உள்ளடக்கத்துக்குச் செல்

தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°04′18″N 101°45′49″E / 3.0716°N 101.7636°E / 3.0716; 101.7636
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG27  தாமான் சன்தெக்
| எம்ஆர்டி
தாமான் சன்தெக் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Taman Suntex MRT station
Stesen Taman Suntex MRT
சீனம்: 山力花园
அமைவிடம்தாமான் சன்தெக், செராஸ்
கோலாலம்பூர்
 மலேசியா
ஆள்கூறுகள்3°04′18″N 101°45′49″E / 3.0716°N 101.7636°E / 3.0716; 101.7636
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
ரேபிட் கேஎல்
தடங்கள் 9  காஜாங் 
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2 தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking 628; Motorbike 62
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG27 
வரலாறு
திறக்கப்பட்டது KG27  17 சூலை 2017
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
சன்தெக்
குவாசா
 
காஜாங் வழித்தடம்
 
செரி ராயா
காஜாங்
அமைவிடம்
Map

தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Suntex MRT Station; மலாய்: Stesen MRT Taman Suntex) என்பது மலேசியா, கோலாலம்பூர், செராஸ், தாமான் சன்தெக் (Taman Suntex) பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையம் தற்போது 1 மலேசிய கூட்டரசு சாலை 1 - செராஸ் சாலையின் செராஸ் சென்ட்ரல் பேரங்காடிக்கு (Cheras Sentral Shopping Mall) அருகில் உள்ளது. அத்துடன் E1 செராஸ்–காஜாங் விரைவுச்சாலை வடக்கு முனையின் கோலாலம்பூர்-சிலாங்கூர் எல்லைக்கு அருகிலும் உள்ளது.

தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம்; செராஸ்–காஜாங் விரைவுச்சாலையில் E7 (Cheras–Kajang Expressway) உலு லங்காட் பரிமாற்றச் சாலை; காஜாங் பத்து 9 சுங்கச்சாவடி; மற்றும் தாமான் சன்தெக் பகுதிகளில் அமைந்துள்ளது. தாமான் சன்தெக் (Taman Suntex) என்பதில் தாமான் என்பது ஒரு குடியிருப்பு பகுதியைக் குறிப்பதாகும்; மலாய் மொழியில் பூங்கா என பொருள்படும். மலேசியாவில் புறநகர்க் குடியிருப்புப் பகுதிகளை 'தாமான்' என குறிப்பிடுகிறார்கள்.

காஜாங் வழித்தடம்

[தொகு]

9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[1]

பொது

[தொகு]

9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[2]

தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் பெரும்பாலான செராஸ் புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[3] கட்டுமானத்தின் போது இந்த நிலையம் தற்காலிகமாக பீனிக்ஸ் பிளாசா நிலையம் (Phoenix Plaza Station) என்று பெயரிடப்பட்டது.

நிலைய அமைப்பு

[தொகு]

இந்த நிலையம், காஜாங் வழிதடத்தில் உள்ள பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே

இந்த நிலையம் இரண்டு நிலைகளைக் கொண்ட காஜாங் எம்ஆர்டி வழிதடத்தின் நிலையான உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலல்லாமல், இந்த நிலையம் இணைப்புவழி மட்டத்திற்கு மேலே பாதுகாப்பான பக்க நடைமேடைகளைக் கொண்ட ஒரு தீவு மேடையைக் கொண்டுள்ளது. இதேபோன்ற அமைப்பைக் கொண்ட பிற எம்ஆர்டி நிலையங்கள்:

இந்த நிலையத்தில் இரட்டை வழிதடத்துடன் இரண்டு பாதுகாப்பான பக்க நடைமேடைகள்; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகள் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

L2 நடைமேடை பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங் தொடருந்து  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (→) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C வழியாக லெய்சர் மால் மற்றும் எக்கோ செராஸ் மால்
G தரை மட்டம் நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) செராஸ் சாலை

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]

இந்த நிலையத்தில் ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நிலையத்தின் ஊட்டி பேருந்து (Feeder Bus) மையத்திலிருந்து நிலையப் பகுதிக்குள் உள்ள நுழைவாயில் A வழியாக ஊட்டி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A கினபாலு சாலை பேருந்து முனையம், தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம், தாமான் சன்தெக் சாலை

பேருந்து சேவைகள்

[தொகு]
தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி
T413 [4] தாமான் சன்தெக் எம்ஆர்டி தாமான் கெமசகாயா / தாமான் செரி முஜுர் தாமான் சன்தெக் சாலை / பத்து 9 செராஸ்

பிற பேருந்து சேவைகள்

[தொகு]

தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் வேறு சில பேருந்து சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

இந்த பேருந்து நிறுத்தம் ஜாலான் தாமான் சன்தெக் - ஜாலான் கிஜாங் போக்குவரத்து விளக்கு சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது; நிலையத்தை அடைய சுமார் 500 மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம்
பேருந்து இயக்குநர் தொடக்கம் இலக்கு பயணவழி குறிப்புகள்
450 [5] ரேபிட் கேஎல் காஜாங் நிறுத்தம் லெபோ புடு நிறுத்தம் ரெக்கோ சென்ட்ரல்; காஜாங் நகரம்

 KG34  காஜாங் அரங்கம்
 KG33  சுங்கை ஜெர்னே
 KG31  புக்கிட் டுக்குங்
செராஸ்–காஜாங் விரைவுச்சாலை
 KG27  தாமான் சன்தெக்
 KG26  தாமான் கோனாட்
 KG24  தாமான் மிடா
 KG22  AG13  மலூரி நிலையம்

(→) கோலாலம்பூர் - காஜாங்
T406 [6] ரேபிட் கேஎல் தாமான் கோத்தா செராஸ் 1 (பத்து 10 செராஸ் பேருந்து நிறுத்தம்) பாங்சுன், உலு லங்காட் / சுங்கை லூய்  KG28  செரி ராயா

செராஸ்–காஜாங் விரைவுச்சாலை
 KG27  தாமான் சன்தெக்

பாங்சுன் - சுங்கை லூய் ஆகிய இடங்களுக்கு தனித்தனியாக பேருந்துகள்

காட்சியகம்

[தொகு]

தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் (2023)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy. 
  2. "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html. 
  3. "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). Thestar.com.my. 2017-07-17. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/. 
  4. "Taman Suntex MRT Feeder Bus T413 | mrt.com.my". mrt.com.my. Retrieved 2021-01-13.
  5. "Line Route 450 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2020-12-31.
  6. "Line Route T406 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2021-01-13.

வெளி இணைப்புகள்

[தொகு]