தடுக்க எட்டு காவல்துறைக் குழுக்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டன.[6] கொள்ளையில் னாதிக்கப்பட்ட கடைகளில் செரி மூடா மைடின் பேரங்காடியும் (Mydin) ஒன்றாகும். அந்தப் பேரங்காடியின் நிர்வாக இயக்குனர் அமீர் அலி மைடின், "விரக்தி மற்றும் பசியால்" தம்முடைய பேரங்காடியைச் சூறையாடியவர்களை மன்னிப்பதாக ஓர் அறிக்கை வெளியிட்டார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taman Seri Muda, Shah Alam - Postcode - 40400 - Malaysia Postcode". postcode.my. Retrieved 3 November 2025.
- ↑ "Asal-Usul Taman Sri Muda: Kenalilah Taman Sri Muda..." Asal-Usul Taman Sri Muda. 28 November 2013. Retrieved 3 November 2025.
- ↑ "Mindat.org". www.mindat.org. Retrieved 3 November 2025.
- ↑ Tehrani, Faisal (23 December 2021). "Sri Muda, 2021". Free Malaysia Today | FMT (in ஆங்கிலம்). Retrieved 3 November 2025.
- ↑ "The modern market in Taman Putra, Shah Alam, has been opened.". Oriental Daily Malaysia. 2021-03-15. https://www.orientaldaily.com.my/news/central/2021/03/15/398544.
- ↑ 6.0 6.1 "Floods: Four more bodies found, 31 looters arrested in Taman Sri Muda". The Star. Archived from the original on 22 December 2021. Retrieved 22 December 2021.
- ↑ "Floods: 80% of water pumped out of Taman Sri Muda, says Abdul Latiff". The Star. Archived from the original on 22 December 2021. Retrieved 22 December 2021.
- ↑ "48 hours of hunger and desperation drive Sri Muda folks to the limit". MalaysiaKini. 20 December 2021. Archived from the original on 22 December 2021. Retrieved 23 December 2021.
- ↑ "Shah Alam police confirm Sri Muda convenience stores and supermarkets looted". MalayMail. 20 December 2021. Archived from the original on 21 December 2021. Retrieved 21 December 2021.
- ↑ "Floods: Cops deploy eight teams to prevent break-ins at affected areas". The Star. Archived from the original on 24 December 2021. Retrieved 23 December 2021.
- ↑ "MYDIN founder decides to forgive flood victims who looted his store out of desperation & hunger". WauPost. 21 December 2021. Archived from the original on 21 December 2021. Retrieved 21 December 2021.
மேலும் காண்க
[தொகு]- கோத்தா கெமுனிங்
- புஞ்சாக் பெர்தானா
- மலேசிய வெள்ளப் பெருக்குகள்
- மலேசிய கிழக்கு கடற்கரை வெள்ளம் 2020–2021
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Shah Alam
